![](pmdr0.gif)
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம் - யுத்த காண்டம்
இரண்டாம் பகுதி /படலங்கள் 10-15
rAmAyaNam of kampar
canto 6 (yutta kAnTam), part 2
(paTalams 10-15, verses 6987-7761)
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany for
providing us with a romanized transliterated version of this work and for permissions
to publish the equivalent Tamil script version in Unicode encoding
We also thank Mr. S. Govindarajan for proof-reading the Tamil script version
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2016.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are :
http://www.projectmadurai.org/
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம் - யுத்த காண்டம் (பகுதி 2) /படலங்கள் 10-15-
6.10 இராவணன் வானரத் தானை காண் படலம் (6987 -7021) |
6.11 மகுட பங்கப் படலம் (7022-7072) |
6.12 அணி வகுப்புப் படலம் (7073 - 7100) |
6.13 அங்கதன் தூதுப் படலம் (7101-7143) |
6.14 முதற் போர் புரி படலம் (7144- 7398 ) |
6.15 கும்பகருணன் வதைப் படலம் (7399-7761) |
6.10 இராவணன் வானரத் தானை காண் படலம் (6987- 7021 )
6987. கவடு உகப் பொருத காய்களிறு அன்னான்
அவள் துயக்கின் மலர் அம்பு உற வெம்பும்
சுவடுடைப் பொருவு இல் தோள்கொடு அனேகம்
குவடுடைத் தனி ஒர் குன்று என நின்றான். 6.10.1
6988. பொலிந்த தாம் இனிது போர் எனலோடும்
மலிந்த நங்கை எழிலால் வலி நாளும்
மெலிந்த தோள்கள் வடமேருவின் மேலும்
வலிந்து செல்ல மிசை செல்லும் மனத்தான். 6.10.2
6989. செம் பொன் மௌலி சிகரங்கள் தயங்க
அம்பொன் மேரு வரை கோபுரம் ஆக
வெம்பு காலினை விழுங்கிட மேல் நாள்
உம்பர் மீது நிமிர் வாசுகி ஒத்தான். 6.10.3
6990. தொக்க பூதம் அவை ஐந்தொடு துன்னிட்டு
ஒக்க நின்ற திசை ஒன்பதொடு ஒன்றும்
பக்கமும் நிழல் பரப்பி வியப்பால்
மிக்கு நின்ற குடை மீது விளங்க. 6.10.4
6991. கைத் தரும் கவரி விசிய காலால்
நெய்த்து இருண்டு உயரும் நீள்வரை மீதில்
தத்தி வீழும் அருவித் திரள் சாலும்
உத்தரீகம் நெடு மார்பின் உலாவ. 6.10.5
6992. வானகத்து அமுது உருப்பசி வாசத்
தேன் அகத் திரு திலோத்தமை செவ்வாய்
மேனகைக் குயிலின் மென்மையர் யாரும்
சானகிக்கு அழகு உகுத்து அயல் சார. 6.10.6
6993. வீழியின் கனி இதழ் பணை மென் தோள்
ஆழி வந்த அர மங்கையர் ஐஞ்ஞூற்று
ஏழ் இரண்டினின் இரண்டு பயின்றோர்
சூழ் இரண்டு புடையும் முறை சுற்ற. 6.10.7
6994. முழை படிந்த பிறை முள் எயிறு ஒள்வாள்
இழை படிந்த இள வெண்ணிலவு ஈன
குழை படிந்தது ஒரு குன்றில் முழங்கா
மழை படிந்தனைய தொங்கல் வயங்க. 6.10.8
6995. ஓத நூல்கள் செவியின் வழி உள்ளம்
சீதை சீதை என ஆர் உயிர் தேய
நாத வீணை இசை நாரதர் பாட
வேத கீத அமிழ்து அள்ளி விழுங்க. 6.10.9
6996. வெங்கரத்தர் அயில் வாளினர் வில்லோர்
சங்கரற்கும் வலி சாய்வு இல் வலத்தோர்
அங்கு அரக்கர் சதகோடி அமைந்தோர்
பொங்கு அரத்த விழியோர் புடை சூழ. 6.10.10
6997. கல்லில் அம் கை உலகம் கவர்கிற்போர்
நல் இலங்கை முதலோர் நவை இல்லோர்
சொல்லில் அங்கு ஒர் சத கோடி தொடர்ந்தோர்
வில் இலங்கு படையோர் புடை விம்ம. 6.10.11
6998. பார் இயங்குநர் விசும்பு பரந்தோர்
வார் இயங்கு மழையின் குரல் மானும்
பேரி அம் கண் முருடு ஆகுளி பெட்கும்
தூரியம் கடலின் நின்று துவைப்ப. 6.10.12
6999. நஞ்சும் அஞ்சும் விழி நாகியர் நாணி
வஞ்சி அஞ்சும் இடை விஞ்சையர் வானத்து
அம்சொல் இன்சுவை அரம்பையரோடும்
பஞ்சமம் சிவணும் இன் இசை பாட. 6.10.13
7000. நஞ்சு கக்கி எரி கண்ணினர் நாமக்
கஞ்சுகத்தர் கதை பற்றிய கையர்
மஞ்சு உகக் குமுறு சொல்லினர் வல்வாய்க்
கிஞ்சுகத்தர் கிரி ஒத்தனர் சுற்ற. 6.10.14
7001. கூய் ப்ப குலமால் வரையேனும்
சாய் ப்ப அரியவாய தடந்தோள்
வாய் த்த கலவைக் களி வாசம்
வேய் ப்பது என வந்து விளம்ப. 6.10.15
7002. வேத்திரத்தர் எரி வீசி விழிக்கும்
நேத்திரத்தர் இறை நின்றுழி நில்லாக்
காத்திரத்தர் மனை காவல் விரும்பும்
சூத்திரத்தர் பதினாயிரர் சுற்ற. 6.10.16
இராவணன் இராமனைக் காணுதல்
7003. தோரணத்த மணி வாயில் மிசை சூல்
நீர் அணைத்த முகில் ஆம் என நின்றான்
ஆரணத்தை அரியை மறை தேடும்
காரணத்தை நிமிர் கண்கொடு கண்டான். 6.10.17
இராவணன் கோபங் கொள்ளுதலும் தீநிமித்தம் தோன்றுதலும்
7004. மடித்த வாயினன்; வழங்கு எரி வந்து
பொடித்து இழிந்த விழியன்; அது போழ்தின்
இடித்த வன்திசை; எரிந்தது நெஞ்சம்;
துடித்த கண்ணினொடு இடத் திரள் தோள்கள். 6.10.18
இராமனைக்கண்ட இராவணன் வெகுளுதல்
7005. ஆக ராகவனை அவ் வழி கண்டான்;
மாக ராக நிறை வாள் ஒளியோனை
ஏக ராசியினின் எய்த எதிர்க்கும்
வேக ராகு என வெம்பி வெகுண்டான். 6.10.19
இராவணன் வினாவும், சாரனது விடையும் (7006-7020)
7006. ‘ஏனையோன் இவன் இராமன் எனத் தன்
மேனியே செய்கின்றது; வென்றிச்
சேனை வீரரையும் தரெிக்(க) ‘என்று
தான் வினாவ எதிர் சாரன் விளம்பும். 6.10.20
7007. ‘இங்கு இவன் “படை இலங்கையர் மன்னன்
தங்கை “ என்னலும் முதிர்ந்த சலத்தால்
அங்கை வாள்கொடு அவள் ஆகம் விளங்கும்
கொங்கை நாசி செவி கொய்து குறைத்தான். 6.10.21
7008. ‘அறக்கண் அல்லது ஒரு கண் இலன் ஆகி
நிறக் கருங் கடலுள் நேமியின் நின்று
துறக்கம் எய்தியவரும் துறவாத
உறக்கம் என்பதனை ஓட முனிந்தான். 6.10.22
7009. ‘கை அவன் தொட அமைந்த கரத்தான்
ஐய! வாலியொடு இவ் அண்டம் நடுங்கச்
செய்த வன்செருவினில் திகழ்கின்றான்
வெய்யவன் புதல்வன்; யாரினும் வெய்யான். 6.10.23
7010. ‘தந்தை மற்றை அவன் சார்வு இல வலத்தோன்;’
அந்தரத்தர் அமுது ஆர்கலி காண
மந்தரத்தினொடும் வாசுகியோடும்
சுந்தரப் பெரிய தோள்கள் திரித்தான். 6.10.24
7011. ‘நடந்து நின்றவன் நகும் கதிர் முன்பு
தொடர்ந்தவன்; உலகு சுற்றும் எயிற்றின்
இடந்து எழுந்தவனை ஒத்தவன்; வேலை
கடந்தவன் சரிதை கண்டனை அன்றே. 6.10.25
7012. ‘நீலன் நின்றவன் நெருப்பின் மகன்; திண்
சூலமும் கயிறும் இன்மை துணிந்தும்
ஆலம் உண்டவன் அடும் திறல் மிக்கான்
காலன் என்பர் இவனைக் கருதாதார். 6.10.26
7013. ‘வேறாக நின்றான், நளன் என்னும் விலங்கல் அன்னான்;
ஏறா வருணன் வழி தந்திலன் என்று இராமன்
சீறாத உள்ளத்து எழுசீற்றம் உகுத்த செந்தீ
ஆறாத முன்னம், அகன் வேலையை ஆறு செய்தான். 6.10.27
7014. முக் காலமும் மொய்ம் மதியால் முறையின் உணர்வான்,
புக்கு ஆலம் எழப் புணரிப் புலவோர் கலக்கும்
அக்காலம் உள்ளான், கரடிக்கு அரசு ஆகி நின்றான்,
இக்காலம் நின்றும் உலகு ஏழும் எடுக்க வல்லான். 6.10.28
7015. ‘சேனாபதிதன் அயலே, இருள் செய்த குன்றின்
ஆனா மருங்கே, இரண்டு ஆடகக் குன்றின் நின்றார்,
ஏனோரில் இராமன் இலக்குவன் என்னும் ஈட்டார்;
வானோர்தம் மருத்துவர் மைந்தர், வலிக்கண் மிக்கார். 6.10.29
7016. ‘உவன் காண் குமுதன்; குமுதாக்கனும் ஊங்கு அவன் காண்;
இவன் காண் கவையன்; கவயாக்கனும் ஈங்கு இவன் காண்;
சிவன் காண் அயன் காண் எனும் தூதனைப் பெற்ற செல்வன்
அவன் காண், நெடுங்கேசரி என்பவன், ஆற்றல் மிக்கான். 6.10.30
7017. ‘முரபன், நகுதோளவன், மூரி மடங்கல் என்னக்
கரபல் நகம் அன்னவை மின் உகக் காந்துகின்றான்;
வர பல் நகம் தன்னையும் வேரொடு வேண்டின் வாங்கும்
சரபன் அவன்; இவன் சதவலி ஆய தக்கோன். 6.10.31
7018. ‘மூன்று கண் இலன் ஆயினும் மூன்று எயில் எரித்தோன்
போன்று நின்றவன் பனசன்; இப் போர்க்கு எலாம் தானே
ஏன்று நின்றவன் இடபன்; மற்று இவன் தனக்கு எதிரே
தோன்றுகின்றவன் சுசேடணன், அறிவொடு தொடர்ந்தோன். 6.10.32
7019. ‘வெதிர்கொள் குன்று எலாம் வேரொடும் வாங்கி, மேதினியை
முதுகு நொய்து எனச் செய்தவன், கனலையும் முனிவோன்,
கதிரவன் மகற்கு இட மருங்கே நின்ற காளை
ததிமுகன், அவன், சங்கன் என்று க்கின்ற சிங்கம். 6.10.33
7020. ‘அண்ணல்! கேள்; இதற்கு அவதியும் அளவும் ஒன்று உளதோ?
விண்ணின் மீனினைக் குணிப்பினும், வேலையின் மீனை
எண்ணி நோக்கினும், இக்கடல் மணலினை எல்லாம்
கண்ணி நோக்கினும், கணக்கிலது ‘ என்றனன் காட்டி. 6.10.34
இச்சேனைகள் நம்மை என் செய்யும் ‘என இராவணன் புன்னகை புரிதல்
7021. சினங்கொள் திண்திறல் அரக்கனும், சிறுநகை செய்தான்,
‘புனம்கொள் புன்தலைக் குரங்கினைப் புகழுதி போலாம்;
வனங்களும் படர் வரைதொறும் திரிதரு மானின்
இனங்களும் பல என் செயும், அரியினை? ‘என்றான். 6.10.35
----------------
6.11 மகுட பங்கப் படலம்
சேனையைக் காணுமாறு கோபுரத்தின்மீதுள்ள அரக்கர்களை இன்னின்னாரென்று தரெிவி ‘என்று இராமன் வீடணனைக் கேட்டல்
7022. என்னும் வேலையின், இராவணற்கு இளவலை, இராமன்
‘கன்னி மாமதில் நகர் நின்று நம் வலி காண்பான்
முன்னி, வானகம் மூடி நின்றார்களை, முறையால்
இன்ன நாமத்தர், இனையர் என்று இயம்புதி ‘என்றான். 6.11.1
வீடணன் இராவணனைக் காட்டுதல்
7023. ‘நாறு தன் குலக் கிளை எலாம் நரகத்து நடுவான்
சேறு செய்து வைத்தான், உம்பர் திலோத்தமை முதலாக்
கூறு மங்கையர் குழாத்திடைக் கோபுரக் குன்றத்து
ஏறி நின்றவன், புன்தொழில் இராவணன் ‘என்றான். 6.11.2
இராவணன்மேல் சுக்கிரீவன் பாய்தல்
7024. கருதி மற்றொன்று கழறுதல் முனம் விழிக் கனல்கள்
பொருது புக்கன முந்துற, சூரியன் புதல்வன்
சுருதி அன்னவன், ‘சிவந்த நல்கனி ‘என்று சொல்ல,
பருதி மேல் பண்டு பாய்ந்தவன் ஆமென, பாய்ந்தான். 6.11.3
இராவணன்மேல் பாய்ந்த சுக்கிரீவனது தோற்றம் (7025-7026)
7025. சுதையத்து ஓங்கிய சுவேலத்தின் உச்சியைத் துறந்து,
சிதையத் திண்திறல் இராவணக் குன்றிடைச் சென்றான்,
ததையச் செங்கரம் பரப்பிய தன் பெருந்தாதை
உதயக் குன்றின் நின்று உகு குன்றில் பாய்ந்தவன் ஒத்தான். 6.11.4
7026. பள்ளம் போய்ப் புகும் புனல் எனப் படியிடைப் படிந்து
தள்ளும் பொன் கிரி சலிப்புறக் கோபுரம் சார்ந்தான்,
வெள்ளம் போல் கண்ணி அழுதலும், இராவணன் மேல் தன்
உள்ளம் போல் செலும் கழுகினுக்கு அரசனும் ஒத்தான். 6.11.5
அரம்பையரும் பிறரும் நிலைகெட்டு ஓடுதல்
7027. கரிய கொண்டலை, கருணை அம் கடலினைக் காணப்
பெரிய கண்கள் பெற்று உவக்கின்ற அரம்பையர், பிறரும்,
உரிய குன்றிடை உரும் இடி வீழ்தலும், உலைவுற்று
இரியல் போயின மயில் பெருங் குலம் என இரிந்தார். 6.11.6
சுக்கிரீவன் இராவணன் முன்னே சென்று நிற்றல்
7028. கால இருள் சிந்து கதிரோன் மதலை கண்ணுற்று
ஏல எதிர்சென்று அடல் இராவணனை எய்தி
நீலமலை முன் கயிலை நின்றது என நின்றான்;
ஆலவிடம் அன்று வர நின்ற சிவன் அன்னான். 6.11.7
வந்த காரியம் யாது ‘என வினவிய இராவணனது மார்பிற் சுக்கிரீவன் குத்துதல்
7029. ‘இத்திசையின் வந்த பொருள் என்? ‘என, இயம்பான்,
தத்தி எதிர் சென்று, திசை வென்று உயர் தடந்தோள்
பத்தினொடு பத்துடையவன் உடல் பதைப்ப,
குத்தினன் உரத்தில், நிமிர் கைத் துணை குளிப்ப. 6.11.8
இராவணன் இருபது கைகளாலும் சுக்கிரீவனைத்
தாக்குதல்
7030. திருகிய சினத்தொடு செறுத்து எரி விழித்தான்
ஒருபது திசைக்கணும் ஒலித்த ஒலி ஒப்ப
தரு வனம் எனப் புடை தழைத்து உயர் தடக்கை
இருபதும் எடுத்து உரும் இடித்தனெ அடித்தான். 6.11.9
இராவணனைச் சுக்கிரீவன் உதைத்தல்
7031. அடித்த விரல் பட்ட உடலத்துழி இரத்தம்
பொடித்து எழ உறுக்கி எதிர் புக்கு உடல் பொருந்தி
கடித்த விசையின் கடிது எழுந்து கதிர் வேலான்
முடித் தலைகள் பத்தினும் முகத்தினும் உதைத்தான். 6.11.10
சுக்கிரீவனை இராவணன் தலத்திலிட்டுத் துகைத்தல்
7032. உதைத்தவன் அடித்துணை பிடித்து ஒரு கணத்தில்
பதைத்து உலைவு உற பலதிறத்து இகல் பரப்பி
மதக் கரியை உற்று அரி நெரித்து என மயக்கி
சுதைத் தலன் இடை கடிது அடிக்கொடு துகைத்தான். 6.11.11
சுக்கிரீவன் இராவணனை அமுக்கி அவன் இரத்தத்தைக் குடித்தல்
7033. துகைத்தவன் உடல் பொறை சுறுக்கொள இறுக்கி,
தகைப்(ப)அரு வலத்தொடு தலத்திடை அமுக்கி,
வகைப் பிறை நிறத்து எயிறுடைப் பொறி வழக்கின்
குகைப் பொழி புதுக் குருதி கைக்கொடு குடித்தான். 6.11.12
இராவணன் சுக்கிரீவனைப் பற்றி எடுத்துச் சுழற்றுதல்
7034. கைக் கொடு குடித்தவன் உடல் கனக வெற்பை
பைக் கொடு விடத்து அரவு எனப் பல கை பற்றி
மைக் கடு நிறத்தவன் மறத்தொடு புறத்தில்
திக்கொடு பொருப்பு உற நெருப்பொடு திரித்தான். 6.11.13
இராவணனைச் சுக்கிரீவன் அகழியில் தள்ளுதல்
7035. திரித்தவன் உரத்தின் உகிர் செற்றும் வகை குத்தி
பெருத்து உயர் தடக் கைகொடு அடுத்து இடை பிடித்து
கருத்து அழிவுறத் திரி திறத்து எயில் கணத்து அன்று
எரித்தவனை ஒத்தவன் எடுத்து அகழி இட்டான். 6.11.14
இராவணன் சுக்கிரீவனை அகழியில் தள்ள அவ்விருவரும் ஒருசேர அகழியில் வீழ்தல்
7036. இட்டவனை இட்ட அகழில் கடிதின் இட்டான்
தட்ட உயரத்தின் நிமிரும் தச முகத்தான்;
ஒட்ட உடனே அவனும் வந்து அவனை உற்றான்;
விட்டிலர் புரண்டு இருவர் ஓர் அகழின் வீழ்ந்தார். 6.11.15
சுக்கிரீவன் இராவணன் இருவரும் மற்போர் புரிதல் (7037-7046)
7037. விழுந்தனர், சுழன்றனர்; வெகுண்டனர், திரிந்தார்;
அழுந்தினர், அழுந்திலர்; அகன்றிலர். அகன்றார்;
எழுந்தனர், எழுத்திலா; எதிர்ந்தனர், முதிர்ந்தார்;
ஒழிந்தனர், ஒழிந்திலர்; உணர்ந்திலர்கள், ஒன்றும். 6.11.16
7038. அந்தர அருக்கன் மகன் ஆழி அகழ் ஆக
சுந்தரம் உடைக் கரம் வலிப்ப ஒர் சுழி பட்டு
எந்திரம் எனத் திரி இரக்கம் இல் அரக்கன்
மந்தரம் என கடையும் வாலியையும் ஒத்தான். 6.11.17
7039. ஊறுபடு செம்புனல் உடைந்து அகழை உற்ற
ஆறு படர்கின்றன எனப் படர அன்னார்
பாறு பொருகின்றன பரந்தவை எனப் போய்
ஏறினர் விசும்பிடை; இரிந்த உலகு எல்லாம். 6.11.18
7040. தூர நெடு வானின் மலையும் சுடரவன் சேய்
காரினொடு மேரு நிகர் காய் சின அரக்கன்
தாருடைய தோள்கள் பலவும் தழுவ நின்றான்;
ஊரினொடு கோள் கதுவு தாதையையும் ஒத்தான். 6.11.19
7041. பொங்கு அமர் விசும்பிடை உடன்று பொரு போழ்தில்
செங் கதிரவன் சிறுவனைத் திரள் புயத்தால்
மங்கல வயங்கு ஒளி மறைத்த வல் அரக்கன்
வெங் கதிர் கரந்தது ஒரு மேகம் எனல் ஆனான். 6.11.20
7042. நூபுர மடந்தையர் கிடந்து அலற நோனார்
மாபுரம் அடங்கலும் இரிந்து அயர வன் தாள்
மீபுர மடங்கல் என வெங் கதிரவன் சேய்
கோபுரம் அடங்க இடிய தனி குதித்தான். 6.11.21
7043. ஒன்று உற விழுந்த உருமைத் தொடர ஓடா
மின்தரெி எயிற்றின் ஒரு மேகம் விழும் என்ன
‘தின்றிடுவன் ‘என்று எழு சினத் திறல் அரக்கன்
பின் தொடர வந்து இரு கரத் துணை பிடித்தான். 6.11.22
7044. வந்தவனை நின்றவன் வலிந்து எதிர் மலைந்தான்
அந்தகனும் அஞ்சிட நிலத்திடை அரைத்தான்;
எந்திரம் எனக் கடிது எடுத்து அவன் எறிந்தான்;
கந்துகம் எனக் கடிது எழுந்து எதிர் கலந்தான். 6.11.23
7045. படிந்தனர் பரந்தனர் பரந்தது ஒர் நெருப்பின்
கொடுஞ் சினம் முதிர்ந்தனர் உரத்தின் மிசை குத்த
நெடுஞ் சுவர் பிளந்தன; நெரிந்த நிமிர் குன்றம்;
இடிந்தன தகர்ந்தன இலங்கை மதில் எங்கும். 6.11.24
7046. செறிந்து உயர் கறங்கு அனையர் மேனிநிலை தேரார்,
பிறிந்தனர் பொருந்தினர் எனத் தரெிதல் பேணார்,
எறிந்தனர்கள், எய்தினர்கள் இன்னர் என, முன் நின்று
அறிந்திலர் அரக்கரும்; அமர்த்தொழில் அயர்ந்தார். 6.11.25
சுக்கிரீவன் வரக் காணாது இராமன் தளர்ந்து சாய்தல்
7047. இன்னது ஓர் தன்மை எய்தும் அளவையின், எழிலி வண்ணன்,
மன்னுயிர் அனைய காதல் துணைவனை வரவு காணான்,
‘உன்னிய கருமம் எல்லாம் உன்னொடு முடிந்த ‘என்னா,
தன் உணர்வு அழிந்து, சிந்தை அலம்வந்து தளர்ந்து, சாய்ந்தான். 6.11.26
இராமன் வருந்திப் புலம்புதல் (7048-7052)
7048. ‘ஒன்றிய உணர்வே ஆய ஓர் உயிர்த் துணைவ! உன்னை
இன்றி யான் உளனாய் நின்று, ஒன்று இயற்றுவது இயைவது அன்றால்;
அன்றியும் துயரத்து இட்டாய், அமரரை; அரக்கர்க்கு எல்லாம்
வென்றியும் கொடுத்தாய், என்னைக் கெடுத்தது உன் வெகுளி ‘என்றான். 6.11.27
7049. ‘தயெ்வ வெம்படையும், தீரா மாயமும், வல்ல தீயோன்
கையிடைப் புக்காய்; நீ வேறு எவ் வணம் கடத்தி, காவல்?
வையம் ஓர் ஏழும் பெற்றால் வாழ்வெனே? வாராய் ஆகின்,
உய்வனே? தமியனேனுக்கு உயிர் தந்த உதவியோனே! 6.11.28
7050. ‘ஒன்றாக நினைய ஒன்றாய் விளைந்தது என் கருமம்; அந்தோ!
என்றானும் யானோ வாழேன். ‘நீ இலை ‘எனவும் கேளேன்;
இன்று ஆய பழியும் நிற்க, நெடுஞ் செருக்களத்தில் என்னைக்
கொன்றாய் நீ அன்றோ? நின்னைக் கொல்லுமேல் குணங்கள் தீயோன். 6.11.29
7051. ‘இறந்தனை என்ற போதும் இருந்து யான், அரக்கர் என்பார்
திறம்தனை உலகின் நீக்கி, பின் உயிர் தீர்வெனேனும்,
“புறந்தரும் பண்பின் ஆய உயிரொடும் பொருந்தினானை
மறந்தனன், வலியன் ‘‘ என்பார்; ஆதலால் அதுவும் மாட்டேன். 6.11.30
7052. ‘அழிவது செய்தாய், ஐய! அன்பினால் அளியத் தேனுக்கு
ஒழிவு அரும் உதவி செய்த உன்னை யான் ஒழிய வாழேன்;
எழுபது வெள்ளம் தன்னின் ஈண்டு ஒர்பேர் எஞ்சாது ஏகிச்
செழுநகர் அடைந்த போதும், இத் துயர் தீர்வது உண்டோ? 6.11.31
சுக்கிரீவன் இராவணன் அவமானம் அடைய அவனது முடிமணிகளைப் பறித்துக்கொண்டு இராமனையடைதல்
7053. என்று அவன் இரங்கும் காலத்து, இருவரும் ஒருவர் தம்மில்
வென்றிலர் தோற்றிலாராய் வெஞ்சமம் விளைக்கும் வேலை,
வன்திறல் அரக்கன் மௌலி மணிகளை வலியின் வாங்கி,
‘பொன்றினென் ஆகின் நன்று ‘என்று, அவன் வெள்க, இவனும் போந்தான். 6.11.32
சுக்கிரீவன் தான் கொணர்ந்த மணிகளை இராமபிரான் திருவடியில் வைத்து வணங்குதல்
7054. கொழு மணி முடிகள் தோறும் கொண்ட நல் மணியின் கூட்டம்
அழுது அயர்வுறுகின்றான்தன் அடித்தலம் அதனில் சூட்டி,
தொழுது, அயல் நாணி நின்றான்; தூயவர் இருவரோடும்
எழுபது வெள்ளம் யாக்கைக்கு ஓர் உயிர் எய்திற்று அன்றே. 6.11.33
இராமன் சுக்கிரீவனை மார்புறத் தழுவிக் கண்ணீர் சொரிதல்
7055. என்பு உறக் கிழிந்த புண்ணின் இழி பெருங் குருதியோடும்
புன்புலத்து அரக்கன்தன்னைத் தீண்டிய தீமை போக,
அன்பனை அமரப் புல்லி, மஞ்சனம் ஆட்டி விட்டான்,
தன்பெரு நயனம் என்னும் தாமரை சொரியும் நீரால். 6.11.34
சுக்கிரீவனை நோக்கி இராமபிரான் கூறுதல் (7056-7059)
7056. ‘ஈர்கின்றது அன்றே, என்றன் உள்ளத்தை; இங்கும் அங்கும்
பேர்கின்றது ஆவி; யாக்கை பெயர்கின்றது இல்லை; பின்னை,
தேர்கின்ற சிந்தை அன்றோ திகைத்தனை? ‘என்று, ‘தெள் நீர் ‘
சோர்கின்ற அருவிக் கண்ணான் துணைவனை நோக்கிச் சொல்லும் : 6.11.35
7057. ‘கல்லினும் வலிய தோளாய்! நின்னை அக் கருணை இல்லோன்
கொல்லுதல் செய்தான் ஆகின், கொடுமையால் குற்றம் பேணி,
பல்பெரும் பகழி மாரி வேரொடும் பறிய நூறி,
வெல்லினும், தோற்றேன் யானே அல்லனோ, விளிந்திலாதேன்? 6.11.36
7058. ‘பெருமையும் வன்மை தானும், பேர் எழில் ஆண்மை தானும்,
ஒருமையின் உணர நோக்கின், பொறையினது ஊற்றம் அன்றே!
அருமையும் அடர்ந்து நின்ற பழியையும் அயர்த்தாய் போல,
இருமையும் கெடுத்தாய் அன்றே? என் நினைந்து என் செய்தாய் நீ? 6.11.37
7059. ‘இந் நிலை விரைவின் எய்தாது, இத்துணை தாழ்த்தி ஆயின்,
நல் நுதல் சீதையால் என்? ஞாலத்தால் பயன் என்? நம்பி!
உன்னை யான் தொடர்வென்; என்னைத் தொடரும் இவ் உலகம்; என்றால்,
பின்னை என், இதனைக் கொண்டு? விளையாடி, பிழைப்ப செய்தாய்! ‘ 6.11.38
சுக்கிரீவன் தான் இராவணனைக் கொன்று சீதையைச் சிறை மீட்டு வாராததன் செயலறவு தோன்ற வருந்திக் கூறுதல் (7060-7063)
7060. ‘காட்டிலே கழுகின் வேந்தன் செய்தன காட்ட மாட்டேன்;
நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்க மாட்டேன்;
கேட்டிலே நின்று கண்டு, கிளிமொழி மாதராளை
மீட்டிலேன்; தலைகள் பத்தும் கொணர்ந்திலேன், வெறுங்கை வந்தேன். ‘ 6.11.39
7061. ‘வன்பகை நிற்க, எங்கள் வானரத் தொழிலுக்கு ஏற்ற
புன்பகை காட்டும் யானோ புகழ்ப் பகைக்கு ஒருவன் போலாம்?
என்பகை தீர்த்து என் ஆவி அரசொடும் எனக்குத் தந்த
உன்பகை உனக்குத் தந்தேன்; உயிர் சுமந்து உழலா நின்றேன். ‘ 6.11.40
7062. ‘செம்புக்கும் சிவந்த செங்கண் திசை நிலைக் களிற்றின் சீற்றக்
கொம்புக்கும் குறைந்த அன்றே, என்னுடைக் குரக்குப் புன்தோள்?
“அம்புக்கு முன்பு சென்று உன் அரும்பகை அறுப்பன் “ என்று
வெம்பு உற்ற மனமும், யானும், தீது இன்றி, மீள வந்தேன். 6.11.41
7063. நூல்வலி காட்டும் சிந்தை நுன் பெருந்தூதன், வன்போர்
வேல் வலி காட்டுவார்க்கும், வில்வலி காட்டுவார்க்கும்,
வால்வலி காட்டிப் போந்த வளநகர் புக்கு, மற்று என்
கால்வலி காட்டிப் போந்தேன்; கைவலிக்கு அவதி உண்டோ? 6.11.42
சுக்கிரீவனது வெற்றிச் செயலை வீடணன் வியந்துரைத்தல் (7064-7068)
7064. இன்னன பலவும் பன்னி, இறைஞ்சிய முடியன் நாணி,
மன்னவர் மன்னன் முன்பு, வானர மன்னன் நிற்ப,
அன்னவன் தன்னை நோக்கி, அழகனை நோக்கி, ஆழி
மின் என விளங்கும் பைம்பூண் வீடணன் விளம்பலுற்றான். 6.11.43
7065. ‘வாங்கிய மணிகள், அன்னான் தலைமிசை மௌலி மேலே
ஓங்கிய அல்லவோ? மற்று, இனி அப்பால் உயர்ந்தது உண்டோ?
தீங்கினன் சிரத்தின் மேலும், உயிரினும், சீரிது அம்மா!
வீங்கிய புகழை எல்லாம் வேரொடும் வாங்கி விட்டாய்! 6.11.44
7066. ‘பார் அகம் சுமந்த பாம்பின் பணாமணி பறிக்க வேண்டின்,
வார் கழல் காலினாலே கல்ல வல்லவனை முன்னா,
தார்கெழு மௌலி பத்தின் தனிமணி வலிதின் தந்த
வீரதை, விடை வலோற்கும் முடியுமோ? வேறும் உண்டோ? 6.11.45
7067. ‘கரு மணி கண்டத்தான்தன் சென்னியில் கறை வெண் திங்கள்,
பரு மணிவண்ணன் மார்பின் செம்மணி, பறித்திட்டாலும்
தரு மணி இமைக்கும் தோளாய்! தசமுகன் முடியில் தைத்த
திருமணி பறித்துத் தந்த வென்றியே சீரிது அன்றோ? 6.11.46
7068. ‘தொடி மணி இமைக்கும் தோளாய்! சொல் இனி வேறும் உண்டோ?
வடி மணி வயிர ஒள் வாள் சிவன்வயின் வாங்கிக் கொண்டான்
முடி மணி பறித்திட்டாயோ? இவன் இனி முடிக்கும் வென்றிக்கு
அடி மணி இட்டாய் அன்றே? அரிகுலத்து அரச! ‘என்றான். 6.11.47
இராமனும் சுக்கிரீவனது வெற்றியை வியந்து பாராட்டுதல்
7069. ‘வென்றி அன்று என்றும், வென்றி வீரர்க்கு விளம்பத் தக்க
நன்றி அன்று என்றும் அன்று; நால் நிலம் எயிற்றில் கொண்ட
பன்றி அன்று ஆகில், ஈது ஆர் இயற்றுவார் பரிவின்? ‘என்னா,
‘இன்று இது வென்றி ‘என்று என்று இராமனும் இரங்கிச் சொன்னான். 6.11.48
கதிரவன் மறைதல்
7070. ‘தன் தனிப் புதல்வன், வென்றித் தசமுகன் முடியின் தந்த,
மின் தளிர்த்து அனைய பல்மா மணியினை வெளியில் கண்டான்;
‘ஒன்று ஒழித்து ஒன்று ஆம் ‘என்று, அவ் அரக்கனுக்கு ஒளிப்பான் போல,
வன்தனிக் குன்றுக்கு அப்பால், இரவியும் மறையப் போனான். 6.11.49
இராமன் தன் இருப்பிடத்தை அடைதல்
7071. கங்குல் வந்து இறுத்த காலை, கைவிளக்கு எடுப்ப, காவல்
வெங் கழலரக்கன் மௌலி விளக்கமே விளக்கம் செய்ய,
செங்கதிர் மைந்தன் செய்த வென்றியை நிறையத் தேக்கிப்
பொங்கிய தோளினானும் இழிந்து போய், இருக்கை புக்கான். 6.11.50
தாழ்வுற்ற இராவணன் கோபுரத்தை விட்டிறங்கிச் செல்லுதல்
7072. என்றானும் இனைய தன்மை எய்தாத இலங்கை வேந்தன்,
‘நின்றார்கள் தேவர் கண்டார் ‘ என்பது ஓர் நாணம் நீள,
அன்று ஆயமகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் ஆக,
பொன்றாது பொன்றினான்; தன் புகழ் என இழிந்து, போனான். 6.11.51
-------------------
6.12 அணி வகுப்புப் படலம்
மானத்தால் வருந்திய இராவணன் அரண்மனையில் புகுந்து படுத்தல்
7073. மானத்தால் ஊன்றப் பட்ட மருமத்தான், வதனம் எல்லாம்
கூனல் தாமரையின் தோன்ற, வான் தொடும் கோயில் புக்கான்;
பானத்தான் அல்லன்; தயெ்வப் பாடலான் அல்லன்; ஆடல்
தானத்தான் அல்லன்; மெல்லென் சயனத்தான்; யும் தாரான். 6.12.1
இராவணனது வெய்துயிர்க்கும் தோற்றம்
7074. வை எயிற்றாலும், நேரா மணி இழந்து இரங்கலாலும்,
பை உயிர்த்து அயரும் பேழ் வாய்ப் பல்தலைப் பரப்பினாலும்
மெய்யனை, திரையின் வேலை மென்மலர்ப் பள்ளி ஆன
ஐயனை, பிரிந்து வைகும் அநந்தனே அரக்கர் வேந்தன். 6.12.2
சார்த்தூலன் என்னும் ஒற்றனது வரவினை வாயில் காவலன் இராவணனுக்குத் தரெிவித்தல்
7075. தாயினும் பழகினார்க்கும் தன் நிலை தரெிக்கல் ஆகா
மாய வல் உருவத்தான் முன் வருதலும், வாயில் காப்பான்,
“‘சேயவர் சேனை நண்ணி, செய் திறம் தரெித்தி நீ “ என்று
ஏயவன் எய்தினான் ‘என்று அரசனை இறைஞ்சிச் சொன்னான். 6.12.3
இராவணனது கட்டளையால் உள்ளே சென்ற சார்த்தூலன் பகைவர் திறத்துத்தானறிந்தவற்றை அவனுக்கு எடுத்துரைத்தல்(7076-7079)
7076. ‘அழை ‘என, எய்தி, பாதம் வணங்கிய அறிஞன்தன்னை,
‘பிழை அற அறிந்த எல்லாம் த்தி ‘என்று அரக்கன் பேச,
முழை உறு சீயம் அன்னான் முகத்தினால் அகத்தை நோக்கி,
குழையுறு மெய்யன், பைய, வரன்முறை கூறலுற்றான். 6.12.4
7077. ‘வீரிய! வீரன் ஏவ, பதினெழு வெள்ளத் தோடும்,
மாருதி, மேலை வாயில் உழிஞைமேல் வருவதானான்;
ஆரியன், அமைந்த வெள்ளம் அத்தனையோடும், நெற்றிச்
சூரியன் மைந்தன் தன்னைப் பிரியலன் நிற்கச் சொன்னான். 6.12.5
7078. ‘அன்றியும், பதினேழ் வெள்ளத்து அரியொடும் அரசன் மைந்தன்,
தனெ் திசை வாயில் செய்யும் செரு எலாம் செய்வதானான்;
ஒன்று பத்து ஏழு வெள்ளம் கவியொடும் துணைவரோடும்
நின்றனன், நீலன் என்பான், குணதிசை வாயில் நெற்றி. 6.12.6
7079. ‘இம்பரின் இயைந்த காயும் கனியும் கொண்டு, இரண்டு வெள்ளம்
வெம்பு வெஞ் சேனைக்கு எல்லாம் உணவு தந்து உழலவிட்டான்;
உம்பியை, வாயில் தோறும் நிலை தரெிந்து உணரச் சொன்னான்;
தம்பியும் தானும் நிற்பதாயினான்; சமைவு இது ‘என்றான். 6.12.7
இராவணன் நாளையே பகையினை ஒழிப்பேன் என வெகுண்டுரைத்தல்
7080. சார்த்தூலன் இதனைச் சொல்ல, தழல் சொரி தறுகணானும்
‘பார்த்து ஊழி வடவை பொங்க, படுவது படுமா பார்த்தி;
போர்த் தூளி துடைப்பென், நாளை அவர் உடல் பொறையின் நின்றும்
தேர்த்து ஊறு குருதிதன்னால் ‘ என்றனன், எயிறு தின்னா. 6.12.8
இராவணன் மலரணையை விட்டெழுந்து மந்திராலோசனை மண்டபத்தில் அமர்தல்
7081. மா அணை நீலக் குன்றத்து இளவெயில் வளர்ந்தது என்ன,
தூ அணை குருதிச் செக்கர்ச் சுவடு உறப் பொலிந்த தோளான்,
ஏ அணை வரிவில் காமன் கணைபட எரியா நின்ற
பூ அணை ஆற, வேறு ஓர் புனை மணி இருக்கை புக்கான் 6.12.9
இராவணன் அமைச்சர்களை அழைத்தல்
7082. செய்வன முறையின் எண்ணி, திறத்திறம் உணர்வின் தேர,
மை அறு மரபின் வந்த அமைச்சரை, ‘வருக ‘என்றான்;
பொய் எனப் பளிங்கின் ஆய இருக்கையின் புறத்தைச் சுற்றி,
ஐ இரண்டு ஆய கோடி பேய்க்கணம் காப்பது ஆக்கி. 6.12.10
அமைச்சர்களை நோக்கி இனிச் செய்யத்தக்கது யாது என வினவுதல்
7083. அளந்து அறிவரியர் ஆய அமைச்சரை அடங்க நோக்கி,
‘வளைந்தது குரங்கின் சேனை, வாயில்கள் தோறும் வந்து;
விளைந்தது பெரும்போர் என்று விட்டது; விடாது, நம்மை
உளைந்தனர்; என்ன எண்ணி? என் செயற்கு உரிய? ‘என்றான். 6.12.11
நிகும்பன் கூறுதல் (7084-7085)
7084. ‘எழுபது வெள்ளத்து உற்ற குரக்கினம் எயிலை முற்றும்
தழுவின என்று செய்யத் தக்கது சமைதி போலாம்;
அழுவ நீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே?
உழிஞையைத் துடைக்க, நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர். ‘ 6.12.12
7085. ‘எழு, மழு, தண்டு, வேல், வாள், இலை நெடுஞ் சூலம், என்று இம்
முழுமுதற் படைகள் ஏந்தி, இராக்கதர் முனைந்த போது,
தொழுது தம் படைகள் முன் இட்டு, ஓடுவார் சுரர்கள் என்றால்,
விழுமிது, குரங்கு வந்து வெறும் கையால் கொள்ளும் வென்றி. 6.12.13
மாலி கூறுதல் (7086-7088)
7086. ‘ஈது இவண் நிகழ்ச்சி ‘என்னா, எரி விழித்து, இடியின் நக்கு,
பூதலத்து அடித்த கையன், நிகும்பன் என்று ஒருவன் பொங்க,
‘வேதனைக் காமம் அந்தோ வேரொடும் கெடுத்தது ‘என்னா,
மாதுலத் தலைவன் பின்னும் அன்பின் ஓர் மாற்றம் சொன்னான். 6.12.14
7087. புக்கு எரிமடுத்து, இவ் ஊரைப் பொடி செய்து போயினாற்குச்
சக்கரம் உண்டோ, கையில்? தசமுகன் தலைகள் ஆன
இக் கிரி பத்தின் மௌலி இனமணி இடந்து கொண்ட
சுக்கிரிவற்கும் உண்டோ, சூலமும் வாளும் வேலும்? 6.12.15
7088. ‘தொடைக் கலந்து இராமன் வாளி தோன்றுதல் முன்னம், தோன்றா
இடைக்கு அலமருதல் செய்யும் முலையினாள் தன்னை ஈந்து,
படைக்கலம் உடைய நாம், அப் படை இலாப் படையை, ஈண்ட
அடைக்கலம் புகுவது அல்லால், இனிப் புகும் அரணும் உண்டோ? 6.12.16
இராவணன் மாலியைக் கடிந்துரைக்க, அவன் ஒன்றும் பேசாது அடங்குதல்
7089. என்புழி மாலிதன்னை எரி எழ நோக்கி, ‘என்பால்
வன்பழி தருதி போலாம்; வரன்முறை அறியா வார்த்தை,
அன்பு அழி சிந்தை தன்னால் அடாதன அறையல் ‘என்றான்,
பின்பழி எய்த நின்றான்; அவன் பின்னைப் பேச்சு விட்டான். 6.12.17
இராவணன் தன் சேனைகளை அணிவகுத்து நாற்றிசை வாயில்களையும் காத்து நிற்கப் பணித்தல் (7090-7094)
7090. ‘காட்டிய கால கேயர் கொழு நிணக் கற்றை காலத்
தீட்டிய படைக்கை வீரச் சேனையின் தலைவ! தெள்ளி
ஈட்டிய அரக்கர் தானை இருநூறு வெள்ளம் கொண்டு,
கீழ்த்திசை வாயில் நிற்றி, நின் பெரும் கிளையினோடும். ‘ 6.12.18
7091. ‘காலன் தன் களிப்புத் தீர்த்த மகோதரக் காளையே! போய்,
மால் ஒன்றும் மனத்து வீர மாபெரும் பக்கனோடுங்
கூலம் கொள் குரங்கை எல்லாம் கொல்லுதி வெள்ளம் ஆன
நால் ஐம்பதோடும் சென்று நமன் திசை வாயில் நண்ணி. 6.12.19
7092. ‘ஏற்றம் என், சொல்லி? வல்வில் இந்திரன் பகைஞ! அந்நாள்
காற்றினுக்கு அரசன் மைந்தன் கடுமை நீ கண்டது அன்றே?
நூற்று இரண்டு ஆய வெள்ள நுன் பெரும் படைஞர் சுற்ற,
மேல் திசை வாயில் சேர்தி விடிவதன் முன்னம் வீர! 6.12.20
7093. ‘இந் நெடுங் காலம் எல்லாம் இமையவர்க்கு இறுதி கண்டாய்;
புன் நெடுங் குரங்கின் சேறல் புல்லிது; புகழும் அன்றால்;
அந் நெடு மூலத் தானை அதனொடும் அமைச்சரோடும்
தொல் நெடு, நகரி காக்க விருபாக்க! ‘என்னச் சொன்னான். 6.12.21
7094. ‘கடகரி, புரவி, ஆள், தேர் கமலத்தோன் உலகுக்கு இப்பால்
புடை உள பொருது கொண்டு போர் பெறாப் பொங்குகின்ற
இடை இடை மிடைந்த சேனை இருநூறு வெள்ளம் கொண்டு,
வடதிசை வாயில் காப்பேன் யான் ‘என வகுத்து விட்டான். 6.12.22
கங்குல் நீங்கிப் பொழுது புலர்தல்
7095. கலங்கிய கங்குல் ஆகி நீங்கிய கற்பம், காணும்
நலம் கிளர் தேவர்க்கேயோ, நான்மறை முனிவர்க்கேயோ,
பொலம் கெழு சீதைக்கேயோ, பொருவலி இராமற்கேயோ,
இலங்கையர் வேந்தற்கேயோ, எல்லார்க்கும் செய்தது இன்பம். 6.12.23
கதிரவன் தோற்றம்
7096. அளித்தகவு இல்லா, ஆற்றல் அமைந்தவன் கொடுமை அஞ்சி,
வெளிப்படல் அரிது என்று உன்னி, வேதனை உழக்கும் வேலை,
களித்தவர் களிப்பு நீக்கி, காப்பவர் தம்மைக் கண்ணுற்று
ஒளித்தவர் வெளிப்பட்டு என்ன, கதிரவன் உதயம் செய்தான். 6.12.24
வானர சேனைகள் இலங்கையின் வாயில்களை வளைத்துக் கொள்ளுதல்
7097. உளைப்புறும் ஓத வேலை ஓங்கு அலை ஒடுங்கத் தூர்ப்ப,
அளப்ப அரும் தூளி சுண்ணம், ஆசைகள் அலைப்ப, பூசல்
இளைப்ப அருந் தலைவர், முன்னம் ஏவலின், எயிலை முற்றும்
வளைத்தனர்; விடிய, தத்தம் வாயில்கள் தோறும் வந்து. 6.12.25
வானர சேனைகள் ஆரவாரிப்ப சுக்கிரீவனும் இலக்குவனும் முன்செல்ல இராமன் எழுந்து செல்லுதல்
7098. தந்திரம் இலங்கை மூதூர் மதிலினைத் தழுவித் தாவி,
அந்தரக் குலம் மீன் சிந்த, அண்டமும் கிழிய ஆர்ப்ப,
செந்தனிச் சுடரோன் சேயும் தம்பியும் முன்பு செல்ல,
இந்திரன் தொழுது வாழ்த்த; இராமனும் எழுந்து சென்றான். 6.12.26
வானர சேனைகளால் வளைக்கப்பட்ட இலங்கையின் தோற்றம் (7099-7100)
7099. நூற் கடல் புலவராலும் நுனிப்ப அரும் வலத்தது ஆய
வேல் கடல் தானை ஆன விரிகடல் விழுங்கிற்றேனும்
கார்க் கடல் புறத்தது ஆக, கவிக்கடல் வளைந்த காட்சி,
பாற்கடல் அழுவத்து உள்ளது ஒத்தது, அப் பதகன் மூதூர். 6.12.27
7100. அலகு இலா அரக்கன் சேனை அகப்பட, அரியின் தானை,
வலைகொலாம் என்ன, சுற்றி வளைத்த மாநகரம் மன்னோ
கலைகுலாம் பரவை ஏழும் கால் கிளர்ந்து எழுந்த காலத்து
உலகு எலாம் ஒருங்கு கூடி, ஒதுங்கினவேயும் ஒக்கும். 6.12.28
------------
6.13 அங்கதன் தூதுப் படலம்
வடதிசை வாயிலில் நின்று இராவணனை எதிர்நோக்கியிருந்து அவனைக் காணாத இராமன், தான் கருதியதனை வீடணனுக்கு எடுத்துரைத்தல்
7101. வள்ளலும் விரைவின் எய்தி, வடதிசை வாயில் முற்றி,
வெள்ளம் ஓர் ஏழு பத்துக் கணித்த வெஞ் சேனையோடும்,
கள்ளனை வரவு நோக்கி நின்றனன், காண்கிலாதான்,
‘ஒள்ளியது உணர்ந்தேன் ‘என்னா, வீடணற்கு ப்பது ஆனான். 6.13.1
7102. ‘தூதுவன் ஒருவன் தன்னை இவ்வழி விரைவில் தூண்டி,
“மாதினை விடுதியோ? “ என்று உணர்த்தவே, மறுக்கும் ஆகின்,
காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது, அறனும் அஃதே;
நீதியும் அஃதே ‘என்றான் கருணையின் நிலையம் அன்னான். 6.13.2
இராமனது கேட்ட வீடணனும் சுக்கிரீவனும் இலக்குவனும் தத்தம் கருத்தினைத் தரெிவித்தல்
7103. அரக்கர் கோன் அதனைக் கேட்டான், ‘அழகிற்றே யாகும் ‘என்றான்;
குரங்கு இனத்து இறைவன் நின்றான், ‘கொற்றவற்கு உற்றது ‘என்றான்;
‘இரக்கமது இழுக்கம் ‘என்றான், இளையவன்; ‘இனி, நாம் அம்பு
துரக்குவது அல்லால், வேறு ஓர் சொல் உண்டோ? ‘என்னச் சொன்னான். 6.13.3
இராவணன்பால் தூதனுப்பிச் சமாதானம் செய்து கொள்ளுதல் கூடாது என இலக்குவன் எடுத்துரைத்தல் (7104-7107)
7104. ‘தேசியைச் சிறையில் வைத்தான்; தேவரை இடுக்கண் செய்தான்;
பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான்; மன்னுயிர் புடைத்துத் தின்றான்;
ஆசையின் அளவும், எல்லா உலகமும் தானே ஆள்வான்,
வாசவன் திருவும் கொண்டான்; வழி அலா வழிமேல் செல்வான். 6.13.4
7105. ‘வாழியாய்! நின்னை அன்று வரம்பு அறு துயரின் வைக,
சூழ்வு இலா மாயம் செய்து, உன் தேவியைப் பிரிவு சூழ்ந்தான்;
ஏழைபால் இரக்கம் நோக்கி, ஒரு தனி இகல் மேல் சென்ற,
ஊழி காண்கிற்கும் வாழ்நாள் உந்தையை உயிர் பண்டு உண்டான். 6.13.5
7106. ‘அன்னவன் தனக்கு, மாதை விடில், உயிர் அருளுவாயேல்,
“என்னுடை நாமம் நிற்கும் அளவு எலாம் இலங்கை மூதூர்
மன்னவன் நீயே ‘‘ என்று, வந்து அடைந்தவற்கு வாயால்
சொன்ன சொல் என் ஆம்? முன்னம் சூளுறவு என் ஆம்? தோன்றால்! 6.13.6
7107. ‘அறம் தரு தவத்தை ஆயும் அருளினால், அவற்றை முற்றும்
மறந்தனை எனினும், மற்று இவ் இலங்கையின் வளமை நோக்கி,
“இறந்து இது போதல் தீது “ என்று இரங்கினை எனினும், எண்ணின்,
சிறந்தது போரே ‘என்றான்; சேவகன் முறுவல் செய்தான். 6.13.7
நீ கூறுவதே முடிவு ஆயினும் தூதனை அனுப்பி நமது கருத்தினைத் தரெிவித்தல் நீதியாகும் என இராமன் இலக்குவனுக்குக் கூறுதல்
7108. ‘அயர்த்திலன்; முடிவும் அஃதே; ஆயினும் அறிஞர் ஆய்ந்த
நயத் துறை நூலின் நீதி நாம் துறந்து அமைதல் நன்றோ?
புயத்துறை வலியரேனும், பொறையொடும் பொருந்தி வாழ்தல்
சயத் துறை; அறனும் அஃதே ‘என்று இவை சமையச் சொன்னான். 6.13.8
அங்கதனைத் தூதனுப்புதல் நலம் என இராமன் வீடணன் முதலியோரிடத்துத் தரெிவித்தல்
7109. ‘மாருதி இன்னும் செல்லின், மற்று இவன் அன்றி வந்து
சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றே?
ஆர், இனி ஏகத் தக்கார்? அங்கதன் அமையும்; ஒன்னார்
வீரமே விளைப்பரேனும், தீது இன்றி, மீள வல்லான். 6.13.9
யாவரும் நன்று என இசைய இராமன் அங்கதனை நோக்கி தூது சென்று வருக எனக்கூற, அவன் பெருமகிழ்ச்சியுறுதல்
7110. ‘நன்று ‘என, அவனைக் கூவி, ‘நம்பி! நீ நண்ணலார்பால்
சென்று, இரண்டு யின் ஒன்றைச் செப்பினை தருதி ‘என்றான்;
அன்று அவன் அருளப் பெற்ற ஆண்தகை அலங்கல் பொன்தோள்
குன்றினும் உயர்ந்தது என்றால், மன நிலை கூறலாமே? 6.13.10
இராவணனிடம் யான் கூறவேண்டுவது யாது ‘என வினவிய அங்கதனுக்கு இராமன் அவற்றைத் தொகுத்துரைத்தல் (7111-7112)
7111. ‘என் அவற்கு ப்பது? ‘என்ன, ‘ஏந்திழையாளை விட்டுத்
தன் உயிர் பெறுதல் நன்றோ? அன்று எனின், தலைகள் பத்தும்
சின்ன பின்னங்கள் செய்ய, செருக்களம் சேர்தல் நன்றோ?
சொன்னவை இரண்டின் ஒன்றே துணிக ‘‘ எனச் சொல்லிடு ‘என்றான 6.13.11
7112. ‘அறத் துறை அன்று, வீரர்க்கு அழகும் அன்று, ஆண்மை அன்று,
மறத் துறை அன்று, சேமம் மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல்;
நிறத்து உற வாளி கோத்து நேர் வந்து நிற்கும் ஆகின்
புறத்து உற எதிரே வந்து போர்தரப் புகல்தி ‘என்றான். 6.13.12
அங்கதன் இராவணன்பால் தூதனாக விரைந்து சேறல்
7113. பார்மிசை வணங்கிச் சீயம் விண்மிசைப் படர்வதே போல்,
வீரன் வெஞ் சிலையில் கோத்த அம்பு என, விசையின் போனான்,
“மாருதி அல்லன், ஆகின், நீ ‘எனும் மாற்றம் பெற்றேன்;
யார் இனி என்னோடு ஒப்பார்? ‘ என்பதோர் இன்பம் உற்றான். 6.13.13
கடத்தற்கரிய இலங்கை மதிலைக் கடந்த அங்கதன் இராவணனது இருக்கையினை அடைதல்
7114. அயில் கடந்து எரிய நோக்கும் அரக்கரைக் கடக்க, ஆழித்
துயில் கடந்து அயோத்தி வந்தான் சொல் கடவாத தூதன்,
வெயில் கடந்திலாத காவல், மேருவின் மேலும் நீண்ட
எயில் கடந்து, இலங்கை எய்தி, அரக்கனது இருக்கை புக்கான். 6.13.14
இராவணனைக் காணுதல்
7115. அழுகின்ற கண்ணர் ஆகி, ‘அநுமன்கொல்? ‘என்ன அஞ்சித்
தொழுகின்ற சுற்றம் சுற்ற, சொல்லிய துறைகள் தோறும்
மொழிகின்ற வீரர் வார்த்தை முகம்தொறும் செவியின் மூழ்க,
எழுகின்ற சேனை நோக்கி, இயைந்து இருந்தானைக் கண்டான். 6.13.15
இராவணனது ஆற்றலைக் கண்டு வியந்து நிற்றல்
7116. ‘கல் உண்டு; மரம் உண்டு; ஏழைக் கடல் ஒன்றும் கடந்தேம் என்னும்
சொல் உண்டே; இவனை வெல்லத் தோற்றும் ஓர் கூற்றும் உண்டே?
எல் உண்ட படை கைக்கொண்டான் எதிர் உண்டே? இராமன் கையில்
வில் உண்டே உண்டு ‘என்று எண்ணி, ஆற்றவும் வியந்து நின்றான். 6.13.16
இவனை வெல்லுதல் இராமனாலன்றி வேறொருவராலும் இயலாது ‘எனல்
7117. ‘இன்று இவன் தன்னை எய்த நோக்கினேற்கு, எதிர்ந்த போரில்
வென்ற என் தாதை மார்பில் வில்லின்மேல் கணை ஒன்று ஏவிக்
கொன்றவன் தானே வந்தான் என்று உடன் குறிப்பின் அல்லால்
ஒன்று இவன் தன்னைச் செய்யவல்லரோ, உயிர்க்கு நல்லார்? 6.13.17
இராவணனது மகுடமணியைப் பறித்த தன் சிறிய தந்தையாகிய சுக்கிரீவனது ஆற்றலை வியத்தல்
7118. ‘அணி பறித்து அழகு செய்யும் அணங்கின் மேல் வைத்த ஆசைப்
பிணி பறித்து, இவனை யாவர் முடிப்பவர் படிக் கண்? பேழ்வாய்ப்
பணி பறித்து எழுந்த மானக் கலுழனின், இவனைப் பற்றி
மணி பறித்து எழுந்த எந்தை யாரினும் வலியன் ‘அன்றே. 6.13.18
அங்கதன் இராவணனருகிற் சென்று நிற்றல்
7119. நெடுந்தகை விடுத்த தூதன் இவை இவை நிரம்ப எண்ணி,
கடுங் கனல் விடமும் கூற்றும் கலந்து கால் கரமும் காட்டி,
விடும் சுடர் மகுடம் மின்ன, விரிகடல் இருந்தது அன்ன
கொடுந் தொழில் மடங்கல் அன்னான் எதிர் சென்று குறுகி நின்றான். 6.13.19
இராவணன் அங்கதனை நோக்கி ‘நீ யார் ‘என வினவுதல்
7120. நின்றவன் தன்னை, அன்னான் நெருப்பு எழ நிமிரப் பார்த்து, ‘இங்கு
இன்று, இவண் வந்த நீ யார்? எய்திய கருமம் என்னை?
கொன்று இவர் தின்னா முன்னம் கூறுதி தரெிய ‘என்றான்;
வன்திறல் வாலி சேயும் வாள் எயிறு இலங்க நக்கான். 6.13.20
அங்கதன் தன்னை இராமதூதன் என அறிவித்தல்
7121. ‘பூத நாயகன், நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன், அப் பூமேல்
சீதை நாயகன், வேறு உள்ள தயெ்வ நாயகன், நீ செப்பும்
வேத நாயகன், மேல் நின்ற விதிக்கு நாயகன். தான் விட்ட
தூதன் யான்; பணித்த மாற்றம் சொல்லிய வந்தேன் ‘என்றான். 6.13.21
இராவணன் இராமனைக் குறித்து இகழ்ந்துரைத்தல்
7122. ‘அரன் கொலாம்? அரிகொலாம்? மற்று அயன்கொலாம்? என்பார் அன்றி,
குரங்கு எலாம் கூட்டி, வேலைக் குட்டத்தைச் சேது கட்டி,
இரங்குவான் ஆகின், ‘இன்னம் அறிதி ‘என்று உன்னை ஏவும்
நரன் கொலாம் உலக நாதன்? ‘ என்று கொண்டு அரக்கன் நக்கான். 6.13.22
அங்கதனை நோக்கி ‘மனிதனுக்குத் தூதனாகிய நீ யாவன் ‘என இராவணன் வினவுதல்
7123. ‘கங்கையும் பிறையும் சூடும் கண்ணுதல், கரத்து நேமி
சங்கமும் தரித்த மால், மற்று இந்நகர் தன்னைச் சாரார்;
அங்கு அவர் தம்மையன்றி, மனிசனுக்கு ஆக, அஞ்சாது,
இங்கு வந்து இதனைச் சொன்ன தூதன் நீ யாவன்? ‘என்றான். 6.13.23
அங்கதன், தன்னை இன்னான் எனத் தரெிவித்தல்
7124. ‘இந்திரன் செம்மல், பண்டு, ஓர் இராவணன் என்பான் தன்னைச்
சுந்தரத் தோள்கேளாடும் வால் இடைத் தூங்கச் சுற்றி,
சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன், தேவர் உண்ண
மந்தரக் கிரியால் வேலை கலக்கினான், மைந்தன் ‘என்றான். 6.13.24
சூழ்ச்சியில் வல்ல இராவணன் அங்கதனை அன்புரைகளால் வேறுபடுத்தித் தன்னுடன் சேர்த்துக்கொள்ள முயலுதல் (7125-7127)
7125. ‘உந்தை என் துணைவன் அன்றே? ஓங்கு அறம் சான்றும் உண்டால்;
நிந்தனை இதன்மேல் உண்டே, நீ அவன் தூதன் ஆதல்?
தந்தனென் நினக்கு யானே வானரத் தலைமை; தாழா
வந்தனை; நன்று செய்தாய், என்னுடை மைந்த! ‘என்றான். 6.13.25
7126. “‘தாதையைக் கொன்றான் பின்னே தலை சுமந்து, இருகை நாற்றி,
பேதையன் என்ன வாழ்ந்தாய் ‘‘ என்பது ஓர் பிழையும் தீர்ந்தாய்;
சீதையைப் பெற்றேன்; உன்னைச் சிறுவனுமாகப் பெற்றேன்;
ஏது எனக்கு அரியது? ‘என்றான் இறுதியின் எல்லை கண்டான். 6.13.26
7127. ‘அந் நரர் இன்று, நாளை, அழிவதற்கு ஐயம் இல்லை;
உன் அரசு உனக்குத் தந்தேன்; ஆளுதி, ஊழி காலம்;
பொன் அரி சுமந்த பீடத்து, இமையவர் போற்றி செய்ய,
மன்னவன் ஆக, யானே சூட்டுவென் மகுடம் ‘என்றான். 6.13.27
அங்கதன் நகைத்து இராவணன் மொழிகளை மறுத்து இகழ்தல் (7128-7129)
7128. அங்கதன், அதனைக் கேளா, அங்கையோடு அங்கை தாக்கி,
துங்க வன்தோளும் மார்பும் இலங்கையும் துளங்க, நக்கான்;
“‘இங்கு நின்றார்கட்கு எல்லாம் இறுதியே “ என்பது உன்னி,
நுங்கள்பால் நின்றும் எம்பால் போந்தனன், நும்பி ‘என்றான். 6.13.28
7129. ‘வாய் தரத்தக்க சொல்லி, என்னை உன் வசம் செய்வாயேல்,
ஆய்தரத் தக்கது அன்றோ, தூது வந்து அரசது ஆள்கை?
நீ தரக் கொள்வேன் யானே? இதற்கு இனி நிகர்வேறு எண்ணின்,
நாய் தரக் கொள்ளும் சீயம், நல் அரசு! ‘என்று நக்கான். 6.13.29
நின்னைக் கொன்றொழிப்பேன் ‘என அங்கதனை வெகுண்ட இராவணன் ‘நீ வந்த காரியம் கூறுக ‘எனல்
7130. ‘அடுவனே ‘என்னப் பொங்கி ஓங்கிய அரக்கன், அந்தோ!
தொடுவனே, குரங்கைச் சீறிச் சுடர்ப் படை? ‘என்று தோன்ற,
‘நடுவனே செய்யத்தக்க நாள் உலந்தாற்குத் தூத!
படுவதே துணிந்தாய் ஆயின், வந்தது பகர்தி ‘என்றான். 6.13.30
அங்கதன் இராமபிரான் கூறியவற்றை இராவணனுக்கு எடுத்துரைத்தல்
7131. ‘கூவி இன்று என்னை, நீ போய், “தன்குலம் முழுதும் கொல்லும்
பாவியை, அமருக்கு அஞ்சி அரண் புக்கு பதுங்கினானை,
தேவியை விடுக! அன்றேல், செருக்களத்து எதிர்ந்து தன்கண்
ஆவியை விடுக! ‘‘ என்றான், அருள் இனம் விடுகிலாதான். 6.13.31
7132. “‘பருந்து உணப் பாட்டி யாக்கை படுத்த நாள், படைஞரோடும்
மருந்தினும் இனிய மாமன் மடிந்த நாள், வனத்துள் வைகி
இருந்துழி வந்த தங்கை இரும் செவி முலையும் மூக்கும்
அரிந்த நாள், வந்திலாதான் இனிச் செய்யும் ஆண்மை உண்டோ? 6.13.32
7133. “‘கிளையொடும் படைஞரோடும். கேடு இலா உயிர்கட்கு எல்லாம்
களை அன தம்பிமாரை வேரொடும் களையக் கண்டும்,
இளையவன் பிரிய மாயம் இயற்றி, ஆயிழையை வௌவும்
வளை எயிற்று அரக்கன், வெம்போர்க்கு, இனி எதிர் வருவது உண்டோ? 6.13.33
7134. “‘ஏந்திழை தன்னைக் கண்ணுற்று, எதிர்ந்தவர் தம்மை எற்றி,
சாந்து எனப் புதல்வன் தன்னைத் தரை இடைத் தேய்த்து, தன் ஊர்
காந்து எரிமடுத்து, தானும் காணவே, கடலைத் தாவிப்
போந்த பின், வந்திலாதான் இனிப் பொரும் போரும் உண்டோ? 6.13.34
7135. “‘உடைக் குலத்து ஒற்றர் தம்பால் உயிர் கொடுத்து உள்ளக் கள்ளம்
துடைத்துழி, வருணன் வந்து தொழுதுழி, தொழாத கொற்றக்
குடைத் தொழில் தம்பி கொள்ளக் கொடுத்துழி, வேலை கோலி
அடைத்துழி வந்திலாதான், அமர்க்கு இனி வருவது உண்டோ? 6.13.35
7136.“‘மறிப்பு உண்ட தேவர் காண, மணி வரைத் தோளின் வைகும்
நெறிப் புண்டரீகம் அன்ன முகத்தியர் முன்னே, நென்னல்,
பொறிப் புண்டரீகம் போலும் ஒருவனால், புனைந்த மோலி
பறிப்பு உண்டும், வந்திலாதான் இனிப் பொரும் பான்மை உண்டோ? 6.13.36
அங்கதன் இராவணனை நோக்கி ‘சீதையைச் சிறைவீடு செய்தல் அல்லது போருக்குப் புறப்படுதல் இரண்டில் ஒன்றைச் செய்க ‘என முடிவாகக் கூறுதல்
7137.“‘என்று இவை இயம்பி வா “ என்று ஏவினன் என்னை; எண்ணி
ஒன்று உனக்கு உறுவது உன்னித் துணிந்து ; உறுதி பார்க்கின்,
துன்று இருங் குழலை விட்டுத் தொழுது வாழ்; சுற்றத்தோடும்
பொன்றுதி ஆயின், என்பின், வாயிலில் புறப்படு ‘என்றான். 6.13.37
நீ போருக்குப் புறப்படாது உன் ஊரில் பதுங்கியிருத்தல் பழி ‘என இராவணனது மனம் வருந்தச் சொல்லுதல்
7138.‘நீரிலே பட்ட, சூழ்ந்த நெருப்பிலே பட்ட, நீண்ட
பாரிலே பட்ட, வானப் பரப்பிலே பட்ட எல்லாம்,
போரிலே பட்டு வீழப் பொருத நீ, ஒளித்துப் புக்கு உன்
ஊரிலே பட்டாய் என்றால், பழி ‘ என உளையச் சொன்னான். 6.13.38
சினங்கொண்ட இராவணன் அங்கதனைப் பற்றுமாறு அரக்கர் நால்வரை ஏவுதல்
7139.சொற்ற வார்த்தையைக் கேட்டலும் தொல் உயிர்
முற்றும் உண்பது போலும் முனிவின் ஆன்
‘பற்றுமின் கடிதின்; நெடும் பார் மிசை
எற்றுமின் ‘என நால்வரை ஏவினான். 6.13.39
அங்கதன் தன்னைப் பற்றிய அரக்கர் நால்வரையும் அவர்கள் தலை சிதறும்படி கோபுர வாயிலில் வீசி எறிந்துவிட்டு இலங்கை நகரத்தாரைப் புறத்தே ஓடி உய்யுமாறு சொல்லி மீளுதல் (7140-7141)
7140.ஏவினார் பிடித்தாரை எடுத்து எழத்
தாவினான் அவர் தம் தலை போய் அறக்
கூவினான் அவன் கோபுர வாயிலில்
தூவினான் துகைத்தான் இவை சொல்லினான். 6.13.40
7141.‘ஏமம் சார எளியவர் யாவிரும்
தூமம் கால்வன வீரன் சுடுசரம்
வேம் மின் போல்வன வீழ்வதன் முன்னமே
போமின் போமின் புறத்து ‘என்று போயினான். 6.13.41
அங்கதன் வான்வழியே வந்து இராமனையடைந்து அவன் திருவடிகளை வணங்குதல்
7142.அந்தரத்திடை ஆர்த்து எழுந்தான் அவர்
சிந்து அரத்தம் துதைந்து எழும் செச்சையான்
இந்து விண் நின்று இழிந்து உளதாம் என
வந்து வீரன் அடியின் வணங்கினான். 6.13.42
இராவணன் கருத்து இன்னது என இராமனுக்குத் தரெிவித்தல்
7143.உற்றபோது ‘அவன் உள்ளக் கருத்து எலாம் ‘
கொற்ற வீரன் ‘உணர்த்து ‘என்று கூறலும்
‘முற்ற ஓதி என்? மூர்க்கன் முடித் தலை
அற்றபோது அன்றி ஆசை அறான் ‘என்றான். 6.13.43
----------------
6.14 முதற் போர் புரி படலம் (7144- )
பாசறையில் பறையறைவித்தல் (7144-7146)
7144. “பூசலே; பிறிது இல்லை ” எனப் புறத்து
ஆசை தோறும் முரசம் அறைந்து என
பாசறைப் பறையின் இடம் பற்றிய
வாசல் தோறும் முறையின் வகுத்திரால். 6.14.1
7145. மற்றும் நின்ற மலையும் மரங்களும்
பற்றி வீசிப் பரவையின் மும்முறை
கற்ற கைகளினால் கடி மாநகர்
சுற்றி நின்ற அகழியைத் தூர்த்திரால். 6.14.2
7146. இடுமின் பல மரம்; எங்கும் இயக்கு அறத்
தடுமின்; “போர்க்கு வருக! ” எனச் சாற்றுமின்;
கடுமின் இப்பொழுதே கதிர்மீச் செலாக்
கொடுமதில் குடுமித் தலைக் கொள்கென்றான். 6.14.3
அகழியை வானரங்கள் தூர்த்தல் (7147-7154)
7147. தடங்கொள் குன்றும் மரங்களும் தாங்கியே
மடங்கல் அன்ன அவ் வானர மாப் படை
இடங்கர்மா இரியப் புனல் ஏறிடத்
தொடங்கி வேலை அகழியைத் தூர்த்ததால். 6.14.4
7148. ஏய வெள்ளம் எழுபதும் எண்கடல்
ஆய வெள்ளத்து அகழியைத் தூர்த்தலும்
தூய வெள்ளம் துணை செய்வது ஆம் என
வாயில் ஊடு புக்கு ஊரை வளைந்ததே. 6.14.5
7149. விளையும் வென்றி இராவணன் மெய்ப்புகழ்
முளையினோடும் களைந்து முடிப்ப போல்
தளை அவிழ்ந்த கொழுந் தடந் தாமரை
வளையம் வன்கையில் வாங்கின வானரம். 6.14.6
7150. ஈளி தாரம் இயம்பிய வண்டு உறை
பாளை தாது உகு நீர் நெடும் பண்ணைய
தாள தாமரை அன்னங்கள் தாவிட
வாளை தாவின வானரம் தாவவே. 6.14.7
7151. இகழுந் தன்மையன் ஆய இராவணன்
புகழும் மேன்மையும் போயினவாம் என
நிகழும் கள் நெடு நீலம் உகுத்தலால்
அகழிதானும் அழுவது போன்றதே. 6.14.8
7152. தண்டு இருந்த பைந் தாமரைத் தாள் அறப்
பண் திரிந்து சிதையப் படர் சிறை
வண்டு இரிந்தன; வாய்தொறும் முட்டையைக்
கொண்டு இரிந்தன அன்னக் குழாம் எலாம். 6.14.9
7153. தூறும் மாமரமும் மலையும் தொடர்
நீறும் நீர்மிசைச் சென்று நெருக்கலால்
ஏறு பேர் அகழின் நின்று இனப் பல
ஆறு சென்றன ஆர்கலி மேல் அரோ. 6.14.10
7154. இழுகு மாக் கல் இடுந்தொறும் இடுந்தொறும்
சுழிகள் தோன்றும் சுரித்து; இடை தோன்று தேன்
ஒழுகு தாமரை ஒத்தன ஓங்கு நீர்
முழுகி மீது எழும் மாதர் முகத்தையே. 6.14.11
கவிக்கூற்று
7155. தன்மைக்குத் தலையாய தசமுகன்
தொன்மைப் பேர் அகழ் வானரம் தூர்த்ததால்;
இன்மைக்கும் ஒன்று உடைமைக்கும் யாவர்க்கும்
வன்மைக்கும் ஒர் வரம்பும் உண்டு ஆம் கொலோ? 6.14.12
வானரங்கள் மதிற்குடுமி கொள்ளுதல்
7156. தூர்த்த வானரம் சுள்ளி பறித்து இடைச்
சீர்த்த பேர் அணை தன்னையும் சிந்தின;
வார்த்தது அன்ன மதிலின் வரம்பு கொண்டு
ஆர்த்த ஆர்கலி காரொடும் அஞ்சவே. 6.14.13
மதில்மீது ஏறிய வானரங்களின் தோற்றம்
7157. வட்ட மேரு இது என வான் முகடு
எட்ட நீண்ட மதில்மிசை ஏறி விண்
தொட்ட வானரம் தோன்றின மீத் தொக
விட்ட வெண் கொடி வீங்கின என்னவே. 6.14.14
வானரங்கள் ஏறியதால் மதில் தரைபுகுதல்
7158. இறுக்க வேண்டுவது இல்லை; எண் தீர் மணி
வெறுக்கை ஓங்கிய மேரு விழுக்கலால்
நிறுக்க நேர்வரு வீரர் நெருக்கலால்
பொறுக்கலாது மதில் தரை புக்கது ஆல். 6.14.15
அரக்கர் போருக்கு எழுதல்
7159. அறைந்த மா முரசு; ஆனைப் பதாகையால்
மறைந்தவால் நெடு வானகம்; மாதிரம்
குறைந்த தூளி குழுமி; விண் ஊடு புக்கு
உறைந்தது ஆங்கு அவர் போர்க்கு எழும் ஓதையே. 6.14.16
அரக்கர் சேனையில் எழுந்த ஒலிகள்
7160. கோடு அலம்பின; கோதை அலம்பின;
ஆடல் அம் பரித் தாரும் அலம்பின;
மாடு அலம்பின மாமணித் தேர் மணி;
பாடு அலம்பின பாய்மத யானையே. 6.14.17
அரக்கர் சேனையும் வானர சேனையும் தாக்குதல் (7161-7169)
7161. அரக்கர் தொல்குலம் வேர் அற அல்லவர்
வருக்கம் யாவையும் வாழ்வு உற வந்தது ஓர்
கருக்கொள் காலம் விதிகொடு காட்டிட
தருக்கி உற்று எதிர் தாக்கின தானையே. 6.14.18
7162. பல் கொடும் நெடும் பாதவம் பற்றியும்
கல் கொடும் சென்றது அக்கவியின் கடல்;
வில் கொடும் நெடு வேல் கொடும் வேறு உள
எல் கொடும் படையும் கொண்டது இக்கடல். 6.14.19
7163. அம்பு கற்களை அள்ளின; அம்பு எலாம்
கொம்பு உடைப் பணை கூறு உற நூறின;
வம்பு உடைத் தட மாமரம் மாண்டன
செம்புகர்ச் சுடர் வேல் கணம் செல்லவே. 6.14.20
7164. மாக் கை வானர வீரர் மலைந்த கல்
தாக்கி வஞ்சர் தலைகள் தகர்த்தலால்
நாக்கினூடும் செவியினும் நாகம் வாழ்
மூக்கினூடும் சொரிந்தன மூளையே. 6.14.21
7165. அற்கள் ஓடும் நிறத்த அரக்கர்தம்
விற்கள் ஓடும் சரம்பட வெம் புண் நீர்
பற்கேளாடும் சொரிதர பற்றிய
கற்கேளாடும் உருண்ட கவிகளே. 6.14.22
7166. நின்று மேரு நெடுமதில் நெற்றியின்
வென்றி வானர வீரர் விசைத்த கல்
சென்று தீயவர் ஆர் உயிர் சிந்தின
குன்றின் வீழும் உருமின் குழுவினே. 6.14.23
7167. எதிர்த்த வானரம் யாக்கையொடு இற்றன;
மதில் புறம் கண்டு மண்ணில் மறைந்தன;
கதிர்க் கொடுங்கண் அரக்கர் கரங்களால்
விதிர்த்து எறிந்த விலங்கு இலை வேலினே. 6.14.24
7168. கடித்த குத்தின கையில் கழுத்து அறப்
பிடித்த வள் உகிரால் பிளவு ஆக்கின
இடித்த எற்றின எண் இல் அரக்கரை
முடித்த வானரம் வெஞ்சின முற்றின. 6.14.25
7169. எறிந்தும் எய்தும் எழுமுளைத் தண்டு கொண்டு
அறைந்தும் வெவ் அயில் ஆகத்து அழுத்தியும்
நிறைந்த வெங்கண் அரக்கர் நெருக்கலால்
குறைந்த வானர வீரர் குழுக்களே. 6.14.26
போர்க்களக் காட்சி (7170-7173)
7170. செப்பின் செம்புனல் தோய்ந்த செம்பொன் மதில்
துப்பின் செய்தது போன்றது சூழ்வரை;
குப்புற்று ஈர் பிணக் குன்று சுமந்து கொண்டு
உப்பில் சென்றது உதிரத்து ஒழுக்கமே. 6.14.27
7171. வந்து இரைத்த பறவை மயங்கின
அந்தரத்தில் நெருங்கலின் அங்கு ஒரு
பந்தர் பெற்றது போன்றது பற்றுதல்
இந்திரற்கும் அரிய இலங்கையே. 6.14.28
7172. தங்கு வெங்கனல் ஒத்துத் தயங்கிய
பொங்கு வெங்குருதிப் புனல் செக்கர் முன்
கங்குல் அன்ன கவந்தமும் கை எடுத்து
அங்கும் இங்கும் நின்று ஆடியவாம் அரோ. 6.14.29
7173. கொன் நிறக் குருதிக் குடை புட்களின்
தொல் நிறச் சிறையில் துளி தூவலால்
பல் நிறத்த பதாகைப் பரப்பு எலாம்
செந் நிறத்தனவாய் நிறம் தீர்ந்தவே. 6.14.30
வானரம் மதிலைவிட்டு இறங்குதல்
7174. பொழிந்த சோரிப் புதுப் புனல் பொங்கி மீ
வழிந்த மாமதில் கைவிட்டு வானரம்
ஒழிந்த மேருவின் உம்பர் புக்கு இம்பரின்
இழிந்த மாக்கடல் என்ன இழிந்ததே. 6.14.31
அரக்கர்கள் கோட்டையில் நிரம்புதல்
7175. பதணமும் மதிலும் படை நாஞ்சிலும்
கதன வாயிலும் கட்டும் அட்டாலையும்
முதல யாவையும் புக்குற்று முற்றின
விதன வெங்கண் இராக்கதர் வெள்ளமே. 6.14.32
வானரங்களின் அவலநிலை
7176. பாய்ந்த சோரிப் பரவையில் பற்பல
நீந்தி ஏகும் நெருக்கு இடைச் சிற்சில
சாய்ந்து சாய்ந்து சரம்படத் தள்ளல் உற்று
ஓய்ந்து வீழ்ந்த; சிலசில ஓடின. 6.14.33
அரக்கரின் ஆர்ப்பு (7177-7178)
7177. தழிய வானர மாக்கடல் சாய்தலும்
பொழியும் வெம்படைப் போர்க்கடல் ஆர்த்ததால்
ஒழியும் காலத்து உலகு ஒரு மூன்றும் ஒத்து
அழியும் மாக்கடல் ஆர்ப்பு எடுத்தனெ்னவே. 6.14.34
7178. முரைசும் மா முருடும் முரல் சங்கமும்
செய் காளமும்; ஆகுளி ஓசையும்
விரைசும் பல் இயம் வில் அரவத்தொடும்
திரை செய் வேலைக்கு ஒர் ஆகுலம் செய்தவே. 6.14.35
இராவணனது சேனை வாயில் வழி புறப்படுதல்
7179. ஆய காலை. அனைத்து உலகும் தரும்
நாயகன் முகன் நாலின் நடந்து என
மேய சேனை விரிகடல் விண்குலாம்
வாயில் ஊடு புறப்பட்டு வந்ததே. 6.14.36
யானைப் படை
7180. நெடிய காவதம் எட்டு நிரம்பிய
படிய வாயில் பருப்பதம் பாய்ந்து என
கொடியொடும் கொடி சுற்றக் கொடுத்த தண்டு
ஒடிய ஊன்றின மும்மத ஓங்கலே. 6.14.37
தேர்ப் படை
7181. சூழி யானை மதம்படு தொய்யலின்
ஊழி நாள் நெடுங் கால் என ஓடுவ
பாழி வாழ் வயிரப் படி பல்முறை
பூழி ஆக்கின பொன் நெடுந்தேர்களே. 6.14.38
குதிரைப் படை
7182. பிடித்த வானரம் பேர் எழில் தோள்களால்
இடித்த மாமதில் ஆடை இலங்கையாள்
மடுத்த மாக்கடல் வாவும் திரை எலாம்
குடித்துக் கால்வன போன்ற குதிரையே. 6.14.39
காலாட் படை
7183. கேள் இல் ஞாலம் கிளர்த்திய தொல்முறை
நாளும் நாளும் நடந்தன நள் இரா
நீளம் எய்தி ஒருசிறை நின்றன
மீளும் மாலையும் போன்றனர் வீரரே. 6.14.40
புழுதி எழுதல்
7184. பத்தி வன் தலைப் பாம்பின் பரம் கெட
முத்தி நாட்டின் முகத்தினை முற்றுற
பித்தி பிற்பட வன்திசை பேர்வுற
தொத்தி மீண்டிலவால் நெடுந் தூளியே. 6.14.41
குரக்குச் சேனை குலைதல்
7185. நெருக்கி வந்து நிருதர் நெருங்கலால்
குரக்கு இனப் பெருந்தானை குலைந்து போய்
அருக்கன் மாமகன் ஆர் அமர் ஆசையால்
செருக்கி நின்றவன் நின்றுழிச் சென்றதால். 6.14.42
சுக்கிரீவன் சினந்து போர்புரிதல் (7186-7194)
7186. சாய்ந்த தானைத் தளர்வும் சலத்து எதிர்
பாய்ந்த தானைப் பெருமையும் பார்த்து உறக்
காய்ந்த நெஞ்சன் கனல் சொரி கண்ணினன்
ஏய்ந்தது அங்கு ஒர் மராமரம் ஏந்தினான். 6.14.43
7187. வாரணத்து எதிர் வாசியின் நேர் வயத்
தேர் முகத்தினில் சேவகர் மேல் செறுத்து
ஓர் ஒருத்தர்க்கு ஒருவரின் உற்று உயர்
தோரணத்து ஒருவன் எனத் தோன்றினான். 6.14.44
7188. களிறும் மாவும் நிருதரும் கால் அற
ஒளிறும் மாமணித் தேரும் உருட்டி வெங்
குளிறு சோரி ஒழுக கொதித்து இடை
வெளிறு இலா மரமே கொண்டு வீசினான். 6.14.45
7189. அன்ன காலை அரிக்குல வீரரும்
மன்னன் முன்புக வன்கண் அரக்கரும்
முன் உழந்த முழங்கு பெருஞ் செருத்
தன்னில் வந்து தலைமயக் குற்றனர். 6.14.46
7190. கல் துரந்த களம் பட வஞ்சகர்
இற்று உலந்து முடிந்தவர் எண் இலர்;
வில் துரந்தன வெங்கணையால் உடல்
அற்று உலந்த குரங்கும் அனந்தமே. 6.14.47
7191. கற்கள் தந்து நிமிர்ந்து கடுஞ்செரு
மற்கடங்கள் வலிந்து மலைந்திட
தற்கு அடங்கி உலந்தவர்தம் உயிர்
தறெ்கு அடங்க நிறைந்து செறிந்தவால். 6.14.48
7192. பாடுகின்றன பேய்க் கணம் பல விதத்து
ஆடுகின்ற அறுகுறை; ஆழ் கடற்கு
ஓடுகின்ற உதிரம் புகுந்து உடல்
நாடுகின்றனர் கற்புடை நங்கைமார். 6.14.49
7193. யானை பட்ட அழிபுனல் யாறு எலாம்
பானல் பட்ட; பலகணை மாரியின்
சோனை பட்டது; சொல் அரும் வானரச்
சேனை பட்டது; பட்டது செம்புண் நீர். 6.14.50
7194. காய்ந்த வானர வீரர் கரத்தினால்
தேய்ந்த ஆயுளர் ஆனவர் செம்புண் நீர்
பாய்ந்தது; ஆனைப் படுகளம் பாழ்படச்
சாய்ந்ததால் நிருதக் கடல் தானையே. 6.14.51
வச்சிரமுட்டி வந்து பொருதல் (7195-7196)
7195. தங்கள் மாப்படை சாய்தலும் தீ எழ
வெங்கண் வாள் அரக்கன் விரை தேரினை
கங்கசாலம் தொடரக் கடல் செலூஉம்
வங்கம் ஆம் என வந்து எதிர் தாக்கினான். 6.14.52
7196. வந்து தாக்கி வடிக்கணை மா மழை
சிந்தி வானரச் சேனை சிதைத்தலும்
இந்திரர் ஆதியரும் திகைத்து ஏங்கினார்;
நொந்து சூரியன் கான்முளை நோக்கினான். 6.14.53
சுக்கிரீவன் வச்சிரமுட்டியைத் தொலைத்தல்
7197. நோக்கி வஞ்சன் நொறில் வய மாப்பரி
வீக்கு தேரினின் மீது எழப் பாய்ந்து தோள்
தூக்கு தூணியும் வில்லும் தொலைத்து அவன்
யாக்கையும் சிதைத்திட்டு எழுந்து ஏகினான். 6.14.54
அரக்கர் ஓட்டம் கண்டு வானரர் ஆர்த்தல்
7198. மலை குலைந்தனெ வச்சிரமுட்டி தன்
நிலை குலைந்து விழுதலின் நின்றுளார்
குலை குலைந்து கொடி நகர் நோக்கினார்;
அலை கிளர்ந்தனெ வானரம் ஆர்த்தவே. 6.14.55
கீழை வாயிலில் போர்
7199. வீழி வெங்கண் இராக்கதர் வெம்படை
ஊழி ஆழி கிளர்ந்தனெ ஓங்கின
கீழை வாயிலில் கிட்டலும் முட்டினர்
சூழும் வானர வீரர் துவன்றியே. 6.14.56
வானரர் அழிவு
7200. சூலம் வாள் அயில் தோமரம் சக்கரம்
வாலம் வாளி மழையின் வழங்கியே
ஆலம் அன்ன அரக்கர் அடர்த்தலும்
காலும் வாலும் துமிந்த கவிக்குலம். 6.14.57
அரக்கர் அழிவு (7201-7202)
7201. வென்றி வானர வீரர் விசைத்து எறி
குன்றும் மா மரமும் கொடுங்காலனில்
சென்று வீழ நிருதர்கள் சிந்தினார்;
பொன்றி வீழ்ந்த புரவியும் பூட்கையும். 6.14.58
7202. தண்டு வாள் அயில் சக்கரம் சாயகம்
கொண்டு சீறி நிருதர் கொதித்து எழ
புண் திறந்து குருதி பொழிந்து உக
மண்டி ஓடினர் வானர வீரரே. 6.14.59
நீலன் நிகழ்த்திய போர் (7203-7204)
7203. எரியின் மைந்தன் இருநிலம் கீழுற
விரிய நின்ற மராமரம் வேரொடும்
திரிய வாங்கி நிருதர் வெஞ்சேனை போய்
நெரிய ஊழி நெருப்பு என வீசினான். 6.14.60
7204. தேரும் பாகரும் வாசியும் செம்முகக்
காரும் யாளியும் சீயமும் காண்தகு
பாரின் வீழப் புடைப்ப பசும்புணின்
நீரும் வாரி அதனை நிறைத்ததே. 6.14.61
அரக்கர் தலைவன் கும்பானுவின் போர்
7205. அரக்கர் சேனை அடுகளம் பாழ்பட
வெருக் கொண்டு ஓடிட வெம்படை காவலன்
நெருக்க நேர்ந்து கும்பானு நெடுஞ்சரம்
துரக்க வானரச் சேனை துணிந்ததே. 6.14.62
இடும்பன் கடும்போர் (7206-7210)
7206. கண்டு நின்ற கரடியின் காவலன்
எண் திசாமுகம் ஏங்கும் இடும்பன் ஓர்
சண்ட மாருதம் என்னத் தடவரை
கொண்டு சீறி அவன் எதிர் குப்புறா. 6.14.63
7207. தொடுத்த வாளிகள் வீழுமுன் சூழ்ந்து எதிர்
எடுத்த குன்றை இடும்பன் எறிதலும்
ஒடித்த வில்லும் இரதமும் ஒல்லெனப்
படுத்த வாசியும் பாகனும் பாழ்பட. 6.14.64
7208. தேர் அழிந்து சிலையும் அழிந்து உகக்
கார் இழிந்த உரும் எனக் காய்ந்து எதிர்
பார் கிழிந்து உகப் பாய்ந்தனன் வானவர்
போர் கிழிந்து புறம்தரப் போர் செய்தான். 6.14.65
7209. தத்தி மார்பின் வயிரத் தடக்கையால்
குத்தி நின்ற கும்பானுவை தான் எதிர்
மொத்தி நின்று முடித்தலை கீழ் உற
பத்தி வன் தடந்தோள் உறப் பற்றுவான். 6.14.66
7210. கடித் தலத்து இருகால் உறக் கைகளால்
பிடித்துத் தோளைப் பிறங்கலின் கோடு நேர்
முடித்தலத்தினைக் கவ்வுற மூளைகள்
வெடித்து வீழ்தர வீழ்த்தினன் ஆம் அரோ. 6.14.67
பிரகத்தன் போர் (7211-7212)
7211. தன் படைத்தலைவன் படத் தன் எதிர்
துன்பு அடைத்த மனத்தன் சுமாலி சேய்
முன் படைத்த முகில் அன்ன காட்சியான்
வன்பு அடைத்த வரிசிலை வாங்கினான். 6.14.68
7212. வாங்கி வார்சிலை வானர மாப்படை
ஏங்க நாண் எறிந்திட்டு இடையீடு இன்றித்
தூங்கு மாரி எனச் சுடர்வாளிகள்
வீங்கு தோளினன் விட்டனன் ஆம் அரோ. 6.14.69
பிரகத்தனும் நீலனும் (7213-7220)
7213. நூறும் ஆயிரமும் கணை நொய்தினின்
வேறு வேறு படுதலின் வெம்பியே
ஈறு இல் வானர மாப்படை எங்கணும்
பாற நீலன் வெகுண்டு எதிர் பார்ப்பு உறா. 6.14.70
7214. குன்றம் நின்றது எடுத்து எதிர் கூற்று எனச்
சென்று எறிந்து அவன் சேனை சிதைத்தலும்
வென்றி வில்லன் விடுகணை மாரியால்
ஒன்று நூறு உதிர் உற்றது அக் குன்றமே. 6.14.71
7215. மீட்டும் அங்கு ஓர் மராமரம் வேரொடும்
ஈட்டி வானத்து இடி என எற்றலும்
கோட்டு வில்லும் கொடியும் வயப்பரி
பூட்டு தேரும் பொடித்துகள் ஆயவே. 6.14.72
7216. தேர் இழந்து சிலையும் இழந்திட
கார் இழிந்த உரும் எனக் காந்துவான்
பார் இழிந்து பருவலித் தண்டொடும்
ஊர் இழந்த கதிர் என ஓடினான். 6.14.73
7217. வாய் மடித்து அழல் கண்தொறும் வந்து உக
போய் அடுத்தலும் நீலன் புகைந்து எதிர்
தாய் அடுத்தவன் தன்கையில் தண்டொடும்
மீ எடுத்து விசும்பு உற வீசினான். 6.14.74
7218. அம்பரத்து எறிந்து ஆர்ப்ப அரக்கனும்
இம்பர் உற்று எரியின் திரு மைந்தன் மேல்
செம்புனல் பொழியக் கதை சேர்த்தினான்
உம்பர் தத்தமது உள்ளம் நடுங்கவே. 6.14.75
7219. அடித்தலோடும் அதற்கு இளையாது அவன்
எடுத்த தண்டைப் பறித்து எறியா ‘இகல்
முடித்தும் ‘என்று ஒரு கை கொடு மோதினான்
குடித்து உமிழ்ந்து எனக் கக்கக் குருதியே. 6.14.76
7220. குருதி வாய்நின்று ஒழுகவும் கூசலன்
நிருதன் நீலன் நெடுவரை மார்பினில்
கருதலாத முன் குத்தலும் கைத்து அவர்
பொருத பூசல் புகல ஒண்ணாததே. 6.14.77
பிரகத்தன் இறந்து வீழ்தல்
7221. மற்று நீலன் அரக்கனை மாடு உறச்
சுற்றி வால்கொடு தோளினும் மார்பினும்
நெற்றி மேலும் நெடுங்கரத்து எற்றலும்
இற்று மால் வரை என்ன விழுந்தனன். 6.14.78
அமரர் ஆர்ப்பும் அரக்கர் தோற்பும்
7222. ‘இறந்து வீழ்ந்தனனே பிரகத்தன் ‘என்று
அறிந்த வானவர் ஆவலம் கொட்டினார்;
வெறிந்த செம்மயிர் வெள் எயிற்று ஆடவர்
முறிந்து தத்தம் முதுநகர் எய்தினார். 6.14.79
தறெ்கு வாயிலில் அங்கதன் போர்
7223. தறெ்கு வாயிலில் சென்ற நிசாசரர்
மல் குலாவு வயப் புயத்து அங்கதன்
நிற்கவே எதிர் நின்றிலர் ஓடினார்
பொன் குலாவு சுபாரிசன் பொன்றவே. 6.14.80
மேலைவாயிலில் அனுமன் போர்
7224. நூற்று இரண்டு எனும் வெள்ளமும் நோன் கழல்
ஆற்றல் சால் துன்முகனும் அங்கு ஆர்த்து எழ
மேல் திண்வாயிலில் மேவினர் வீடினார்
காற்றின் மாமகன் கை எனும் காலனால். 6.14.81
நாற்றிசை வாயில்களிலும் நடந்த போரைப்பற்றித் தூதுவர் இராவணனுக்குச் சொல்லுதல்
7225. அன்ன காலையில் அந்த அந்த வாயிலில்
துன்னு போர் கண்ட தூதுவர் ஓடினார்
‘மன்ன! கேள் ‘என வந்து வணங்கினார்
சென்னி தாழ்க்கச் செவியிடைச் செப்பினார். 6.14.82
கீழைவாயில் தூதுவர் கூறியது
7226. கீழை வாயில் கிளர் நிருதர் படை
ஊழி நாளினும் வெற்றி கொண்டு உற்ற நின்
ஆழி அன்ன அனீகத் தலைமகன்
பூழியான்; உயிர் புக்கது விண் என்றார். 6.14.83
தனெ்திசைவாயில் தூதுவர் சொல்வது
7227. ‘வென்றி வேல் கை நிருதர் வெகுண்டு எழ
தனெ்திசைப் பெரும் வாயிலில் சேர்ந்துழி
பொன்றினான் அச் சுபாரிசன்; போயினார்
இன்று போன இடம் அறியோம் ‘என்றார். 6.14.84
வடக்கு, மேற்கு வாயிலோர் கூற்று
7228. ‘வடக்கு வாயிலில் வச்சிர முட்டியும்
குடக்கு வாயிலில் துன்முகக் குன்றமும்
அடக்கரும் வலத்து ஐம்பது வெள்ளமும்
படச் சிதைந்தது நம்படை ‘என்றனர். 6.14.85
கேட்ட இராவணன் சினத்தல்
7229. என்ற வார்த்தை எரி உகும் நெய் எனச்
சென்று சிந்தை புகுதலும் சீற்றத் தீ
கன்று கண்ணின் வழிச் சுடர் கான்றிட
நின்று நின்று நெடிது உயிர்த்தான் அரோ. 6.14.86
இராவணன் கேள்விக்குத் தூதுவர் விடை கூறுதல் (7230-7232)
7230. மறித்தும் ‘ஆர் அவன் ஆர் உயிர் வவ்வினார்?
இறுத்துக் கூறும் ‘என்றான்; இசை எங்கணும்
நிறுத்தும் நீலன் நெடும் பெருஞ் சேனையை
ஒறுத்து மற்று அவனோடும் வந்து உற்றனன். 6.14.87
7231. உற்ற போதின் இருவரும் ஒன்று அல
கற்ற போர்கள் எலாம் செய்த காலையில்
நெற்றி மேல் மற்ற அந் நீலன் நெடுங்கையால்
எற்ற வீந்தனன் என்ன இயம்பினார். 6.14.88
7232. அன்னவன்னொடும் போன அரக்கரில்
நல் நகர்க்கு வந்தோம் ஐய! நாங்களே
என்ன என்ன எயிற்று இகல் வாய்களைத்
தின்னத் தின்ன எரிந்தன திக்கு எலாம். 6.14.89
தூதுவர் கூறியதை இராவணன் சினத்தால் மீட்டும் கூறுதல்
7233. மாடு நின்ற நிருதரை வன்கணான்
ஓட நோக்கி ‘உயர்படையான் மற்று அக்
கோடு கொண்டு பொருத குரங்கினால்
வீடினான்! ‘என்று மீட்டும் விளம்பினான். 6.14.90
இராவணன் தனக்குள் சொல்வது (7234-7236)
7234. “கட்டது இந்திரன் வாழ்வை; கடைமுறை
பட்டது இங்கு ஓர் குரங்கு படுக்க “ என்று
இட்ட வெஞ்சொல் எரியினில் என் செவி
சுட்டது; என் உடை நெஞ்சையும் சுட்டதால்; 6.14.91
7235. ‘கருப்பை போல் குரங்கு எற்ற கதிர் சுழல்
பொருப்பை ஒப்பவன் தான் இன்று பொன்றினான்;
அருப்பம் என்று பகையையும் ஆர் அழல்
நெருப்பையும் இகழ்ந்தால் அது நீதியோ? 6.14.92
7236. ‘நிற்க அன்னது நீர்நிறை கண்ணினார்
வற்கம் ஆயின மாப் படை ஓடும் சென்று
ஒற்கம் வந்து உதவாமல் உறுக என
வில் கொள் வெம்படை வீரரை ஏவினான். 6.14.93
இராவணன் தேர் ஏறுதல்
7237. மண்டுகின்ற செருவின் வழக்கு எலாம்
கண்டு நின்று கயிலை இடந்தவன்
புண் திறந்தன கண்ணினன் பொங்கினான்
திண்திறல் நெடுந்தேர் தரெிந்து ஏறினான் 94
தேரின் சிறப்பு
7238. ஆயிரம் பரிபூண்டது; அதிர் குரல்
மா இரும் கடல் போன்றது; வானவர்
தேயம் எங்கும் திரிந்தது; திண்திறல்
சாய இந்திரனே பண்டு தந்தது. 6.14.95
நாணொலி செய்தல்
7239. ஏற்றி எண்ணி இறைஞ்சி இடக்கையால்
ஆற்றினான் தன் அடுசிலை அன்னதின்
மாற்றம் என் நெடு நாண் ஒலி வைத்தலும்
கூற்றினாரையும் ஆருயிர் கொள்வதே. 6.14.96
இராவணன் போர்க் கோலம்
7240. மற்றும் வான்படை வானவர் மார்பிடை
இற்று இலாதன எண்ணும் இலாதன
பற்றினான்; கவசம் படர் மார்பிடைச்
சுற்றினான்; நெடுந் தும்பையும் சூடினான். 6.14.97
முத்துக்குடைக்கீழ் கவரிவீச இராவணன் இருத்தல்
7241. பேரும் கற்றைக் கவரிப் பெருங்கடல்
நீரும் நீர் நுரையும் என நின்றவன்
ஊரும் வெண்மை உவாமதிக் கீழ் உயர்
காரும் ஒத்தனன் முத்தின் கவிகையான். 6.14.98
முரசு முதலியன முழங்கல் (7242-7243)
7242. போர்த்த சங்கப் படகம் புடைத்திட
சீர்த்த சங்கக் கடல் உக தேவர்கள்
வேர்த்து அசங்க விசும்பு வெடித்திட
ஆர்த்த சங்கம் அறைந்த முரசமே. 6.14.99
7243. தேரும் மாவும் படைஞரும் தறெ்றிட
மூரி வல் நெடுந் தானையின் முற்றினான்;
நீர் ஒர் ஏழும் முடிவில் நெருக்கும் நாள்.
மேரு மால்வரை என்ன விளங்கினான். 6.14.100
வீணைக்கொடி விண்ணில் பறத்தல்
7244. ஏழ் இசைக் கருவி வீற்றிருந்தது என்னினும்
சூழ் இருந் திசைகளைத் துடக்கும் தொல்கொடி
வாழிய உலகு எலாம் வளைந்து வாய் இடும்
ஊழியின் அந்தகன் நாவின் ஓங்கவே. 6.14.101
தேவர்கள் கலங்குதல்
7245. வேணு உயர் நெடுவரை அரக்கர் வேலைக்கு ஓர்
தோணி பெற்றனர் அது கடக்கும் தொல்செருக்
காணிய வந்தவர் கலக்கம் கைம் மிகச்
சேண் உயர் விசும்பிடை அமரர் சிந்தவே. 6.14.102
இராவணன் கண்ணில் தோன்றிய புகையின் சிறப்பு
7246. கண் உறு கரும்புகை கதுவ கார் நிறத்து
அண்ணல் வாள் அரக்கர்தம் அரத்தப் பங்கிகள்
வெண்நிறம் கோடலின் உருவின் வேற்றுமை
நண்ணினர் நோக்கவும் அயிர்ப்பு நல்கவே. 6.14.103
கொடிகள்
7247. கால் நெடுந் தேர் உயர் கதலியும் கரத்து
ஏனையர் ஏந்திய பதாகை ஈட்டமும்
ஆனையின் கொடிகளும் அளவித் தோய்தலால்
வான யாறொடு மழை ஒற்றி வற்றவே. 6.14.104
சேமத் தேர்
7248. ஆயிரம் கோடி பேய் அங்கை ஆயுதம்
தூயன சுமந்து பின்தொடர சுற்று ஒளிர்
சேயிரு மணி நெடுஞ் சேமத் தேர் தரெிந்து
ஏயின ஆயிரத்து இரட்டி எய்தவே; 6.14.105
இராவணன் போர்க்களத்தில் தோன்றுதல்
7249. ஊன்றிய பெரும்படை உலைய உற்று உடன்
ஆன்ற போர் அரக்கர்கள் நெருங்கி ஆர்த்து எழ
தோன்றினன் உலகு எனத் தொடர்ந்து நின்றன
மூன்றையும் கடந்து ஒரு வெற்றி முற்றினான். 6.14.106
இராவணன் வந்ததை இராமனுக்கு ஒற்றர் அறிவித்தல்
7250. ஓது உறு கருங்கடற்கு ஒத்த தானையான்
தீது உறு சிறுதொழில் அரக்கன் சீற்றத்தான்
போதுறு பெருங்களம் புகுந்துளான் எனத்
தூதுவர் நாயகற்கு அறியச் சொல்லினார். 6.14.107
அதுகேட்டு இராமன் தோள் பூரித்தல்
7251. ஆங்கு அவன் அமர்த் தொழிற்கு அணுகினான் என
‘வாங்கினன் சீதையை ‘என்னும் வன்மையால்
தீங்கு உறு பிரிவினால் தேய்ந்த தேய்வு அற
வீங்கின இராகவன் வீரத் தோள்களே. 6.14.108
இராமன் போர்க் கோலம்
7252. தொடை உறு வற்கலை ஆடை சுற்றி மேல்
புடை உறு வயிர வாள் பொலிய வீக்கினான்
இடை உறு கருமத்தின் எல்லை கண்டவர்
கடை உறு நோக்கினின் காணும் காட்சியான். 6.14.109
காலில் கழல் கட்டியது
7253. ஒத்து உறு சிறு குறள் பாதம் உற்ற நாள்
வித்தக அருமறை உவகை மிக்கு மேல்
பத்து உள விரல் புடை பரந்த பண்பு எனச்
சித்திரச் சேவடிக் கழலும் சேர்த்தினான். 6.14.110
மார்பில் கவசமணிந்தது
7254. பூ இயல் மீன் எலாம் பூத்த வான் நிகர்
மேவு இரும் கவசம் இட்டு இறுக்கி வீக்கினன்
தேவியைத் திருமறு மார்பில் தீர்தலால்
நோவு இலள் என்பது நோக்கினான் கொலோ. 6.14.111
முன்கையில் உறையணிந்தது
7255. நல்புறக் கோதை தன் நளினச் செங்கையில்
நிற்பு உற சுற்றிய காட்சி நேமியான்
கற்பகக் கொம்பினைக் கரிய மாசுணம்
பொற்புறத் தழுவிய தன்மை போன்றதால். 6.14.112
விரலில் உறையணிந்தது
7256. புதை இருள் பொழுதினும் மலரும் பொங்கு ஒளி
சிதைவு அருநாள் அலர்ச் சிவந்த தாமரை
இதழ் தொறும் வண்டு வீற்று இருந்தது ஆம் எனத்
ததைவுறு நிரை விரல் புட்டில் தாங்கினான். 6.14.113
தூணியைத் தோளில் கட்டியது
7257. பல் இயல் உலகு உறு பாடை பாடு அமைந்து
எல்லை இல் நூல் கடல் ஏற நோக்கிய
நல் இயல் நவை அறு கவிஞர் நா வரும்
சொல் எனத் தொலைவு இலாத் தூணி தூக்கினான். 6.14.114
தும்பை மாலை சூடியது
7258. கிளர் மழைக் குழுவிடைக் கிளர்ந்த மின் என
அளவு அரு செஞ்சுடர்ப் பட்டம் ஆர்த்தனன்;
இளவரிக் கவட்டு இலை ஆரொடு ஏர் பெறத்
துளவொடு தும்பையும் சுழியச் சூடினான். 6.14.115
இராமன் வில்லை எந்தியது (7259-7260)
7259. ஓங்கிய உலகமும் உயிரும் உட்புறம்
தாங்கிய பொருள்களும் மறையும் தான் எனின்.
நீங்கியது யாவது? நினைக்கிலேம்; அவன்
வாங்கிய வரிசிலை மற்று ஒன்றே கொலோ? 6.14.116
7260. நாற் கடல் உலகமும் விசும்பும் நாள் மலர்
தூர்க்க வெம் சேனையும் தானும் தோன்றினான்
மால்கடல் வண்ணன் தான் வளரும் மால் இரும்
பாற் கடலோடும் வந்து எதிரும் பான்மை போல். 6.14.117
இராமன் பின்னணியில் நின்ற இலக்குவனோடு சேர்தல்
7261. ஊழியின் உருத்திரன் உருவு கொண்டு தான்
ஏழ் உயர் உலகமும் எரிக்கின்றான் என
வாழிய வரிசிலைத் தம்பி மாப் படைக்
கூழையின் நெற்றி நின்றானை கூடினான். 6.14.118
அரக்கர் சேனையும் வானர சேனையும் பொருதல்
7262. என்புழி நிருதராம் ஏழு வேலையும்
மின்பொழி எயிறு உடை கவியின் வெள்ளமும்
தனெ்புலக் கிழவனும் செய்கை தீட்டிடப்
புன்புலக் களத்திடைப் பொருத போலுமால். 6.14.119
7263. துமிந்தன தலை; குடர் சொரிந்த; தேர் குலம்
அவிந்தன; புரவியும் ஆளும் அற்றன;
குவிந்தன பிணக்குவை; சுமந்து கோள் நிலம்
நிமிர்ந்தது; பரந்தது குருதி நீத்தமே. 6.14.120
வானரங்களின் வீரப் போர் (7264-7265)
7264. கடுங் குரங்கு இருகையால் எற்ற கால் வயக்
கொடுங் குரம் துணிந்தன புரவி; குத்தினால்
ஒடுங்கு உரம் துணிந்தனர் நிருதர்; ஓடின
நெடுங் குரம்பு என நிறை குருதி நீத்தமே. 6.14.121
7265. ‘தறெ்கு இது; வடக்கு இது ‘என்னத் தேர்கிலாப்
பல் குவை பரந்தன; குரக்குப் பல்பிணம்
பொன் குவை நிகர்த்தன; நிருதர் போர் சவம்
கல் குவை நிகர்த்தன; மழையும் காட்டின. 6.14.122
இராவணன் வில்லின் நாணினைத் தறெித்தல் (7266-7268)
7266. அவ் வழி இராவணன் அமரர் அஞ்சத் தன்
வெவ்விழி நெருப்பு உக வில்லின் நாணினைச்
செவ்வழிக் கோதையின் தறெிப்பச் சிந்தின
எவ்வழி மருங்கினும் இரிந்த வானரம். 6.14.123
7267. உரும் இடித்துழி உலைந்து ஒளிக்கும் நாகம் ஒத்து
இரியல் உற்றன சில; இறந்தவால் சில;
வெருவல் உற்றன சில; விம்மல் உற்றன;
பொருகளத்து உயிரொடும் புரண்டு போம் சில. 6.14.124
7268. பொர கருநிற நெடு விசும்பு போழ்பட
இரக்கம் இல் இராவணன் எறிந்த நாணினால்
குரக்கினம் உற்றது என் கூறல்? தன் குலத்து
அரக்கரும் அனையது ஓர் அச்சம் எய்தினார். 6.14.125
இராவணனது நாணொலியால் நடுங்காதவர்கள் (7269-7270)
7269. வீடணன் ஒருவனும் இளைய வீரனும்
கோடு அணை குரங்கினுக்கு அரசும் கொற்றவன்
நாடினர் நின்றனர்; நாலு திக்கினும்
ஓடினர் அல்லவர்; ஒளித்தது உம்பரே. 6.14.126
7270. எடுக்கின், நானிலத்தை ஏந்தும் இராவணன் எறிந்த நாணால்
நடுக்கினான், உலகை என்பார்; நல்கினான், என்னல் பாற்றோ?
மிடுக்கினால் மிக்க வானோர், மேக்கு உயர் வெள்ளம் மேல் நாள்
கெடுக்கும் நாள் உருமின் ஆர்ப்புக் கேட்டனர் என்னக் கேட்டார். 6.14.127
இராவணனும் சுக்கிரீவனும் பொருதல் (7271-7274)
7271. ஏந்திய சிகரம் ஒன்று, அங்கு இந்திரன் குலிசம் என்னக்
காந்திய உருமின் விட்டான், கவிக்குலத்து அரசன்; அக்கல்
நீந்தரு நெருப்புச் சிந்தி நிமிர்தலும், நிருதர்க்கு எல்லாம்
வேந்தனும் பகழி ஒன்றால், வெண்துகள் ஆக்கி, வீழ்த்தான். 6.14.128
7272. அண்ணல் வாள் அரக்கன் விட்ட அம்பினால் அழிந்து, சிந்தி,
திண் நெடுஞ் சிகரம், நீறு ஆய்த் திசைதிசை சிந்தலோடும்,
கண் நெடுங் கடுந்தீக் கால, கவிக்குலத்து அரசன், கையால்
மண்மகள் வயிறு கீற, மரம் ஒன்று வாங்கிக் கொண்டான். 6.14.129
7273. கொண்ட மா மரத்தை அம்பின் கூட்டத்தால், காட்டத் தக்க
கண்டம் ஆயிரத்தின் மேலும் உள எனக் கண்டம் கண்டான்
விண்ட வாள் அரக்கன் மீது விசும்பு எரி பரக்க விட்டான்
பண்டை மால் வரையின் மிக்கது ஒருகிரி, பரிதி மைந்தன். 6.14.130
7274. அக்கிரிதனையும் ஆங்கு ஓர் அம்பினால் அறுத்து மாற்றி,
திக்கு இரிதரப் போர் வென்ற சிலையினை வளைய வாங்கி,
சுக்கிரிவன்தன் மார்பில் புங்கமும் தோன்றா வண்ணம்
உக்கிர வயிர வாளி ஒன்று புக்கு ஒளிக்க எய்தான். 6.14.131
சுக்கிரீவன் தளர்ச்சிகண்டு அனுமன் வருதல் (7275-7277)
7275. சுடுகணை படுதலோடும் துளங்கினான்; துளங்கா முன்னம்
குட திசை வாயில் நின்ற மாருதி, புகுந்த கொள்கை
உடன் இருந்து அறிந்தான் என்ன, ஓர் இமை ஒடுங்கா முன்னர்,
வட திசை வாயில் நின்ற மன்னவன் முன்னன் ஆனான். 6.14.132
7276. பரிதி சேய் தேறா முன்னம், பருவலி அரக்க! பல் போர்
புரிதியோ என்னோடு? என்னா, புகை எழ விழித்துப் பொங்கி,
வருதியே? வா! என்பான் மேல் மலை ஒன்று நிலையின் வாங்கி,
சுருதியே அனைய தோளால் வீசினான், காலின் தோன்றல். 6.14.133
7277. மீ எழு மேகம் எல்லாம் வெந்து, வெங்கரியின் சிந்தித்
தீ எழ, விசும்பின் ஊடு செல்கின்ற செயலை நோக்கி,
காய் கணை ஐந்தும் ஐந்தும் கடுப்புறத் தொடுத்துக் கண்டித்து
ஆயிரம் கூறு செய்தான் அமரரை அலக்கண் செய்தான். 6.14.134
அனுமன் வீசிய மலை இராவணனது வாகுவலயத்தைப் பொடியாக்குதல் (7278-7281)
7278. மீட்டு ஒரு சிகரம் வாங்கி, வீங்குதோள் விசையின் வீசி,
ஓட்டினான்; ஓட்ட, வானத்து உரு மினும் கடுக ஓடி,
கோட்டு வெஞ்சிலையின் வாளி முன் சென்று, கொற்றப் பொன் தோள்
பூட்டிய வலயத்தொடும் பூழியாய்ப் போயிற்று அன்றே. 6.14.135
7279. மெய் எரிந்து அழன்று பொங்கி, வெங்கணான் விம்மி, மீட்டு ஓர்
மை வரை வாங்குவானை, வரிசிலை உளைய வாங்கிக்
கையினும் தோளின் மேலும் மார்பினும் கரக்க வாளி
ஐ இரண்டு அழுந்த எய்தான்; அவன் அவை ஆற்றி நின்றான். 6.14.136
7280. யார் இது செய்யகிற்பார்? என்று கொண்டு இமையோர் ஏத்த
மாருதி, பின்னும் ஆங்கு ஓர் மராமரம் கையின் வாங்கி
வேரொடும் சுழற்றி விட்டான்; விடுதலும், இலங்கை வேந்தன்
சாரதி தலையைத் தள்ளிச் சென்றது நிருதர் சாய. 6.14.137
7281. மாறி ஒர் பாகன் ஏற, மறிதிரைப் பரவை பின்னும்
சீறியது அனையன் ஆன செறிகழல் அரக்கன், தயெ்வ
நூறு கோல் நொய்தின் எய்தான்; அவை உடல் நுழைதலோடும்,
ஆறு போல் சோரி சோர, அனுமனும் அலக்கண் உற்றான். 6.14.138
இராவணன் வீரப் பேச்சு (7282-7283)
7282. “கல் கொண்டும் மரங்கள் கொண்டும் கைக் கொண்டும் களித்து நும் வாய்ச்
சொல் கொண்டும் மயிரின் புன் தோல் தோள் கொண்டும் துள்ளி வெள்ளிப்
பல் கொண்டும் மலைகின்றாரில் பழிகொண்டு பயந்தது யான் ஓர்
வில் கொண்டு நின்ற போது விறல் கொண்டு மீள்திர் போலாம். 6.14.139
7283. என்று த்து, எயிற்றுப் பேழ்வாய் எரி உக நகை செய்து, யாணர்ப்
பொன் தொடர் வடிம்பின் வாளி கடை உகத்து உருமு போல
ஒன்றின் ஒன்று அதிகம் ஆக, ஆயிர கோடி உய்த்தான்;
சென்றது குரங்குச் சேனை, கால் எறி கடலின் சிந்தி. 6.14.140
இலக்குவன் இராவணனோடு போர் செய்ய வருதல்
7284. கலக்கிய அரக்கன் வில்லின் கல்வியும், கவிகள் உற்ற
அலக்கணும், தலைவர் செய்த தன்மையும், அமையக் கண்டான்,
இலக்குவன், ‘என் கை வாளிக்கு இலக்கு இவன்; இவனை இன்று
விலக்குவென் ‘என்ன வந்தான், வில் உடை மேரு என்ன. 6.14.141
இலக்குவன் நாணொலி செய்தல்
7285. தேயத்தின் தலைவன் மைந்தன் சிலையை நாண் எறிந்தான்; தீய
மாயத்தின் வினையை வல்லார் நிலை என்னை? முடிவில் மாரி
ஆயத்தின் இடி இது என்றே அஞ்சின உலகம்; யானை
சீயத்தின் முழக்கம் கேட்டல் போன்றனர் செறுநர் எல்லாம். 6.14.142
இராவணன் வியத்தல்
7286. ஆற்றல் சால் அரக்கன் தானும், அயல் நின்ற வயவர் நெஞ்சம்
வீற்று வீற்று ஆகி உற்ற தன்மையும், வீரன் தம்பி
கூற்றின் வெம்புருவம் அன்ன சிலை நெடுங் குரலும் கேளா,
ஏற்றினன் மகுடம் ‘என்னே இவன் ஒரு மனிசன் என்னா! ‘ 6.14.143
இலக்குவன் அம்புமாரி (7287-7298)
7287. கட்டு அமை தேரின் மேலும், களி நெடுங் களிற்றின் மேலும்,
விட்டு எழு புரவி மேலும், வெள் எயிற்று அரக்கர் மேலும்
முட்டிய மழையின் துள்ளி முறை இன்றி மொய்க்குமா போல்
பட்டன பகழி; எங்கும் பரந்தது, குருதிப் பௌவம் 6.14.144
7288. நகங்களின் பெரிய வேழ நறை மத அருவி காலும்
முகங்களில் புக்க வாளி அபரத்தை முற்றி மொய்ம்பர்
அகங்களிற் கழன்று, தேரின் அச்சினை உருவி, அப்பால்
உகங்களின் கடை சென்றாலும், ஓய்வு இல ஓடலுற்ற. 6.14.145
7289. நூக்கிய களிறும் தேரும் புரவியும் நூழில் செய்ய,
ஆக்கிய அரக்கர் தானை, ஐ இருகோடி, கை ஒத்து
ஓக்கிய படைகள் வீசி உடற்றிய உலகம் செய்த
பாக்கியம் அனைய வீரன் தம்பியைச் சுற்றும் பற்றி. 6.14.146
7290. ‘உறுபகை மனிசன் இன்று எம் இறைவனை உறுகிற்பானேல்
வெறுவிது, நம்தம் வீரம் ‘ என்று ஒரு மேன்மை தோன்ற
எறிபடை அரக்கர் ஏற்றார் ஏற்ற கை மாற்றான் என்னா
வறியவர் ஒருவன் வண்மை பூண்டவன் மேல் சென்றென்ன. 6.14.147
7291. அறுத்தனன் அரக்கர் எய்த எறிந்தன, அறுத்து, அறாத
பொறுத்தனன், பகழி மாரி பொழிந்தனன்; உயிரின் போகம்
வெறுத்தனன் நமனும்; வேலை உதிரத்தின் வெள்ளம் மீள
மறித்தன; மறிந்த எங்கும், பிணங்கள் அம் மலைகள் மான. 6.14.148
7292. தலை எலாம் அற்ற; முற்றும் தாள் எலாம் அற்ற; தோளாம்
மலை எலாம் அற்ற; பொன் தார் மார்பு எலாம் அற்ற; சூலத்து
இலை எலாம் அற்ற; வீரர் எயிறு எலாம் அற்ற; கொற்றச்
சிலை எலாம் அற்ற; கற்ற செரு எலாம் அற்ற, சிந்தி. 6.14.149
7293. தேர் எலாம் துமிந்த; மாவின் திறமெலாம் துமிந்த; செங்கண்
கார் எலாம் துமிந்த; வீரர் கழல் எலாம் துமிந்த; கண்டத்
தார் எலாம் துமிந்த; நின்ற தனு எலாம் துமிந்த; தத்தம்
போர் எலாம் துமிந்த; கொண்ட புகழ் எலாம் துமிந்து போய. 6.14.150
7294. அரவு இயல் தறுகண் வன்தாள் ஆள் விழ ஆள் மேல் வீழ்ந்த
புரவி மேல் பூட்கை வீழ்ந்த; பூட்கைமேல் பொலன் தேர் வீழ்ந்த;
நிரவிய தேரின் மேன்மேல் நெடுந்தலை கிடந்த; நெய்த்தோர்
விரவிய களத்துள் எங்கும் வெள்ளிடை அரிது வீழ. 6.14.151
7295. கடுப்பின் கண் அமரரேயும் ‘கார்முகத்து அம்பு கையால்
தொடுக்கின்றான் துரக்கின்றான் ‘ என்று உணர்ந்திலர்; துரந்த வாளி
இடுக்கு ஒன்றும் காணார்; காண்பது எய்த கோல் நொய்தின் எய்திப்
படுக்கின்ற பிணத்தின் பம்மல் குப்பையின் பரப்பே பல்கால். 6.14.152
7296. கொற்ற வாள் கொலை வேல், சூலம் கொடுஞ் சிலை முதல வாய
வெற்றி வெம்படைகள் யாவும் வெந் தொழில் அரக்கர் மேல் கொண்டு
உற்றன கூற்றும் அஞ்ச ஒளிர்வன ஒன்று நூறாய்
அற்றன அன்றி ஒன்றும் அறாதன இல்லை அன்றே. 6.14.153
7297. குன்று அன யானை, மானக் குரகதம், கொடித் தேர், கோப
வன் திறல் ஆளி, சீயம் மற்றைய பிறவும் முற்றும்
சென்றன எல்லை இல்லை; திரிந்தில சிறிது போதும்;
நின்றன இல்லை; எல்லாங் கிடந்தன, நெளிந்து, பார்மேல். 6.14.154
7298. சாய்ந்தது நிருதர் தானை தமர்தலை இடறித் தள்ளுற்று
ஓய்ந்ததும் ஒழிந்தது ஓடி உலந்ததும் ஆக; அன்றே
வேய்ந்தது வாகை வீரற்கு இளையவன் வரிவில்; வெம்பிக்
காய்ந்தது அவ் இலங்கை வேந்தன் மனம் எனும் காலச் செந் தீ. 6.14.155
இராவணனெருங்கவும் இலக்குவன் பெயராது நிற்றல் (7299-7302)
7299. காற்று உறழ் கலின மான் தேர் கடிதினின் கடாவிக் கண்ணுற்று
ஏற்றனன் இலங்கை வேந்தன் எரி விழித்து இராமன் தம்பி
கூற்று மால் கொண்டது என்னக் கொல்கின்றான் குறுகச் சென்றான்
சீற்றமும் தானும் நின்றான்; பெயர்ந்திலன் சிறிதும் பாதம். 6.14.156
7300. காக்கின்ற என் நெடுங்காவலின் வலி நீக்கிய கள்வா!
போக்கு இன்று உனக்கு அரிதால் எனப் புகன்றான்; புகை உயிர்ப்பான்
கோக்கின்றன தொடுக்கின்றன கொலை அம்புகள் தலையோடு
ஈர்க்கின்றன கனல் ஒப்பன எய்தான்; இகல் செய்தான். 6.14.157
7301. எய்தான் சரம் எய்தாவகை இற்று ஈக என இடையே
வைதால் என வைது ஆயின வடி வாளியின் அறுத்தான்
ஐது ஆதலின் அறுத்தாய்; இனி அறுப்பாய் என அழி கார்
பெய்தால் எனச் சர மாரிகள் சொரிந்தான், துயில் பிரிந்தான். 6.14.158
7302. ஆம் குஞ்சரம் அனையான் விடும் அயில் வாளிகள் அவை தாம்
வீங்கும் சரற் பருவத்து இழி மழை போல்வன விலக்காத்
தூங்குஞ் சர நெடும் புட்டிலின் சுடர் வேலவற்கு இளையான்
வாங்குஞ் சரம் வாங்காவகை அறுத்தான் அறம் மறுத்தான். 6.14.159
அனுமன் இடையே புகுதல்
7303. அப்போதையின் அயர்வு ஆறிய அனுமான் அழல் விழியா
பொய்ப் போர் சில புரியேல் இனி என வந்து இடை புகுந்தான்
கைப் போதகம் என முந்து அவன் கடுந்தேர் எதிர் நடந்தான்
இப் போர் ஒழி; பின் போர் உள; இவை கேள் என இசைத்தான். 6.14.160
அனுமன் பேருருவங்கொண்டு இராவணனெதிர் நிற்றல்
7304. ‘வென்றாய் உலகு ஒருமூன்றையும், மெலியா நெடு வலியால்;
தின்றாய் செறிகழல் இந்திரன் இசையை; திசை திரித்தாய்;
என்றலும், இன்று அழிவு உன்வயின் எய்தும், என இசையா,
நின்றான் அவன் எதிரே, உலகு அளந்தான் என நிமிர்ந்தான். 6.14.161
இராவணனுக்கு அனுமன் தன் பேருருவத்தைக் காட்டல்
7305. எடுத்தான் வலத் தடக்கையினை; அது போய், உலகு எல்லாம்
அடுத்து ஆங்கு உற, அளந்தான் திருவடியின் வடிவு என்ன,
மடுத்து ஆங்கு உற வளர்ந்தான் என வளர்கின்றவன், உருவம்
கடுத்தான் எனக் கொடியாற்கு எதிர் ‘காண்பாய் ‘எனக்காட்டா. 6.14.162
அனுமனது வீரப் பேச்சு (7306-7309)
7306. வில் ஆயுதம் முதலாகிய வய வெம்படை மிடலோடு
எல்லாம் இடை பயின்றாய்; புயம் நால் ஐந்தினோடு இயைந்தாய்;
இல்லாய் செரு; வலியாய்; திறல் மறவோய்! இனி, எதிரே
நில்லாய், என நிகழ்த்தா, நெடு நெருப்பாம் என உயிர்ப்பான். 6.14.163
7307. நீள் ஆண்மையின் உடனே எதிர் நின்றாய்; இஃது ஒன்றோ?
வாள் ஆண்மையும், உலகு ஏழினொடு உடனே உடை வலியும்,
தாளாண்மையும், நிகர் ஆரும் இல் தனி ஆண்மையும், இனி நின்
தோளாண்மையும், இசையோடு உடன் துடைப்பேன், ஒரு புடைப்பால். 6.14.164
7308. ‘பரக்கப் பல த்து என்? படர் கயிலைப் பெருவரைக்கும்,
அரக்கு உற்று எரி பொறிக் கண் திசைக் கரிக்கும், சிறிது அனுங்கா
உரக் குப்பையின் உயர்தோள் பல உடையாய்! உரன் உடையாய்
குரக்குத் தனிக் கரத்தின் புடை புடைப்பு ஆற்றுதி கொல்லாம். 6.14.165
7309. ‘என்தோள் வலி அதனால் எடுத்து யான் எற்றவும், இறவா
நின்றாய் எனின், நீ பின் எனை நின் கைத்தல நிரையால்,
குன்றே புரை தோளாய்! மிடல் கொடு குத்துதி; குத்தப்
பொன்றேன்; எனின், நின்னோடு எதிர் பொருகின்றிலென் ‘என்றான். 6.14.166
அனுமன் கூறியது கேட்டு இராவணன் வியத்தல் (7310-7315)
7310. காரின் கரியவன், மாருதி கழற, கடிது உகவா,
வீரற்கு உரியது சொற்றனை; விறலோய் ஒரு தனி என்
நேர் நிற்பவர் உளரோ பிறர் நீயல்லவர்? இனி உன்
பேருக்கு உலகு அளவே? இனி, உளவோ பிற? என்றான். 6.14.167
7311. ‘ஒன்று ஆயுதம் உடையாய் அலை; ஒரு நீ எனது உறவும்
கொன்றாய்; உயர்தேர்மேல் நிமிர் கொடு வெஞ்சிலை கோலி,
வன் தானையின் உடன் வந்த என் எதிர் வந்து, நின் வலியால்
நின்றாயொடு நின்றார் இனி நிகரோ? , நெடியோய். 6.14.168
7312. ‘முத்தேவர்கள் முதலாயினர், முழுமூன்று உலகிடையும்
எத்தேவர்கள், எத்தானவர், எதிர்வார் இகல் என்நேர்,
பித்து ஏறினர் அல்லால்? இடைபேராது, எதிர், “மார்பில்
குத்தே ‘‘ என நின்றாய்; இது கூறும் தரம் அன்றால். 6.14.169
7313. ‘பொரு கைத் தலம் இருபத்து உள; புகழும் பெரிது உளதால்;
வரு கைத்தல மத வெங்கரி வசைபட்டன; வருவாய்,
இரு கைத்தலம் உடையாய், எதிர் இவை சொற்றனை இனிமேல்
தருகைக்கு உரியது ஓர் கொற்றம் என்? அமர்தக்கதும் அன்றால். 6.14.170
7314. ‘திசை அத்தனையையும் வென்றது சிதைய, புகழ் தறெும் அவ்
வசை மற்று இனி உளதே? எனது உயிர் போல்வரும் மகனை
அசையத் தரை அரைவித்தனை; அழி செம்புனல் அதுவோ
பசை அற்றிலது; ஒரு நீ, எனது எதிர் நின்று இவை பகர்வாய்! 6.14.171
7315. ‘பூணித்து இவை செய்தனை; அதனால், பொதுவே;
பாணித்தது; பிறிது என் சில பகர்கின்றது? பழியால்
நாணித் தலை இடுகின்றிலென்; நனிவந்து, உலகு எவையும்
காண, கடிது எதிர் குத்துதி ‘ என்றான், வினைகடியான். 6.14.172
அனுமன் இராவணனைக் குத்துதல்
7316. ‘வீரத்திறம் இது நன்று! ‘என வியவா, மிக விளியா,
தேரில் கடிது இவரா, முழுவிழியில் பொறி சிதறா,
ஆரத்தொடு கவசத்து உடல் பொடிபட்டு உக, அவன் மா
மார்பில் கடிது எதிர் குத்தினன், வயிரக் கரம் அதனால். 6.14.173
அனுமனது குத்தின் விளைவுகள் (7317-7319)
7317. அயிர் உக்கன, நெடு மால் வரை; அனல் உக்கன, விழிகள்;
தயிர் உக்கன, முழுமுளைகள்; தலை உக்கன; தரியா
உயிர் உக்கன, நிருதக்குலம்; உயர் வானரம் எவையும்,
மயிர் உக்கன, எயிறு உக்கன; மழை உக்கன, வானம். 6.14.174
7318. வில் சிந்தின நெடு நாண்; நிமிர் கரை சிந்தின, விரிநீர்;
கல் சிந்தின, குல மால்வரை; கதிர் சிந்தின, சுடரும்;
பல் சிந்தின மதம் யானைகள்; படை சிந்தினர், எவரும்;
எல் சிந்தின எரி சிந்தின, இகலோன் மணி அகலம். 6.14.175
7319. கைக்குத்து அது படலும் கழல் நிருதர்க்கு இறை கறைநீர்
மைக் குப்பையின் எழில் கொண்டு ஒளிர் வயிரத் தட மார்பில்
திக்கில் சின மத யானைகள் வய வெம்பணை செருவில்
புக்கு இற்றன, போகாதன, புறம் உக்கன, புகழின். 6.14.176
இராவணன் தள்ளாடுதல்
7320. அள்ளாடிய கவசத்து அவிர்மணி அற்றன, திசைபோய்
விள்ளா நெடு முழுமீன் என விழ, வெம்பொரி எழ, நின்று
உள் ஆடிய நெடுங்கால் பொர, ஒடுங்கா உலகு உலையத்
தள்ளாடிய வடமேருவின் சலித்தான், அறம் வலித்தான். 6.14.177
இராவணன் சலித்தமை கண்டு வானவரும் வானரரும் மகிழ்தல்
7321. ஆர்த்தார், விசும்பு உறைவோர் நெடிது; அனுமான்மிசை அதிகம்
தூர்த்தார், நறு முழு மென்மலர்; இசை ஆசிகள் சொன்னார்;
வேர்த்தார் நிருதர்கள்; வானரர் வியந்தார், ‘இவன் விசயம்
தீர்த்தான் ‘என உவந்து ஆடினர், முழு மெய்ம்மயிர் சிலிர்த்தார். 6.14.178
இராவணன் உணர்வு பெறுதல்
7322. கற்று அங்கியின் நெடுவாயுவின் நிலை கண்டவர், கதியால்
மற்று அங்கு ஒரு வடிவு உற்று, அது மாறாடுறு காலைப்
பற்று அங்கு அருமையின், அன்னது பயில்கின்றது ஒர் செயலால்,
உற்று அங்கு அது புறம்போய், உடல் புகுந்தால் என உணர்ந்தான். 6.14.179
இராவணன் அனுமனைப் புகழ்தல் (7323-7326)
7323. உணரா, நெடிது உயிரா, உதவா, எரி உமிழா,
‘இணை யாரும் இலாய்! என்றனை எய்தா வலி செய்தாய்!
அணையாய்; இனி, எனது ஊழ் ‘ என அடரா, எதிர்படரா,
பணையார் புயம் உடையான், இடை சில இம்மொழி பகர்வான். 6.14.180
7324. வலி என்பதும் உளதே, அது நின்பாலது மறவோய்!
அலி என்பவர், புறம் நின்றவர், உலகு ஏழினும் அடைத்தாய்;
‘சலி ‘என்று எதிர் மலரோன் தந்தால், இறை சலியேன்;
மெலிவு என்பதும் உணர்ந்தேன்; எனை வென்றாய், இனி, விறலோய்! 6.14.181
7325. ‘ஒன்று உண்டு இனி, நேர்குவது; உன் மார்பின், என் ஒருகை,
குன்றின் மிசை கடைநாள் விழும் உருமு ஏறு எனக் குத்த
நின்று நிலைதருவாய் எனின், நின் நேர் பிறர் உளரோ?
இன்றும் உளை; என்றும் உளை; இலை ஓர் பகை ‘என்றான். 6.14.182
7326. என்றான், எதிர் சென்றான்; இகல் அடு மாருதி, ‘எனை நீ
வென்றாய் அலையோ? உன் உயிர் வீடாது, செய்தாய்;
நன்றாக நின் நிலை நன்று ‘ என நல்கா, எதிர் நடவா,
குன்று ஆகிய திரள் தோள! உன் கடன் கொள்க என கொடுத்தான். 6.14.183
இராவணன் குத்துதல்
7327. உறுக்கி, தனி எதிர் நின்றவன் உரத்தில், தனது ஒளிர் பல்
இறுக்கி, பில நெடுவாய் மடித்து, எரி கண்தொறும் இழிய,
முறுக்கிப் பொதி நிமிர் பல விரல் நெரிய, திசை முரியக்
குறுக்கிக் கரம், நெடுந்தோள் புறம் நிமிரக், கொடு குத்த. 6.14.184
இராவணன் குத்த அனுமன் சலித்தல்
7328. பள்ளக்கடல் கொள்ளப் படர் படி பேரினும் பதையான்,
வள்ளப் பெரு வெள்ளத்து எறுழ் வலியாரினும் வலியான்,
கள்ளக் கறை உள்ளத்து அதிர்கழல் வெய்யவன் கரத்தால்
தள்ள, தளர் வெள்ளிப் பெருங்கிரி ஆம் எனச் சலித்தான். 6.14.185
அனுமான் சலிக்கச் சலித்தவை
7329. சலித்த காலையில், இமையவர் உலகொடும் சலித்தார்;
சலித்தால் அறம்; சலித்தது, மெய்ம்மொழி; தகவும்
சலித்தது; அன்றியும், புகழொடு சுருதியும் சலித்த;
சலித்த நீதியும்; சலித்தன கருணையும் தவமும். 6.14.186
அப்போது வானரர் மலையை எடுத்து இராவணன்மேல் வீசுதல் (7330-7334)
7330. அனைய காலையின், அரிக்குலத் தலைவர் அவ் வழியோர்
எனையர் அன்னவர் யாவரும், ஒரு குவடு ஏந்தி,
நினைவின் முன் நெடு விசும்பு ஒரு வெளி இன்றி நெருங்க,
வினை இது என்று அறிந்து இராவணன் மேல் செலவிட்டார். 6.14.187
7331. ஒத்த கையினர், ஊழியின் இறுதியின் உலகை
மெத்த மீது எழு மேகத்தின் விசும்பு எலாம் மிடைய,
பத்து நூறு கோடிக்கு மேல் பனிபடு சிகரம்,
எத்த, மேல் செல எறிந்தனர்; பிறிந்தனர் இமையோர். 6.14.188
7332. தருக்கி, வீசிட, விசும்பு இடம் இன்மையின், தம்மின்
நெருக்குகின்றன, நின்றன; சென்றில, நிறைந்த;
அருக்கனும் மறைந்தான்; இருள் விழுங்கியது அண்டம்;
சுருக்கம் உற்றனர், அரக்கர் என்று இமையவர் சூழ்ந்தார். 6.14.189
7333. ஒன்றின் ஒன்று பட்டு உடைவன, இடித்து உரும் அதிரச்,
சென்ற வன்பொறி மின்பல செறிந்திட, தயெ்வ
வென்றி வில் என விழுநிழல் விரிந்திட, மேல் மேல்
கன்றி ஓடிடக் கல் மழை நிகர்த்தன கற்கள். 6.14.190
7334. இரிந்து நீங்கினது இராக்கதப் பெரும்படை; எங்கும்
விரிந்து சிந்தின, வானத்து மீனோடு விமானம்;
சொரிந்த வெம்பொறி பட, கடல் சுவறின; தோற்றம்
கரிந்த கண்டகர் கண்மணி; என் பல கழறி? 6.14.191
இராவணன் அம்மலைகளை அம்புகளால் விலக்கல்
7335. இறுத்தது இன்று உலகு என்பது ஓர் திமிலம் வந்து எய்த
கறுத்த சிந்தையன் இராவணன் அனையது கண்டான்;
ஒறுத்து வானவர் புகழ்கொண்ட பாரவில் உளைய
அறுத்து நீக்கினன் ஆயிர கோடிமேல் அம்பால். 6.14.192
இராவணன் அம்பால் மலைகள் சாம்பலாதல்
7336. காம்பு எலாம் கடுந்துகள் பட, களிறு எலாம் துணிய,
பாம்பு எலாம் பட, யாளியும் உழுவையும் பாற,
கூம்பல் மாமரம் எரிந்து உக, குறுந்துகள் நெறுங்க,
சாம்பல் ஆயின, தடவரை சுடுகணை தடிய. 6.14.193
இராவணன் திறலை இமையவர் வியத்தல் (7337-7345)
7337. உற்றவா என்றும், ஒன்று நூறு ஆயிரம் உருவா
இற்றவா என்றும், இடிப்பு உண்டு பொடிப் பொடியாகி
அற்றவா என்றும், அரக்கனை அடுசிலைக் கொடியோன்
கற்றவா என்றும், வானவர் கைத்தலம் குலைந்தார். 6.14.194
7338. ‘அடல் துடைத்தும் ‘என்று அரிக்குல வீரர் அன்று எறிந்த
திடல் துடைத்தன, தசமுகன் கரம்; அவை திசை சூழ்
கடல் துடைத்தன; களத்தின் நின்று உயர்தரு பூமி
உடல் துடைத்தன உதிரமும் துடைத்தது, ஒண்புடவி. 6.14.195
7339. “கொல்வென், இக்கணமே மற்று இவ் வானரக் குழுவை;
வெல்வென், மானிடர் இருவரை ‘‘ எனச் சினம் வீங்க,
வல்வன் வார்சிலை பத்து உடன் இடக் கையில் வாங்கி,
தொல் வான் மாரியின் தொடர்வன சுடு சரம் துரந்தான். 6.14.196
7340. ஐ இரண்டு கார்முகத்தினும் ஆயிரம் பகழி
கைகள் ஈர் ஐந்தினாலும், வெங்கடுப்பினில் தொடுப்புற்று
எய்ய, எஞ்சின, வானமும், இருநில வரைப்பும்,
மொய் கொள் வேலையும், திசைகளும், சரங்களாய் முடிந்த. 6.14.197
7341. அந்தி வானகம் ஒத்தது, அவ் அமர் களம், உதிரம்
சிந்தி; வேலையும் திசைகளும் நிறைந்தன சரத்தால்
பந்தி பந்தியாய் மடிந்தது, வானரப் பகுதி;
வந்து மேகங்கள் படிந்தன, பிணப் பெரு மலை மேல். 6.14.198
7342. நீலன் அம்பொடு சென்றிலன்; நின்றிலன் அனிலன்;
காலனார் வயத்து அடைந்திலன், ஏவுண்ட கவயன்;
ஆலம் அன்னது ஓர் சரத்தொடும் அங்கதன் அயர்ந்தான்;
சூலம் அன்னது ஓர் வாளியால் சோம்பினன், சாம்பன். 6.14.199
7343. மற்றும் வீரர்தம் மருமத்தின் அயில் அம்பு மடுப்ப,
கொற்ற வீரமும் ஆண்தொழில் செய்கையும் குறைந்தார்;
சுற்றும் வானரப் பெருங்கடல் தொலைந்தது; தொலையாது
உற்று நின்றவர் ஓடினர்; இலக்குவன் உருத்தான். 6.14.200
7344. நூறு கோடிய, நூறு நூறாயிர கோடி,
வேறு வேறு எய்த சரம் எலாம் சரங்களால் விலக்கி,
ஏறு சேவகன் தம்பி, அவ் இராவணன் எடுத்த
ஆறு நாலு வெஞ்சிலையையும் கணைகளால் அறுத்தான். 6.14.201
7345. ஆர்த்து, வானவர் ஆவலம் கொட்டினர்; அரக்கர்
வேர்த்து, நெஞ்சமும் வெதும்பினர்; வினை அறு முனிவர்
தூர்த்து, நாள்மலர் சொரிந்தனர்; இராவணன் தோளைப்
பார்த்து உவந்தனன்; குனித்தது, நல்லறம் பாடி. 6.14.202
இலக்குவனை இராவணன் பாராட்டல் (7346-7352)
7346. ‘நன்று, போர்வலி; நன்று போர் ஆள் வலி; வீரம்
நன்று; நோக்கமும் நன்று; கைக் கடுமையும் நன்று;
நன்று கல்வியும்; நன்று நின் ஆண்மையும் நலனும்;
என்று கைம் மறித்து, இராவணன், ‘ஒருவன் நீ ‘என்றான். 6.14.203
7347. ‘கானின் அன்று இகல் கரன் படை படுத்த அக் கரியோன்
தானும், இந்திரன் தன்னை ஓர் தனுவலம் தன்னால்
வானில் வென்ற என் மதலையும், வரிசிலை பிடித்த
யானும், அல்லவர் யார் உனக்கு எதிர்? ‘என்றும் இசைத்தான். 6.14.204
7348. ‘வில்லினால் இவன் வெலப்படான் ‘ எனச் சினம் வீங்க,
‘கொல்லும் நாளும் இன்று இது ‘ எனச் சிந்தையில் கொண்டான்,
பல்லினால் இதழ் அதுக்கினன்; பருவலிக் கரத்தால்
எல்லின் நான்முகன் கொடுத்தது ஓர் வேல் எடுத்து எறிந்தான். 6.14.205
7349. எறிந்த கால வேல், எய்த அம்பு யாவையும் எரிந்து
பொறிந்து போய் உக, தீ உக, விசையினிற் போகி
செறிந்த தாரவன் மார்பிடைச் சென்றது; சிந்தை
அறிந்த மைந்தனும் அமர் நெடுங் களத்திடை அயர்ந்தான். 6.14.206
7350. இரியலுற்றது வானரப் பெரும்படை; இமையோர்
பரியலுற்றனர்; உலைந்தனர், முனிவரும் பதைத்தார்;
விரி திரைக் கடற்கு இரட்டி கொண்டு ஆர்த்தனர் விரவார்;
திரிகை ஒத்தது, மண்தலம்; கதிர் ஒளி தீர்ந்த. 6.14.207
7351. அஞ்சினான் அலன், அயன் தந்த வேலினும் ஆவி
துஞ்சினான் அலன்; துளங்கினான் ‘ என்பது துணியா
‘எஞ்சு இல் யாக்கையை எடுத்துக் கொண்டு அகல்வென் ‘என்று எண்ணி
நஞ்சினால் செய்த நெஞ்சினான் பார்மிசை நடந்தான். 6.14.208
7352. உள்ளி வெம் பிணத்து உதிரநீர் வெள்ளத்தின் ஓடி
அள்ளி அம்கைகள் இருபதும் பற்றிப் பண்டு அரன் மா
வெள்ளி அம்கிரி எடுத்தது வெள்கினான் ஏனை
எள் இல் பொன்மலை எடுக்கல் உற்றான் என எடுத்தான். 6.14.209
இலக்குவனை இராவணன் எடுக்க இயலாமை
7353. அடுத்த நல் உணர்வு ஒழிந்திலன், அம்பரம் செம்பொன்
உடுத்த நாயகன் தானென உணர்தலின், ஒருங்கே
தொடுத்த எண்வகை மூர்த்தியைத் துளக்கி வெண்பொருப்பை
எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் இராமனுக்கு இளையான். 6.14.210
இராவணன் கைகளுக்கிடையில் இலக்குவன்
7354. தலைகள் பத்தொடும் தழுவிய தசமுகத் தலைவன்,
நிலைகொள் மாகடல் ஒத்தனன்; கரம், புடை நிமிரும்
அலைகள் ஒத்தன; அதில் எழும் இரவியை ஒத்தான்,
இலை கொள் தண்துழாய் இலங்குதோள் இராமனுக்கு இளையான் 6.14.211
இலக்குவனை அனுமன் எடுத்துச் செல்லுதல் (7355-7357)
7355. எடுக்கல் உற்று, அவன் மேனியை ஏந்துதற்கு ஏற்ற
மிடுக்கு இலாமையின், இராவணன் வெய்துயிர்ப்பு உற்றான்;
இடுக்கில் நின்ற அம்மாருதி புகுந்து எடுத்து ஏந்தி,
தடுக்கலாதது ஓர் விசையினன் எழுந்து, அயல் சார்ந்தான். 6.14.212
7356. தொக ஒருங்கிய ஞானம் ஒன்று எவரினும் தூயான்
தகவு கொண்டது ஓர் அன்பு எனும் தனித்துணை அல்லால்,
அகவு காதலால், ஆண்தகை என்னினும், அனுமன்,
மகவு கொண்டு போய் மரம் புகும் மந்தியை நிகர்த்தான். 6.14.213
7357. மையல் கூர்மனத்து இராவணன் படையினால் மயங்கும்
செய்ய வாள் அரி ஏறு அனான் சிறிதினில் தேற,
கையும் கால்களும் நயனமும் கமலமே அனைய
பொய் இலாதவன் நின்றிடத்து, அனுமனும் போனான். 6.14.214
இராமன் இராவணனோடு போர்க்குப் போதல்
7358. போன காலையில், புக்கனன் புங்கவன், போர் வேட்டு
யானை மேல் செலும் கோள் அரி ஏறு இவன் என்ன;
வானுேளார் கணம் ஆர்த்தது; தூர்த்தது மலர், மேல்;
தூ நவின்ற வேல் அரக்கனும், தேரினைத் துரந்தான். 6.14.215
இராமன் தேரில்லாது செல்வதுகண்டு அனுமன் வருதல் (7359-7360)
7359. தேரில் போர் அரக்கன் செலச், சேவகன் தனியே
பாரில் செல்கின்ற வறுமையை நோக்கினன், பரிந்தான்,
‘சீரில் செல்கின்றது இல்லை இச் செரு ‘எனும் திறத்தால்,
வாரின் பெய் கழல் மாருதி கதுமென வந்தான். 6.14.216
7360. ‘நூறு பத்துடை நொறில் பரித் தேரின்மேல் நுன்முன்
மாறு இல் போர் அரக்கன் பொர, நிலத்து நீ மலைதல்
வேறு காட்டும், ஓர் வெறுமையை; மெல்லிய எனினும்
ஏறு நீ, ஐய! என்னுடைத் தோளின் மேல் ‘என்றான் 6.14.217
இராமன் நன்றென அனுமன் தோள்மேல் அமர்தல்
7361. ‘நன்று, நன்று! ‘என நாயகன் ஏறினன் நாமக்
குன்றின் மேல் இவர் கோள் அரி ஏறு எனக் கூடி,
அன்று வானவர் ஆசிகள் இயம்பினர்; ஈன்ற
கன்று தாங்கிய தாய் என மாருதி களித்தான். 6.14.218
அனுமனைக் கண்டு கலுழனும் அனந்தனும் நாணுதலும் நடுங்குதலும்
7362. மாணி ஆய் உலகு அளந்த நாளவன் உடை வடிவை
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்;
காணியாகப் பண்டு உடையனாம் ஒருதனிக் கலுழன்
நாணினான்; மற்றை அனந்தனும் தலை நடுக்கு உற்றான். 6.14.219
அனுமன் தோளில் இராமன் அமர்ந்தமைக்குவமை (7363-7364)
7363. ஓதம் ஒத்தனன் மாருதி; அதன் அகத்து உறையும்
நாதன் ஒத்தனன் என்னினோ, துயில்கிலன் நம்பன்;
வேதம் ஒத்தனன் மாருதி; வேதத்தின் சிரத்தின்
போதம் ஒத்தனன் இராமன்; வேறு இதின் இலை பொருவே. 6.14.220
7364. தகுதியாய் நின்ற வென்றி மாருதி தனிமை சார்ந்த
மிகுதியை வேறு நோக்கின், எவ்வணம் விளம்பும் தன்மை?
புகுதி கூர்ந்துள்ளார் வேதம் பொதுவுறப் புலத்து நோக்கும்
பகுதியை ஒத்தான்; வீரன், மேலைத் தன் பதமே ஒத்தான். 6.14.221
அனுமானது தோளின் பெருமை
7365. மேருவின் சிகரம் போன்றது என்னினும், வெளிறு உண்டாமால்
மூரிநீர் அண்டம் எல்லாம் வயிற்றிடை முன்னம் கொண்ட
ஆரியற்கு, அனேக மார்க்கத்தால், இடம் வலமது ஆகச்
சாரிகை திரியல் ஆன மாருதி தாமப் பொன் தோள் 6.14.222
அருந்தவர் ஆசியும் வானவர் வருகையும்
7366. ஆசி சொல்லினர் அருந்தவர்; அறம் எனும் தயெ்வம்
காசு இல் நல் நெடுங் கரம் எடுத்து ஆர்த்தது; கயிலை
ஈசன் நான்முகன் என்றிவர் முதலிய இமையோர்
பூசல் காணிய வந்தனர் அந்தரம் புகுந்தார். 6.14.223
இராமன் வில்நாணைத் தறெித்தல்
7367. அண்ணல், அஞ்சன வண்ணனும், அமர் குறித்து அமைந்தான்
எண்ணரும் பெருந் தனிவலிச் சிலையை நாண் எறிந்தான்;
மண்ணும் வானமும், மற்றைய பிறவும், தன் வாய்ப் பெய்து
உண்ணும் காலத்து, அவ் உருத்திரன் ஆர்ப்பு ஒத்தது ஓதை. 6.14.224
நாணொலியின் விளைவுகள்
7368. ஆவி சென்றிலர், நின்றிலர், அரக்கரோடு இயக்கர்;
நா உலர்ந்தனர்; கலங்கினர், விலங்கினர்; நடுங்கி,
கோவை நின்ற பேர் அண்டமும் குலைந்தன; குலையாத்
தேவ தேவனும், விரிஞ்சனும், சிர தலம் குலைந்தார். 6.14.225
இராம இராவணர் போர் (7369-7373)
7369. ஊழி வெங் கனல் ஒப்பன, துப்பு அன உருவ,
ஆழி நீரையும் குடிப்பன, திசைகளை அளப்ப,
வீழின், மீச்செலின், மண்ணையும், விண்ணையும், தொளைப்ப,
ஏழு வெஞ்சரம், உடன் தொடுத்து, இராவணன் எய்தான். 6.14.226
7370. எய்த வாளியை, ஏழினால், ஏழினோடு ஏழு
செய்து, வெஞ்சரம் ஐந்து ஒரு தொடையினில் சேர்த்தி,
வெய்து கால வெங்கனல்களும் வெள்குற, பொறிகள்
பெய்து போம்வகை, இராகவன் சிலையினில் பெய்தான். 6.14.227
7371. வாளி ஐந்தையும் ஐந்தினால் விசும்பிடை மாற்றி,
ஆளி மொய்ம்பின் அவ் அரக்கனும், ஐ - இரண்டு அம்பு
தோளில் நாண் உற வாங்கினன், துரந்தனன்; சுருதி
ஆளும் நாயகன் அவற்றையும் அவற்றினால் அறுத்தான். 6.14.228
7372. அறுத்து, மற்று அவன் அயல் நின்ற அளப்பரும் அரக்கர்
செறுத்து விட்டன படை எலாம் கணைகளால் சிந்தி,
இறுத்து வீசிய கிரிகளை எரி உக நூறி,
ஒறுத்து, மற்று அவர் தலைகளால் சில மலை உயர்த்தான். 6.14.229
7373. மீனுடைக் கருங்கடல் புரை இராக்கதர் விட்ட
ஊனுடைப் படை, இராவணன் அம்பொடும் ஓடி,
வானரக் கடல் படாவகை, வாளியால் மாற்றி,
தானுடைச் சரத்தால் அவர் தலை மலை தடிந்தான். 6.14.230
அனுமானின் வேகம்
7374. இம்பரான் எனின், விசும்பினன் ஆகும், ஓர் இமைப்பில்;
தும்பை சூடிய இராவணன் முகம் தொறும் தோன்றும்;
வெம்பு வஞ்சகர் விழி தொறும் திரியும்; மேல் நின்றான்
அம்பின் முன் செலும், மனத்திற்கும் முன் செலும் அனுமன் 6.14.231
போர்க்களக் காட்சிகள் (7375-7381)
7375. ஆடுகின்றன, கவந்தமும்; அவற்றொடும் ஆடிப்
பாடுகின்றன, அலகையும்; நீங்கிய பனைக்கைக்
கோடு துன்றிய கரிகளும் பரிகளும் தலைக் கொண்டு
ஓடுகின்றன, உலப்பு இல, உதிர ஆறு உவரி. 6.14.232
7376. அற்ற ஆழிய, அறுப்புண்ட அச்சினம், அம்போடு
இற்ற கொய் உளைப் புரவிய, தேர்க்குலம் எல்லாம்;
ஒற்றை வாளியோடு உருண்டன, கருங் களிற்று ஓங்கல்;
சுற்றும் வாசியும் துமிந்தன, அமர்க்களம் தொடர்ந்த. 6.14.233
7377. தேர் இழந்து, வெஞ்சிலைகளும் இழந்து, செந்தறுகண்
கார் இழந்து, வெம் கலின மாக் கால்களும் இழந்து,
சூர் இழந்து வன்கவசமும் இழந்து, துப்பு இழந்து,
தார் இழந்து, பின் இழந்தனர் நிருதர், தம் தலைகள். 6.14.234
7378. அரவின் நுண் இடை அரக்கியர், கணவர் தம் அற்ற
சிரமும் அன்னவை ஆதலின், வேற்றுமை தரெியார்
புரவியின் தலை பூட்கையின் தலை இவை பொருத்திக்
கரவு இல் இன் உயிர் துறந்தனர், கவவுறத் தழுவி. 6.14.235
7379. ஆர்ப்பு அடங்கின, வாய் எலாம்; அழல் கொழுந்து ஒழுகப்
பார்ப்பு அடங்கின, கண் எலாம்; பல வகைப் படைகள்
தூர்ப்பு அடங்கின, கை எலாம்; தூளியின் படலைப்
போர்ப்பு அடங்கின உலகு எலாம்; முரசு எலாம் போன. 6.14.236
7380. ஒன்றும் நூற்றினோடு ஆயிரம் கொடும் தலை, உருட்டி,
சென்று தீர்வன எனப் பலகோடியும் சிந்தி,
நின்ற தேரொடும் இராவணன் ஒருவனும் நிற்பக்,
கொன்று வீழ்த்தினது இராகவன் சரம் எனும் கூற்றம். 6.14.237
7381. தேரும் யானையும் புரவியும் அரக்கரும் தறெ்றி,
பேரும் ஓர் இடம் இன்று எனத் திசைதொறும் பிறங்கி,
காரும் வானமும் தொடுவன பிணக் குவை கண்டான்,
மூரி வெஞ்சிலை இராவணன் அரா என முனிந்தான். 6.14.238
இராவணன் இராமன்மேல் அம்பு எய்தல் (7382-7387)
7382. முரண்தொகும் சிலை இமைப்பினில் முறையுற வாங்கி,
புரண்டு தோள் உறப் பொலங்கொள் நாண் வலம்படப் போக்கி,
திரண்ட வாளிகள் சேவகன் மரகதச் சிகரத்து
இரண்டு தோளினும் இரண்டு புக்கு அழுந்திட, எய்தான். 6.14.239
7383. முறுவல் எய்திய முகத்தினன், முளரி அம் கண்ணன்,
மறு இலாதது ஓர் வடிக்கணை தொடுத்து, உற வாங்கி,
இறுதி எய்தும் நாள், கால்பொர, மந்தரம் இடையிட்டு
அறுவது ஆம் என, இராவணன் சிலையினை அறுத்தான். 6.14.240
7384. மாற்று வெஞ்சிலை வாங்கினன், வடிம்புடை நெடுநாண்
ஏற்று உறா முனம், இடை அறக் கணைகளால் எய்தான்;
காற்றினும் கடிது ஆவன, கதிர் மணி நெடுந்தேர்
ஆற்று, கொய் உளைப் புரவியின் சிரங்களும் அறுத்தான். 6.14.241
7385. மற்றும் வெம்படை வாங்கினன் வழங்குறா முன்னம்,
அற்று அழிந்து உக அயில் நெடுங் கணைகளால் அறுத்தான்;
கொற்ற வெண்குடை கொடியொடுந் துணிபடக் குறைத்தான்;
கற்றை அம் சுடர்க் கவசமும் கட்டு அறக் கழித்தான் 6.14.242
7386 மாற்றுத் தேர் அவண் வந்தன வந்தன வாரா,
வீற்று வீற்று உக, வெயில் உமிழ் கடுங்கணை விட்டான்;
சேற்றுச் செம்புனல் படுகளப் பரப்பிடைச் செங்கண்
கூற்றும் கை எடுத்து ஆடிட, இராவணன் கொதித்தான். 6.14.243
7387. செறிந்த பல் மணிப் பெருவனம் திசை பரந்து எரிய,
பொறிந்த வாய், வயக் கடுஞ் சுடர்க் கணை படும் பொழுதின்
எறிந்த கால் பொர, மேருவின் கொடுமுடி இடிந்து
மறிந்து வீழ்ந்ததும் ஒத்தது, அவ் அரக்கன்தன் மகுடம். 6.14.244
இராவணனது முடியை வீழ்த்துதல் (7388-7389)
7388. மின்னும் பல் மணி மவுலிமேல் ஒருகணை விட்டான்;
அன்ன காய்கதிர் இரவிமேல் பாய்ந்த போர் அனுமன்
என்னல் ஆயது ஓர் விசையினில் சென்று, அவன் தலையில்
பொன்னின் மாமணி மகுடத்தை வீழ்த்தது புணரி. 6.14.245
7389. அண்டர் நாயகன் அடுசிலை உதைத்த பேர் அம்பு
கொண்டு போகப் போய்க் குரைகடல் குளித்த அக் கொள்கை
மண்டலம் தொடர் வயங்கு வெங்கதிரவன், தன்னை
உண்ட கோெளாடும் ஒலிகடல் வீழ்ந்ததும் ஒக்கும். 6.14.246
மகுடமிழந்த இராவணன் நிலை (7390-7391)
7390. சொல்லும் அத்தனை அளவையில் மணிமுடி துறந்தான்;
எல் இமைத்து எழு மதியமும் ஞாயிறும் இழந்த
அல்லும் ஒத்தனன்; பகலும் ஒத்தனன்; அமர் பொருமேல்,
வெல்லும் அத்தனை அல்லது தோற்றிலா விறலோன். 6.14.247
7391. மாற்றருந் தட மணிமுடி இழந்த வாள் அரக்கன்,
ஏற்றம் எவ் உலகத்தினும் உயர்ந்துளன் எனினும்,
ஆற்றல் நல் நெடுங் கவிஞன் ஓர் அங்கதம் ப்ப,
போற்று அரும் புகழ் இழந்த பேர் ஒருவனும் போன்றான். 6.14.248
இராவணன் நாணுதல்
7392. ‘அறம் கடந்தவர் செயல் இது ‘ என்று, உலகு எலாம் ஆர்ப்ப,
நிறம் கரிந்திட, நிலம் விரல் கிளைத்திட, நின்றான்
இறங்கு கண்ணினன், எல் அழி முகத்தினன், தலையன்,
வெறுங் கை நாற்றினன், விழுதுடை ஆல் அன்ன மெய்யன் 6.14.249
இராவணனை நோக்கி இராமன் சொல்லத் தொடங்குதல்
7393. நின்றவன் நிலை நோக்கிய நெடுந்தகை, இவனைக்
கொன்றல் என்? தனி வெறும் கை நின்றான் ‘எனக் கொள்ளா,
‘இன்று அவிந்தது போலும், உன் தீமை ‘என்று இசையோடு
ஒன்ற வந்தன வாசகம், இனையன த்தான்; 6.14.250
இராமன் அறிவுரை (7394-7398)
7394. “அறத்தினால் அன்றி அமரர்க்கும் அருஞ்சமம் கடத்தல்
மறத்தினால் அரிது ‘‘ என்பது மனத்திடை வலித்தி;
பறத்தி, நின் நெடும்பதி புக; கிளையொடும், பாவி!
இறத்தி; யான் அது நினைகிலென் தனிமை கண்டு இரங்கி. 6.14.251
7395. ‘உடைப் பெருங் குலத்தினரொடும் உறவொடும்; உதவும்
படைக்கலங்களும், மற்று நீ தேடிய பலவும்,
அடைத்து வைத்தன திறந்து கொண்டு, ஆற்றுதி ஆயின்,
கிடைத்தி; அல்லையேல், ஒளித்தியால்; சிறுதொழில் கீழோய்! 6.14.252
7396. சிறையில் வைத்தவள் தன்னை விட்டு உலகினில் தேவர்
முறையில் வைத்த நின் தம்பியை இராக்கதர் முதல் பேர்
இறையில் வைத்து அவற்கு ஏவல் செய்து இருத்தியேல், இன்னும்
தரையில் வைக்கிலென், நின் தலை வாளியின் தடிந்து. 6.14.253
7397. ‘அல்லையாம் எனின், ஆர் அமர் ஏற்று நின்று ஆற்ற
வல்லையாம் எனின், உனக்குள வலி எலாம் கொண்டு,
“நில், ஐயா! “ என நேர் நின்று பொன்றுதி; எனினும்,
நல்லை ஆகுதி; “பிழைப்பு இனி உண்டு “ என நயவேல். 6.14.254
7398. ‘ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா ‘என நல்கினன் நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். 6.14.255
----------------
6.15 கும்பகருணன் வதைப் படலம்
இராவணன் இலங்கை நோக்கி மீளுதல் (7399-7400)
7399. வாரணம் பொருத மார்பும்,வரையினை எடுத்த தோளும்,
நாரத முனிவற்கு ஏற்பநயம்பட த்த நாவும்,
தார் அணி மவுலி பத்தும்,சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும் களத்தே போட்டு,வெறும் கையோடு இலங்கை புக்கான் 6.15. 1
7400. கிடந்த போர் வலி யார்மாட்டே?கெடாத வானவரை எல்லாம்
கடந்து போய், உலகம் மூன்றும்காக்கின்ற காவலாளன்,
தொடர்ந்து போம் பழியினோடும்,தூக்கிய கரங்கேளாடும்,
நடந்து போய், நகரம் புக்கான்;அருக்கனும் நாகம் சேர்ந்தான். 6.15.2
இராவணனது நாண நிலை
7401. மாதிரம் எவையும் நோக்கான்,வளநகர் நோக்கான், வந்த
காதலர் தம்மை நோக்கான்,கடல் பெருஞ் சேனை நோக்கான்,
தாது அவிழ் கூந்தல் மாதர்தனித்தனி நோக்க, தான் அப்
பூதலம் என்னும் நங்கைதன்னையே நோக்கிப் புக்கான். 6.15.3
அரண்மனையை அடைந்த இராவணன் தன்மை
7402. நாள் ஒத்த நளினம் அன்னமுகத்தியர் நயனம் எல்லாம்
வாள் ஒத்த; மைந்தர் வார்த்தைஇராகவன் வாளி ஒத்த;
கோள் ஒத்த சிறை வைத்து ஆண்டகொற்றவற்கு, அற்றைநாள் தன்
தோள் ஒத்த துணை மென் கொங்கைநோக்கு அங்குத் தொடர்கிலாமை. 6.15.4
தனிமையாக அரண்மனையை யடைந்த இராவணன் தூதரை அழைத்து வருமாறு கஞ்சுகியை ஏவுதல் (7403-7404)
7403. மந்திரச் சுற்றத்தாரும்,வாணுதல் சுற்றத்தாரும்
தந்திரச் சுற்றத்தாரும்,தன்கிளைச் சுற்றத்தாரும்,
எந்திரப் பொறியின் நிற்ப,யாவரும் இன்றி, தானே
சிந்துரக் களிறு கூடம்புக்கென, கோயில் சேர்ந்தான். 6.15.5
7404. ஆண்டு ஒரு செம்பொன் பீடத்துஇருந்து, தன் வருத்தம் ஆறி,
நீண்டு உயர் நினைப்பன் ஆகி,கஞ்சுகி அயல் நின்றானை,
‘ஈண்டு நம் தூதர்தம்மைஇவ்வழித் தருதி ‘என்றான்
பூண்டது ஓர் பணியன், வல்லைநால்வரைக் கொண்டு புக்கான். 6.15.6
வந்த தூதரிடம் எட்டுத் திக்கிலுமுள்ள அரக்கர் சேனையைக் கொணருமாறு பணித்தல் (7405-7406)
7405. மனகதி, வாயுவேகன்,மருத்தன், மாமேகன், என்று இவ்
வினை அறிதொழிலர் முன்னா,வாயிலர் விரவினாரை,
‘நினைவதன் முன்னம் நீர் போய்நெடுந்திசை எட்டும் நீந்தி,
கனைகழல் அரக்கர் தானைகொணருதிர், கடிதின் ‘என்றான்.
7
7406. ‘ஏழ் பெருங்கடலும், சூழ்ந்தஏழ் பெருந்தீவும், எண் இல்
பாழி அம்பொருப்பும், கீழ்பால்அடுத்த பாதாளத் துள்ளும்
ஆழி அம் கிரியின் மேலும்,அரக்கர் ஆனவரை எல்லாம்
தாழ்வு இலிர் கொணர்திர் என்றான்;அவர் அது தலைமேற் கொண்டார்.
8
இராவணன் மலர்ப் படுக்கையில் சேர்ந்து வருந்தியிருத்தல் (7407-7409)
7407. மூவகை உலகு உேளாரும் முறையில்நின்று ஏவல் செய்வார்,
பாவகம் இன்னது என்றுதரெிகிலர், பதைத்து விம்ம,
தூ அகலாத வை வாய்எஃகு உறத் தொளைக்கை யானை
சேவகம் அமைந்தது என்னச்செறிமலர் அமளி சேர்ந்தான்.
9
7408. பண் நிறை பவளச் செவ்வாய்ப்பைந்தொடிச் சீதை என்னும்
பெண் இறைகொண்ட நெஞ்சின்நாண் நிறைகொண்ட பின்னர்,
கண் இறைகோடல் செய்யான்,கையறு கவலை சுற்ற,
உள் நிறை மானம் தன்னைஉமிழ்ந்து, எரி உயிர்ப்பது ஆனான 6.15.10
7409. ‘வான் நகும்; மண்ணும் எல்லாம்நகும்; ‘ நெடு வயிரத் தோளான்
‘நான் நகு பகைஞர் எல்லாம்நகுவர் ‘என்று, அதற்கு நாணான்;
‘வேல் நகு நெடுங்கண்செவ்வாய் மெல்லியல், மிதிலை வந்த
சானகி நகுவள்‘ என்றேநாணத்தால் சாம்புகின்றான் 6.15.11
மாலியவான் வந்து ‘உற்றது என்? ‘என இராவணனை வினவுதல் (7410-7411)
7410. ‘ஆங்கு, அவன்தன் மூதாதைஆகிய, மூப்பின யாக்கை
வாங்கிய வரிவில் அன்ன,மாலியவான் என்று ஓதும்
பூங்கழல் அரக்கன் வந்துபொலம் கழல் இலங்கை வேந்தைத்
தாங்கிய அமளி மாட்டு,ஓர் தவிசுடைப் பீடம் சார்ந்தான். 6.15.12
7411. இருந்தவன், இலங்கை வேந்தன்இயற்கையை எய்த நோக்கி,
‘பொருந்த வந்துற்ற போரில்தோற்றனன் போலும் ‘என்னா,
‘வருந்தினை மனமும்; தோளும்வாடினை; நாளும் வாடாப்
பெருந்தவம் உடைய ஐய!என், உற்ற பெற்றி? ‘என்றான். 6.15.13
இராவணன் மாலியவானிடம் நிகழ்ந்தவற்றை த்தல் (7412-7429)
7412. கவை உறு நெஞ்சன், காந்திக்கனல்கின்ற கண்ணன், பத்துச்
சிவையின் வாய் என்னச்செந்தீ உயிர்ப்பு உறச் சிவந்த மூக்கன்,
நவை அறு பாகை அன்றிஅமுதினை நக்கினாலும்
சுவை அறப் புலர்ந்த நாவான்,இனையன சொல்லல் உற்றான் 6.15.14
7413. ‘சங்கம் வந்து உற்ற கொற்றத்தாபதர் தம்மோடு எம்மோடு
அங்கம் வந்து உற்றது ஆக,அமரர் வந்து உற்றார் அன்றே;
கங்கம் வந்து உற்ற செய்யகளத்து, நம் குலத்துக்கு ஒவ்வாப்
பங்கம் வந்து உற்றது அன்றி,பழியும் வந்து உற்றது என்றான். 6.15.15
7414. ‘முளை அமை திங்கள் சூடும்முக்கணான் முதல்வன் ஆக,
கிளை அமை புவனம் மூன்றும்வந்து உடன் கிடைத்தவேனும்,
வளை அமை வரிவில் வாளிமெய் உற வழங்கும் ஆயின்,
இளையவன் தனக்கும் ஆற்றாது,என் பெருஞ்சேனை நம்ப! 6.15.16
7415. ‘எறித்த போர் அரக்கர் ஆவிஎண் இலா வெள்ளம் எஞ்சப்
பறித்த போது, என்னை அந்தப்பரிபவம் முதுகில் பற்றப்
பொறித்த போது, அந்நாள் அந்தக்கூனி கூன்போக உண்டை
தறெித்த போது ஒத்தது அன்றி,சினம் உண்மை தரெிந்தது இல்லை. 6.15.17
7416. ‘மலை உறப் பெரியர் ஆயவாள் எயிற்று அரக்கர் தானை
நிலையுறச் செறிந்த வெள்ளம்நூற்று இரண்டு எனினும், நேரே
குலை உறக் குளித்த வாளி,குதிரையைக் களிற்றை ஆளைத்
தலை உறப் பட்டது அல்லால்,உடல்களில் தங்கிற்று உண்டோ? 6.15.18
7417. ‘போய பின், அவன் கைவாளி,உலகு எலாம் புகுவது அல்லால்,
ஓயும் என்று க்கல் ஆமோ,ஊழி சென்றாலும்? ஊழித்
தீயையும் தீய்க்கும்; செல்லும்திசையையும் தீய்க்கும்; சொல்லும்,
வாயையும் தீய்க்கும்; முன்னின்,மனத்தையும் தீய்க்கும் மன்னோ. 6.15.19
7418. ‘மேருவைப் பிளக்கும் என்றால்,விண் கடந்து ஏகும் என்றால்,
பாரினை உருவும் என்றால்,கடல்களைப் பருகும் என்றால்,
ஆருமே அவற்றின் ஆற்றல்;ஆற்றுமேல் அனந்தகோடி
மேருவும் விண்ணும் மண்ணும்கடல்களும், வேண்டும் அன்றே. 6.15.20
7419. ‘வரிசிலை நாணில் கோத்துவாங்குதல் விடுதல் ஒன்றும்
தரெிகிலர், அமரரேயும்; ஆர்அவன் செய்கை தேர்வார்?
“பொருசினத்து அரக்கர் ஆவி,போகிய போக “ என்று
கருதவே உலகம் எங்கும்சரங்களாய்க் காட்டும் அன்றே. 6.15.21
7420. ‘நல் இயல் கவிஞர் நாவில்பொருள் குறித்து அமைந்த ஞானச்
சொல் என, செய்யுள் கொண்டதொடை என, தொடையை நீக்கி
எல்லையில் செல்வம் தீராஇசை என, பழுது இலாத
பல் அலங்காரப் பண்பேகாகுத்தன் பகழி மாதோ. 6.15.22
7421. ‘இந்திரன் குலிச வேலும்,ஈசன் கை இலை மூன்று என்னும்
மந்திர அயிலும், மாயோன்வளை எஃகின் வரவும் கண்டேன்;
அந்தரம் நீளிது, அம்மா!தாபதன் அம்புக்கு ஆற்றா
நொந்தனென் யான் அலாதார்யார் அவை நோற்ககிற்பார்? 6.15.23
7422. ‘பேய் இரும் கணங்கேளாடுசுடு களத்து உறையும் பெற்றி
ஏயவன் தோள்கள் எட்டும்,இந்திரன் இரண்டு தோளும்
மா இரு ஞாலம் முற்றும்வயிற்றிடை வைத்த மாயன்
ஆயிரம் தோளும், அன்னான்விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்றா 6.15.24
7423. ‘சீர்த்த வீரியராய் உள்ளார்,செங்கண் மால் எனினும், யான் அக்
கார்த்த வீரியனை நேர்வார்உளர் எனக் கருதல் ஆற்றேன்;
பார்த்தபோது அவனும், மற்றுஅத் தாபதன் தம்பி பாதத்து
ஆர்த்தது ஓர் துகளுக்கு ஒவ்வான்;ஆர் அவற்கு ஆற்றகிற்பார்? 6.15.25
7424. ‘முப்புரம் முருங்கச் சுட்டமூரி வெஞ்சிலையும், வீரன்
அற்புத வில்லுக்கு, ஐயா!அம்பு எனக் கொளலும் ஆகா;
ஒப்பு வேறு க்கல் ஆவதுஒரு பொருள் இல்லை; வேதம்
தப்பின போதும், அன்னான்தனு உமிழ் சரங்கள் தப்பா. 6.15.26
7425. ‘உற்பத்தி அயனே ஒக்கும்;ஓடும் போது அரியே ஒக்கும்;
கற்பத்தில் அரனே ஒக்கும்,பகைஞரைக் கலந்த காலை;
சிற்பத்தின் நம்மால் பேசச்சிறியவோ? என்னைத் தீராத்
தற்பத்தைத் துடைத்த என்றால்,பிறிது ஒரு சான்றும் உண்டோ? 6.15.27
7426. ‘குடக்கதோ? குணக்கதேயோ?கோணத்தின் பாலதேயோ?
தடத்த பேர் உலகத்தேயோ?விசும்பதோ? எங்கும் தானோ?
வடக்கதோ? தறெ்கதோ? என்றுஉணர்ந்திலென் மனிதன் வல்வில்
இடத்ததோ? வலத்ததோ? என்றுஉணர்ந்திலென், யானும் இன்னும் 6.15.28
7427. ‘ஏற்றம் ஒன்று இல்லை என்பதுஏழைமைப் பாலது அன்றே?
ஆற்றல் சால் கலுழனேதான்ஆற்றுமே அமரின் ஆற்றல்!
காற்றையே மேற்கொண்டானோ?கனலையே கடாவினானோ?
கூற்றையே ஊர்கின்றானோ?குரங்கின்மேல் கொண்டு நின்றான். 6.15.29
7428. ‘போய் இனித்தரெிவது என்னே?பொறையினால் உலகம் போலும்
வேய் எனத்தகைய தோளிஇராகவன் மேனி நோக்கி,
தீ எனக் கொடிய வீரச்சேவகச் செய்கை கண்டால்
நாய் எனத் தகுதும் அன்றேகாமனும் நாமும் எல்லாம். 6.15.30
7429. ‘வாசவன், மாயன், மற்றைமலர் உேளான், மழுவாள் அங்கை
ஈசன், என்று இனைய தன்மைஇளிவரும் இவரால் அன்றி,
நாசம் வந்து உற்றபோதும்,நல்லது ஓர் பகையைப் பெற்றேன்;
பூசல் வண்டு உறையும் தாராய்!இது இங்குப் புகுந்தது ‘என்றான் 6.15.31
மாலியவானின் அறிவுரை (7430-7431)
7430. ‘முன் த்தேனை வாளாமுனிந்தனை; முனியா உம்பி
இன் ப் பொருளும் கேளாய்;ஏது உண்டு எனினும் ஓராய்;
நின் க்கு வேறு உண்டோ?நெருப்பு த்தாலும், நீண்ட
மின் த்தாலும், ஒவ்வாவிளங்கு ஒளி அலங்கல் வேலோய் 6.15.32
7431. ‘உளைவன எனினும், மெய்ம்மைஉற்றவர், முற்றும் ஓர்ந்து
விளைவன சொன்ன போதும்கொள்கிலை; விடுதி கண்டாய்;
கிளைதரு சுற்றம், வெற்றி,கேண்மை, நம் கல்வி, செல்வம்,
களைவு அருந்தானையோடும்கழிவது காண்டி ‘என்றான். 6.15.33
அப்போது மகோதரன் வந்து இராவணனுக்குச் சொல்லிய உறுதிமொழிகள்
7432. ஆயவன் த்தலோடும்அப்புறத்து இருந்தான், ஆன்ற
மாயைகள் பலவும் வல்லமகோதரன், கடிதின் வந்து,
தீ எழ நோக்கி, ‘என் இச்சிறுமை நீ செப்பிற்று? ‘என்னா,
ஓய்வுறு சிந்தையானுக்கு உறாதபேர் உறுதி சொன்னான். 6.15.34
7433. “நன்றி ஈது “ என்று கொண்டநயத்தினை நயந்து, வேறு
வென்றியே ஆக, மற்றுத்தோற்று உயிர் விடுதல் ஆக,
ஒன்றிலே நிற்றல் போலாம்,உத்தமற்கு உரியது? ஒல்கிப்
பின்றுமேல், அவனுக்கு அன்றோ,பழியொடு நரகம் பின்னை? 6.15.35
7434. ‘திரிபுரம் எரிய, ஆங்கு ஓர்தனிச் சரம் துரந்த செல்வன்,
ஒருவன் இப்புவனம் மூன்றும்ஓர் அடி ஒடுக்கிக் கொண்டோன்,
பொருது உனக்கு உடைந்துபோனார்; மானுடர் பொருத போர்க்கு
வெருவுதி போலும்; மானக்கயிலையை வெருவல் கண்டாய்! 6.15.36
7435. “வென்றவர் தோற்பர்; தோற்றோர்வெல்குவர்; எவர்க்கும் மேலாய்
நின்றவர் தாழ்வர்; தாழ்ந்தோர்உயர்குவர்; நெறியும் அஃதே ‘‘
என்றனர் அறிஞர் அன்றே!ஆற்றலுக்கு எல்லை உண்டோ?
புன்தவர் இருவர் போரைப்புகழ்தியோ? புகழ்க்கு மேலோய்! 6.15.37
7436. ‘தேவியை விடுதி ஆயின்,திறல் அது தீரும் அன்றே;
ஆவியை விடுவது அல்லால்அல்லது ஒன்று ஆவது உண்டோ?
தா அரும் பெருமை அம்மாநீ இனித் தாழ்த்தது என்னே?
காவல! விடுதி, இன்று இக்கையறு கவலை நொய்தின் 6.15.38
7437. ‘இனி இறை தாழ்த்தி ஆயின்இலங்கையும் யாமும் எல்லாம்
கனியுடை மரங்கள் ஆக,கவிக்குலம் கடக்கும் காண்டி;
பனியுடை வேலை, “சில்நீர்பருகினன் இரவி “ என்னத்
துனி உழந்து அயர்வது என்னே?துறத்தி இத் துன்பம் தன்னை. 6.15.39
7438. ‘முன், உனக்கு, இறைவர் ஆனமூவரும் தோற்றார்; தேவர்
பின் உனக்கு ஏவல் செய்யஉலகு ஒரு மூன்றும் பெற்றாய்;
புல் நுனைப் பனிநீர் அன்னமனிதரைப் பொருள் என்று உன்னி,
என், உனக்கு இளைய கும்பகருணனைஇகழ்ந்தது? எந்தாய்! 6.15.40
7439. ‘ஆங்கு அவன் தன்னைக் கூவி,ஏவுதி என்னின், ஐய!
ஓங்கலே போல்வான் மேனிகாணவே ஒளிப்பர் அன்றே;
தாங்குவர் செரு முன் என்னின்,தாபதர் உயிரைத் தானே
வாங்கும் ‘என்று இனைய சொன்னான்;அவன் அது மனத்துக் கொண்டான். 6.15.41
மகோதரன் கூறியதை இராவணன் புகழ்ந்து
மனம் வேறுபடுதல்
7440. ‘பெறுதியே, எவையும் செல்வம்;பேர் அறிவாள! சீரிது
அறிதியே; என்பால் வைத்தஅன்பினுக்கு அவதி இல்லை;
உறுதியே சொன்னாய் ‘என்னா,உள்ளமும் வேறுபட்டான்;
இறுதியே விளைவது ஆனால்,இடை, ஒன்றால் தடையும் உண்டோ? 6.15.42
இராவணன் கும்பகருணனை அழைத்து வருமாறு பணியாளரை ஏவ, அவர் கும்பகருணனது அரண்மனையை அடைதல்
7441. ‘நன்று இது கருமம் ‘என்னா,‘நம்பியை நணுக ஓடிச்
சென்று இவண் தருதிர் ‘என்றான்;என்றலும், நால்வர் சென்றார்;
தனெ்திசைக் கிழவன் தூதர்தேடினர் திரிவர் என்ன,
குன்றினும் உயர்ந்த தோளான்கொற்ற மாக் கோயில் புக்கார். 6.15.43
பணியாளர் கையாலும் தூணாலும் தாக்கவும் கும்பகருணன் எழுந்திராமை
7442. கிங்கரர் நால்வர் சென்று, அக்கிரி அனான் கிடந்த கோயில்
மங்குல் தோய் வாயில் சார்ந்து,‘மன்ன நீ உணர்தி ‘என்ன,
தம் கையின் எழுவினாலேதலை செவி தாக்கி, பின்னும்
வெம் கணான் துயில்கின்றானைவெகுளியால் இனைய சொன்னார். 6.15.44
எழுப்பச் சென்ற கிங்கரர் வெகுளியால் கூறுவன
(7443-7444)
7443. ‘உறங்குகின்ற கும்பகன்ன!உங்கள் மாய வாழ்வு எலாம்
இறங்குகின்றது, இன்று காண்;எழுந்திராய்! எழுந்திராய்
கறங்கு போல வில் பிடித்தகால தூதர் கையிலே
உறங்குவாய், உறங்குவாய்!இனிக் கிடந்து உறங்குவாய்! 6.15.45
7444. ‘என்றும் ஈறு இலா அரக்கர்இன்பமாய வாழ்வு எலாம்
சென்று தீய, நும் முனோன்தரெிந்து தீமை தேடினான்;
இன்று இறத்தல் திண்ணமாக,இன்னும் உன் உறக்கமே?
அன்று அலைத்த செங்கையால்அலைத்து அலைத்து, உணர்த்தினார். 6.15.46
கிங்கரர் கும்பகருணனை எழுப்ப முடியாமையைத் தரெிவிக்க, குதிரை யாளி முதலியவற்றை மிதிக்கவிட்டு எழுப்புங்கள் என்று இராவணன் ஏவுதல்
7445. என்று சொல்ல, அன்னவன்எழுந்திராமை கண்டு போய்,
‘மன்றல் தங்கு மாலை மார்ப!வன் துயில் எழுப்பலம், ‘
அன்று, ‘கொள்கை கேண்மின் ‘என்று,மாவொடு ஆளி ஏவினான்,
‘ஒன்றின் மேல் ஒர் ஆயிரம்உழக்கி விட்டு எழுப்புவீர். ‘ 6.15.47
யானையும் யாளியும் எழுப்ப முடியாமல் திரும்பியதைத் தரெிவிக்க, இராவணன் மல்லரைச் சேனையோடு செல்லுமாறு ஏவுதல்
7446. ‘அனைய தானை அன்று செல்ல,ஆண்டு நின்று பேர்ந்திலன்;
இனைய சேனை மீண்டது ‘என்றுஇராவணற்கு இயம்பலும்,
‘வினையம் வல்ல நீங்கள் உங்கள்தானையோடு சென்மின் ‘என்று,
இனைய மல்லர் ஆயிராரைஏவி நின்று இயம்பினான். 6.15.48
ஆயிரம் மல்லர்கள் கும்பகருணனை எழுப்புமாறு அவன் அரண்மனையை அடைதல்
7447. சென்றனர், பத்து நூற்றுச்சீரிய வீரர் ஓடி,
‘மன்றல் அம் தொங்கலான்தன்மனம்தனில் வருத்தம் மாற
இன்று இவன் முடிக்கும் ‘என்னா,எண்ணினர்; எண்ணி, ஈண்ட,
குன்றினும் உயர்ந்த தோளான்கொற்ற மாக் கோயில் புக்கார். 6.15.49
மல்லர்கள் தம் வலியால் அரண்மனை வாயிலுள் புகுதல்
7448. திண்திறல் வீரர் வாயில்திறத்தலும், சுவாச வாதம்
மண்டுற, வீரர் எல்லாம்வருவது போவது ஆக,
கொண்டு உறுதடக்கை பற்றி,குலம் உடை வலியினாலே
கண் துயில் எழுப்ப எண்ணி,கடிது ஒரு வாயில் புக்கார். 6.15.50
வீரர்கள் கும்பகருணனைத் துயிலெழுப்பச் சங்கு தாரை முதலியவற்றால் ஒலி எழுப்புதல்
7449. ‘இங்கு இவன் தன்னை யாம் இன்றுஎழுப்பல் ஆம் வகை ஏது? ‘என்று,
துங்க வெவ் வாயும் மூக்கும் கண்டு,மெய் துணுக்கம் உற்றார்;
அங்கைகள் தீண்ட அஞ்சி,ஆழ் செவி அதனினூடு,
சங்கொடு தாரை, சின்னம்,சமைவுறச் சாற்றலுற்றார். 6.15.51
ஓசை முதலியவற்றால் கும்பகருணனை எழுப்ப இயலாமையை இராவணனுக்கு ப்ப, அவன் குதிரைகளை மேலே செலுத்துமாறு கூறுதல்
7450. கோடு, இகல் தண்டு, கூடம்,குந்தம், வல்லோர்கள் கூடி,
தாடைகள், சந்து, மார்பு,தலை எனும் அவற்றில் தாக்கி,
வாடிய கையர் ஆகி, மன்னவற்குப்ப, ‘பின்னும்
நீடிய பரிகள் எல்லாம் நிரைத்திடும்விரைவின் ‘என்றான். 6.15.52
குதிரைகளால் துகைக்க, அதனால் கும்பகருணன் இனிது உறங்குதல்
7451. கட்டுறு கவன மா ஓர்ஆயிரம் கடிதின் வந்து,
மட்டு அற உறங்குவான் தன்மார்பு இடை, மாலை மான
விட்டு உற நடத்தி, ஓட்டி,விரைவு உள சாரி வந்தார்;
தட்டுறு குறங்கு போலத்தடம் துயில் கொள்வது ஆனான். 6.15.53
பணியாளர் கும்பகருணனை எழுப்ப இயலாமையை இராவணனுக்கு அறிவித்தல்
7452. கொய் மலர்த் தொங்கலான் தன்குரைகழல் வணங்கி, ‘ஐய!
உய்யலாம் வகைகள் என்று, இங்குஎழுப்பல் ஆம் வகையே செய்தும்,
கய் எலாம் வலியும் ஓய்ந்த;கவனமா காலும் ஓய்ந்த;
செய்யலாம் வகை வேறு உண்டோ?செப்புதி, தரெிய ‘என்றார். 6.15.54
இராவணன் சூலம் மழு முதலியன எறிந்தாவது கும்பகருணனை எழுப்புக எனல்
7453. ‘இடை பேரா இளையானை,இணை ஆழி மணி நெடுந்தேர்
படை பேரா வரும்போதும்,பதையாத உடம்பானை,
மடை பேராச் சூலத்தால்,மழு வாள் கொண்டு, எறிந்தானும்,
புடை பேராத் துயிலானைத்துயில் எழுப்பிக் கொணர்க ‘என்றான். 6.15.55
ஆயிரம் வீரர் முசலம் கொண்டு கன்னத்தில் அடிக்கக் கும்பகருணன் துயிலெழுதல் (7454-7455)
7454. என்றலுமே அடிவணங்கி, ஈர்ஐஞ்ஞூறு இராக்கதர்கள்,
வன்தொழிலால் துயில்கின்றமன்னவன்தன் மாடு அணுகி,
நின்று இரண்டு கதுப்பும் உறநெடு முசலம் கொண்டு அடிப்ப,
பொன்றினவன் எழுந்தாற் போல்,புடை பெயர்ந்து அங்கு எழுந்திருந்தான். 6.15.56
7455. மூவகை உலகும் உட்க,முரண் திசைப் பனைக்கை யானை
தாவரும் திசையின் நின்றுசலித்திட, கதிரும், உட்க,
பூ உளான், புணரி மேலான்,பொருப்பினான் முதல்வர் ஆய
யாவரும் துணுக்குற்று ஏங்க,எளிதினின் எழுந்தான் வீரன். 6.15.57
கும்பகருணனது உருவின் தன்மை
7456. விண்ணினை இடறும் மோலி;விசும்பினை நிறைக்கும் மேனி;
கண்ணெனும் அவை இரண்டும்கடல்களின் பெரிய ஆகும்;
எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர்வேந்தன் பின்னோன்
மண்ணினை அளந்து நின்றமால் என வளர்ந்து நின்றான். 6.15.58
எழுந்த கும்பகருணன் உணவு முதலியன
உட்கொள்ளுதல் (7457-7467)
7457. உறக்கம் அவ் வழி நீங்கி உணத் தகும்
வறைக்கு அமைந்தன ஊனொடு வாக்கிய
நறைக் குடங்கள் பெறான் கடை நக்குவான்
இறக்க நின்ற முகத்தினை எய்துவான். 6.15.59
7458. ஆறு நூறு சகடத்து அடிசிலும்
நூறு நூறு குடம் க(ள்)ளும் நுங்கினான்;
ஏறுகின்ற பசியை எழுப்பினான்;
சீறுகின்ற முகத்து இரு செங்கணான். 6.15.60
7459. எருமை ஏற்றை ஓர் ஈர் அறுநூற்றையும்
அருமை இன்றியே தின்று இறை ஆறினான்
பெருமை ஏற்றது கோடும் என்றே பிறங்கு
உருமை ஏற்றைப் பிசைந்து எரி ஊதுவான். 6.15.61
7460. இருந்த போதும் இராவணன் நின்றெனத்
தரெிந்த மேனியன்; திண் கடலின் திரை
நெரிந்தது அன்ன புருவத்து நெற்றியான்;
சொரிந்த சோரி தன் வாய் வர தூங்குவான்; 6.15.62
7461. உதிர வாரியோடு ஊனொடு எலும்பு தோல்
உதிர வாரி நுகர்வது ஓர் ஊணினான்;
கதிர வாள் வயிரப் பணைக் கையினான்;
கதிர வாள் வயிரக் கழல் காலினான்; 6.15.63
7462. இரும் பசிக்கு மருந்து என எஃகினோடு
இரும்பு அசிக்கும் அருந்தும் எயிற்றினான்;
வரும் களிற்றினைத் தின்றனன்; மால் அறா
அரும் க(ள்)ளில் திரிகின்றது ஓர் ஆசையான்; 6.15.64
7463. சூலம் ஏகம் திருத்திய தோளினான்;
சூல மேகம் எனப் பொலி தோற்றத்தான்;
காலன்மேல் நிமிர்மத்தன்; கழல் பொரு
காலன்; மேல் நிமிர் செம் மயிர்க் கற்றையான்; 6.15.65
7464. எயில் தலைத் தகர தலத்து இந்திரன்
எயிறு அலைத்த கர தலத்து எற்றினான்;
அயில் தலைத் தொடர் அங்கையன்; சிங்க ஊன்
அயிறலைத் தொடர் அங்கு அகல் வாயினான்; 6.15.66
7465. உடல் கிடந்துழி உம்பர்க்கும் உற்று உயிர்
குடல் கிடந்து அடங்கா நெடுங் கோளினான்;
கடல் கிடந்தது நின்றதன்மேல் கதழ்
வட கடுங்கனல் போல் மயிர்ப் பங்கியான்; 6.15.67
7466. திக்கு அடங்கலும் வென்றவன் சீறிட
மிக்கு அடங்கிய வெங்கதிர் அங்கிகள்
புக்கு அடங்கிய மேருப் புழை என
தொக்கு அடங்கித் துயில்தரு கண்ணினான்; 6.15.68
7467. காம்பு இறங்கும் கன வரைக் கைம்மலை
தூம்பு இறங்கும் மதத்தின துய்த்து உடல்
ஓம்புறும் முழை என்று உயர் மூக்கினன்;
பாம்பு உறங்கும் படர் செவிப் பாழியான்; 6.15.69
தமையன் அழைத்த செய்திகேட்டு, இராவணன் முன்சென்று கும்பகருணன் வணங்குதல் (7468-7469)
7468. ‘கூயினன் நும்முன் ‘என்று அவர் கூறலும்
போயினன் நகர் பொம்மென்று இரைத்து எழ;
வாயில் வல்லை நுழைந்து மதிதொடும்
கோயில் எய்தினன் குன்று அ(ன்)ன கொள்கையான். 6.15.70
7469. நிலை கிடந்த நெடுமதிள் கோபுரத்து
அலை கிடந்த இலங்கையர் அண்ணலைக்
கொலை கிடந்த வேல் கும்பகருணன் ஓர்
மலை கிடந்தது போல வணங்கினான் 6.15.71
இராவணன் தம்பியைத் தழுவி, அவனுக்கு உணவு முதலியன அளித்துப் போர்க்கோலம் செய்தல் (7470-7474)
7470. வன் துணைப் பெருந்தம்பி வணங்கலும்
தன் திரண்ட தோள் ஆரத் தழுவினான்
நின்ற குன்று ஒன்று நீள் நெடுங் காலொடும்
சென்ற குன்றைத் தழீஇ அன்ன செய்கையான். 6.15.72
7471. உடன் இருத்தி உதிரத்தொடு ஒள் நறைக்
குடன் நிரைத்தவை ஊட்டி தசைக் கொளீஇ
கடல் நுரைத் துகில் சுற்றி கதிர்க் குழாம்
புடை நிரைத்து ஒளிர் பல் கலன் பூட்டினான். 6.15.73
7472. பேர விட்ட பெரு வலி இந்திரன்
ஊர விட்ட களிற்றொடும் ஓடுநாள்
சோர விட்ட சுடர்மணி ஓடையை
வீரபட்டம் என நுதல் வீக்கினான். 6.15.74
7473. மெய் எலாம் மிளிர் மின்வெயில் வீசிட
தொய்யில் வாசத் துவர் துதைந்து ஆடிய
கய்யின் நாகம் என கடல் மேனியில்
தயெ்வம் நாறு செம் சாந்தம் உம் சேர்த்தினான். 6.15.75
7474. விடம் எழுந்தது போல் நெடு விண்ணினைத்
தொட உயர்ந்தவன் மார்பு இடைச் சுற்றினான்
இடபம் உந்தும் எழில் இரு நான்கு தோள்
கடவுள் ஈந்த கவசமும் கட்டினான். 6.15.76
கும்பகருணன் போர்க்கோலம் செய்ததற்குக் காரணம் வினாவுதல்
7475. அன்ன காலையில் ‘ஆயத்தம் யாவையும்
என்ன காரணத்தால்? ‘என்று இயம்பினான்
மின்னின் அன்ன புருவமும் விண்ணினைத்
துன்னு தோளும் இடம் துடியா நின்றான். 6.15.77
இராவணன் கும்பகருணனைப் போர் செய்ய ஏவுதல்
7476. ‘வானரப் பெருந் தானையர் மானிடர்
கோ நகர்ப் புறம் சுற்றினர்; கொற்றமும்
ஏனை உற்றனர்; நீ அவர் இன் உயிர்
போனகத் தொழில் முற்றுதி போய் ‘என்றான். 6.15.78
கும்பகருணன் போர் நேர்ந்தமைக்கு வருந்தி இராவணனுக்கு அறிவுரை கூறுதல் (7477-7487)
7477. ‘ஆனதோ வெஞ்சமம்? அலகில் கற்புடைச்
சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ?
வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ்
போனதோ? புகுந்ததோ பொன்றும் காலமே? 6.15.79
7478. ‘கிட்டியதோ செரு? கிளர் பொன் சீதையைச்
சுட்டியதோ? முனம் சொன்ன சொற்களால்
திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ? இது விதியின் வண்ணமே! 6.15.80
7479. ‘கல்லலாம் உலகினை; வரம்பு கட்டவும்
சொல்லலாம்; பெருவலி இராமன் தோள்களை
வெல்லலாம் என்பது சீதை மேனியைப்
புல்லலாம் என்பது போலுமால் ஐயா! 6.15.81
7480. ‘புலத்தியன் வழிமுதல் வந்த பொய்யறு
குலத்து இயல்பு அழிந்தது; கொற்றம் முற்றுமோ?
வலத்து இயல் அழிவதற்கு ஏது மை அறு
நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால் 6.15.82
7481. ‘கொடுத்தனை இந்திரற்கு உலகும் கொற்றமும்;
கெடுத்தனை நின் பெருங் கிளையும்; நின்னையும்
படுத்தனை; பலவகை அமரர் தங்களை
விடுத்தனை; வேறு இனி வீடும் இல்லையால். 6.15.83
7482. ‘அறம் உனக்கு அஞ்சி இன்று ஒளித்ததால்; அதன்
திறம் முனம் உழத்தலின் வலியும் செல்வமும்
நிறம் உனக்கு அளித்தது; அங்கு அதனை நீக்கி நீ
இற முன் அங்கு யார் உனை எடுத்து நாட்டுவார். 6.15.84
7483. ‘தஞ்சமும் தருமமும் தகவுமே அவர்
நெஞ்சமும் கருமமும் யுமே; நெடு
வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்ல நாம்
உஞ்சுமோ? அதற்கு ஒரு குறை உண்டாகுமோ? 6.15.85
7484. என்று கொண்டு இனையன இயம்பி யான் உனக்கு
ஒன்று உளது உணர்த்துவது; உணர்ந்து கோடியேல்
நன்று அது; நாயக! நயக்கிலாய் எனின்
பொன்றினை ஆகவே கோடி; போக்கு இலாய். 6.15.86
7485. ‘காலினின் கருங்கடல் கடந்த காற்றது
போல வன் குரங்கு உள; சீதை போகிலள்;
வாலியை உரம் கிழித்து ஏக வல்லன
கோல் உள; யாம் உளேம்; குறை உண்டாகுமோ? 6.15.87
7486. ‘தையலை விட்டு அவன் சரணம் தாழ்ந்து நின்
ஐ அறு தம்பியோடு அளவளாவுதல்
உய்திறம்; அன்று எனின் உளது வேறும் ஓர்
செய்திறம்; அன்னது தரெியக் கேட்டியால்; 6.15.88
7487. ‘பந்தியில் பந்தியில் படையை விட்டு அவை
சிந்துதல் கண்டு நீ இருந்து தேம்புதல்
மந்திரம் அன்று; நம் வலி எலாம் உடன்
உந்துதல் கருமம் ‘என்று உணரக் கூறினான். 6.15.89
இராவணன் கும்பகருணனைச் சினந்து மொழிதல் (7488-7491)
7488. ‘உறுவது தரெிய அன்று; உன்னைக் கூயது
சிறுதொழில் மனிதரைக் கோறி சென்று; எனக்கு
அறிவுடை அமைச்சன் நீ அல்லை அஞ்சினை;
வெறிவிது உன் வீரம் ‘என்று இவை விளம்பினான். 6.15.90
7489. ‘மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை;
பிறங்கிய தசையொடு நறவும் பெற்றனை;
இறங்கிய கண் முகிழ்த்து இரவும் எல்லியும்
உறங்குதி போய் ‘என உளையக் கூறினான். 6.15.91
7490. ‘மானிடர் இருவரை வணங்கி மற்றும் அக்
கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு உய்தொழில்
ஊனுடை உம்பிக்கும் உனக்குமே கடன்;
யான் அது புரிகிலேன்; எழுக போக! ‘என்றான். 6.15.92
7491. ‘தருக என்தேர் படை சாற்று என் கூற்றையும்;
வருக முன் வானமும் மண்ணும் மற்றவும்;
இருகை வன் சிறுவரோடு ஒன்றி என்னொடும்
பொருக வெம்போர் ‘எனப் போதல் மேயினான். 6.15.93
போருக்கு எழுந்த இராவணனை வணங்கி ‘பொறுத்தி ‘என்று கூறி, கும்பகருணன் போருக்குச் செல்ல விடைபெறுதல் (7492-7496)
7492. அன்னது கண்டு அவன் தம்பியானவன்
பொன் அடி வணங்கி ‘நீ பொறுத்தியால் ‘என
வல் நெடுஞ் சூலத்தை வலத்து வாங்கினான்
‘இன்னம் ஒன்று உளது ‘என்னக் கூறினான். 6.15.94
7493. ‘வென்று இவண் வருவென் என்றுக்கிலேன்; விதி
நின்றது, பிடர் பிடித்துஉந்த நின்றது;
பொன்றுவென்; பொன்றினால்,பொலன்கொள் தோளியை,
“நன்று “ என, நாயக,விடுதல் நன்று அரோ. 6.15.95
7494. ‘இந்திரன் பகைஞனும் இராமன் தம்பி கை
மந்திர அம்பினால் மடிதல் வாய்மையால்;
தந்திரம் காற்று உறு சாம்பல்; பின்னரும்
அந்தரம் உணர்ந்து உனக்கு உறுவது ஆற்றுவாய். 6.15.96
7495. ‘என்னை வென்றுளர் எனில் இலங்கை காவல!
உன்னை வென்று உயருதல் உண்மை; ஆதலால்
பின்னை நின்று எண்ணுதல் பிழை; அப் பெய்வளை
தன்னை நன்கு அளிப்பது தவத்தின் நன்று அரோ. 6.15.97
7496. ‘இற்றை நாள் வரை, முதல்,யான் முன் செய்தன
குற்றமும் உள எனின்பொறுத்தி; கொற்றவ!
அற்றதால் முகத்தினில்விழித்தல்; ஆரிய!
பெற்றனென் விடை ‘என,பெயர்ந்து போயினான். 6.15.98
கும்பகருணன் புறப்பட்டபோது இராவணனும் மற்றையோரும் வருந்துதல்
7497. அவ்வழி இராவணன் அனைத்து நாட்டமும்
செவ்வழி நீரொடும் குருதி தேக்கினான்;
எவ்வழியோர்களும் இரங்கி ஏங்கினார்;
இவ்வழி அவனும் போய் வாயில் எய்தினான். 6.15.99
இராவணன் கும்பகருணனுக்குத் துணைப்படை அனுப்புதல்
7498. ‘இரும் படை கடிப்பு எடுத்து எற்றி ஏகுக!
பெரும் படை இளவலோடு ‘என்ற பேச்சினால்
வரும் படை வந்தது வான் உேளார்கள் தம்
சுரும்பு அடை மலர்முடி தூளி தூர்க்கவே. 6.15.100
படைகளின் பெருக்கம் (7499-7501)
7499. தேர்க்கொடி யானையின் பதாகை சேண் உறு
தார்க்கொடி என்று இவை ததைந்து வீங்குவ
போர்க் கொடுந் தூளி போய்த் துறக்கம் புக்கிட
ஆர்ப்பன துடைப்பன போன்ற ஆடுவ. 6.15.101
7500. எண் உறு படைக்கலம் இழுக எற்றிட
நண்ணுறு பொறிகளும் படைக்கு நாயகர்
கண் உறு பொறிகளும் கதுவ கண் அகல்
விண் உறு மழை எலாம் கரிந்து வீழ்ந்தவால். 6.15.102
7501. தேர்செல கரிசெல நெருக்கிச் செம்முகக்
கார்செல தேர்செல புரவிக் கால் செல
தார்செலக் கடைசெலச் சென்ற தானையும்
‘பார் செலற்கு அரிது ‘என விசும்பில் பாய்ந்ததால். 6.15.103
கும்பகருணன் தேரில் ஏறுதல் (7502-7504)
7502. ஆயிரம் கோளரி ஆளி ஆயிரம்
ஆயிரம் மதகரி பூதம் ஆயிரம்
மா இரு ஞாலத்தைச் சுமப்ப வாங்குவது
ஏய் இருஞ் சுடர்மணித் தேர் ஒன்று ஏறினான். 6.15.104
7503. தோமரம் சக்கரம் சூலம் கோல் மழு
நாம வேல் உலக்கை வாள் நாஞ்சில் தண்டு எழு
வாம வில் வல்லையம் கணையம் மற்று உள
சேம வெம் படை எலாம் சுமந்து சென்றவால். 6.15.105
7504. நறையுடைத் தசும்பொடு நறிதின் வெந்த ஊன்
குறைவு இல் நல் சகடம் ஓர் ஆயிரம் கொடு
பிறையுடை எயிற்றவன் பின்பு சென்றனர்
முறை முறை கை கொடு முடுகி நீட்டுவார். 6.15.106
கும்பகருணன் ஊனையும் கள்ளையும்
உண்டவண்ணம் செல்லுதல்
7505. ஒன்று அல பற்பலர் உதவும் ஊன் நறை
பின்று அரு பிலன் இடைப் பெய்யுமாறு போல்
வன்திறல் இரு கரம் வழங்க மாந்தியே
சென்றனன் யாவரும் திடுக்கம் எய்தவே. 6.15.107
கும்பகருணனது செயலைக் கண்டு
அமரர் அஞ்சியோடுதல்
7506. ‘கணம் தரு குரங்கொடு கழிவது அன்று இது;
நிணம் தரு நெடுந் தடிக்கு உலகு நேருமோ?
பிணம் தலைப்பட்டது; பெயர்வது எங்கு இனி;
உணர்ந்தது கூற்றம் ‘என்று உம்பர் ஓடினார். 6.15.108
தேரில் வந்த கும்பகருணனை இராமன் நோக்கி, ‘இவனை இன்னார் என்று தரெிவி ‘என்று வீடணனைக் கேட்டல் (7507-7511)
7507. பாந்தளின் நெடுந்தலை வழுவி பாரொடும்
வேந்து என விளங்கிய மேரு மால்வரை
போந்தது போல் பொலந் தேரில் பொங்கிய
ஏந்தலை ஏந்து எழில் இராமன் நோக்கினான். 6.15.109
7508. ‘வீணை என்று உணரின் அஃது அன்று; விண் தொடும்
சேண் உயர் கொடியது வய வெஞ் சீயமால்;
காணினும் காலின் மேல் அரிய காட்சியன்;
பூண் ஒளிர் மார்பினன்; யாவன் போலுமால்? 6.15.110
7509. ‘தோெளாடு தோள் செலத்தொடர்ந்து நோக்குறின்,
நாள் பல கழியுமால்;நடுவண் நின்றது ஓர்
தாளுடை மலை கொலாம்;சமரம் வேட்டது ஓர்
ஆள் என உணர்கிலேன்;ஆர் கொலாம் இவன்? 6.15.111
7510. ‘எழும் கதிரவன் ஒளி மறைய எங்கணும்
விழுங்கியது இருள் இவன் மெய்யினால்; வெரீஇ
புழுங்கும் நம் பெரும்படை இரியல் போகின்றது;
அழுங்கல் இல் சிந்தையாய்! யார் கொலாம் இவன்? 6.15.112
7511. ‘அரக்கன் அவ் உரு ஒழித்து,அரியின் சேனையை
வெருக் கொள தோன்றுவான்கொண்ட வேடமோ?
தரெிக்கிலேன் இவ் உரு;தரெியும் வண்ணம், நீ
பொருக்கென, வீடண!புகறியால் ‘என்றான். 6.15.113
வீடணன் கும்பகருணனுடைய தன்மையை எடுத்துரைத்தல்
7512. ஆரியன் அனைய கூற,அடி இணை இறைஞ்சி, ‘ஐய!
பேர் இயல் இலங்கை வேந்தன்பின்னவன்; எனக்கு முன்னோன்;
கார் இயல் காலன் அன்னகழல் கும்பகருணன் என்னும்
கூரிய சூலத்தான் ‘என்று,அவன் நிலை கூறல் உற்றான் 6.15.114
7513. ‘தவன் நுணங்கியரும் வேதத்தலைவரும் உணரும் தன்மைச்
சிவன் உணர்ந்து, அலரின் மேலைத்திசைமுகன் உணரும் தேவன்
அவன் உணர்ந்து எழுந்த காலத்துஅசுரர்கள் படுவது எல்லாம்
இவன் உணர்ந்து எழுந்த காலத்துஇமையவர் படுவர், எந்தாய்! 6.15.115
7514. ‘ஆழியாய்! இவன் ஆகுவான்
ஏழை வாழ்வு உடை எம் முனோன்
தாழ்வு இலா ஒரு தம்பியோன்;
ஊழி நாளும் உறங்குவான்; 6.15.116
7515. காலனார் உயிர்க் காலனால்;
காலின் மேல் நிமிர் காலினான்;
மாலினார் கெட வாகையே
சூலமே கொடு சூடினான். 6.15.117
7516. ‘தாங்கு கொம்பு ஒரு நான்கு கால்
ஓங்கல் ஒன்றினை உம்பர் கோன்
வீங்கு நெஞ்சன் விழுந்திலான்
தூங்க நின்று சுழற்றினான். 6.15.118
7517. ‘கழிந்த தீயொடு காலையும்
பிழிந்து சாறுகொள் பெற்றியான்;
அழிந்து மீன் உக ஆழிநீர்
இழிந்து காலினின் எற்றுவான். 6.15.119
7518. ‘ஊன் உயர்ந்த உரத்தினான்;
மேல் நிமிர்ந்த மிடுக்கினான்;
தான் உயர்ந்த தவத்தினான்;
வான் உயர்ந்த வரத்தினான்; 6.15.120
7519. ‘திறம் கொள் சாரி திரிந்த நாள்
கறங்கு அலாது கணக்கு இலான்;
இறங்கு தாரவன் இன்றுகாறு
உறங்கலால் உலகு உய்ந்ததால். 6.15.121
7520. ‘சூலம் உண்டு; அது சூர் உேளார்
காலம் உண்டது; கைக்கொள்வான்
ஆலம் உண்டவன் ஆழிவாய்
ஞாலம் உண்டவ! நல்கினான்; 6.15.122
7521. ‘மின்னின் ஒன்றிய விண் உேளார் ‘
‘முன் நில் ‘என்று அமர் முற்றினார்
என்னில் என்றும் அவ் எண்ணிலார்
வென்னில் அன்றி விழித்திலான். 6.15.123
7522. “‘தருமம் அன்று இதுதான்; இதால்
வரும் நமக்கு உயிர் மாய்வு “ எனா.
உருமின் வெய்யவனுக்கு
இருமை மேலும் இயம்பினான். 6.15.124
7523. ‘மறுத்த தம் முனை வாய்மையால்
ஒறுத்தும் ஆவது உணர்த்தினான்;
வெறுத்து ‘மாள்வது மெய் ‘எனா
இறுத்து நின் எதிர் எய்தினான் ‘ 6.15.125
7524. “‘நன்று இது அன்று நமக்கு ” எனா
ஒன்று நீதி உணர்த்தினான்;
இன்று காலன் முன் எய்தினான்
என்று சொல்லி இறைஞ்சினான். 6.15.126
வீடணன் சொற்களைக் கேட்ட சுக்கிரீவன் இவனை நம்முடன் சேர்த்துக் கொள்ளுதல் நலம் என இராமனுக்குச் சொல்லுதல்
7525. என்று அவன் த்தலோடும்,இரவி சேய், ‘இவனை இன்று
கொன்று ஒரு பயனும் இல்லை;கூடுமேல், கூட்டிக் கொண்டு
நின்றது புரிதும்; மற்று இந்நிருதர் கோன் இடரும் நீங்கும்;
“நன்று “ என நினைந்தேன் ‘என்றான்;நாதனும், ‘நலன் ஈது ‘என்றான். 6.15.127
கும்பகருணனை அழைத்தற்குச் செல்வார் யாவர்? ‘என்று இராமன் கேட்க, வீடணன் உடன்பட்டு விடைபெற்றுச் செல்லுதல்
7526. ‘ஏகுதற்கு உரியார் யாரே? ‘என்றலும், இலங்கை வேந்தன்,
‘ஆகின் மற்று அடியேன் சென்றுஅங்கு அறிவினால் அவனை உள்ளம்
சேகு அறத் தரெுட்டி, ஈண்டுச்சேருமேல், சேர்ப்பன் ‘என்றான்;
மேகம் ஒப்பானும், ‘நன்று, போக! ‘என விடையும் ஈந்தான். 6.15.128
வீடணன் கும்பகருணனை அடைந்து வணங்குதல்
7527. தந்திரக் கடலை நீந்தி,தன் பெரும் படையைச் சார்ந்தான்;
வெந்திறலவனுக்கு, ‘ஐய!வீடணன் விரைவின் உன்பால்
வந்தனன் ‘என்னச் சொன்னார்;வரம்பு இலா உவகை கூர்ந்து,
சிந்தையால் களிக்கின்றான்தன்செறிகழல் சென்னி சேர்த்தான் 6.15.129
தன்னை வந்து வணங்கிய வீடணனுக்குக் கும்பகருணன் ‘வந்தது தகுதி அன்று ‘என்று கூறுதல் (7528-7536)
7528. முந்தி வந்து இறைஞ்சினானை,முகந்து, உயிர் மூழ்கப் புல்லி,
‘உய்ந்தனை, ஒருவன் போனாய் ‘என மனம் உவக்கின்றேன் தன்
சிந்தனை முழுதும் சிந்த,தெளிவு இலார் போல மீள
வந்தது என், தனியே? ‘என்றான்,மழையின் நீர் வழங்கு கண்ணான் 6.15.130
7529. ‘அவயம் நீ பெற்றவாறும்,அமரரும் பெறுதல் ஆற்றா
உவய லோகத்திலுள்ள சிறப்பும்,கேட்டு உவந்தேன், உள்ளம்
கவிஞரின் அறிவு மிக்காய்!காலன் வாய்க் களிக்கின்றேம்பால்
நவை உற வந்தது என், நீ?அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ? 6.15.131
7530. “‘குலத்து இயல்பு அழிந்ததேனும்,குமர! மற்று உன்னைக் கொண்டே
புலத்தியன் மரபு, மாயாப்புண்ணியம் பொருந்திற்று ‘‘ என்னா,
வலத்து இயல் தோளை நோக்கிமகிழ்கின்றேன்; மன்ன வாயை
உலத்தினை, திரிய வந்தாய்;உளைகின்றது உள்ளம், அந்தோ. 6.15.132
7531. ‘அறப் பெருந் துணைவர், தம்மைஅபயம் என்று அடைந்த நின்னைத்
துறப்பது துணியார், தங்கள்ஆர் உயிர் துறந்தபோதும்
இறப்பு எனும் பயத்தை விட்டாய்;இராமன் என்பளவும் மற்று இப்
பிறப்பு எனும் புன்மை இல்லை :நினைந்து என்கொல் பெயர்ந்த வண்ணம்? 6.15.133
7532. ‘அறம் என நின்ற நம்பற்குஅடிமை பெற்று, அவன் தனாலே
மறம் என நின்ற மூன்றும்மருங்கு அற மாற்றி, மற்றும்,
திறம் என நின்ற தீமைஇம்மையே, தீர்ந்த செல்வ!
பிறர் மனை நோக்குவேமைஉறவு எனப் பெறுதி போலாம்? 6.15.134
7533. ‘நீதியும், தருமம் நின்றநிலைமையும், புலமைதானும்,
ஆதி அம் கடவுளாலேஅருந்தவம் ஆற்றிப் பெற்றாய்;
வேதியர் தேவன் சொல்லால்,விளிவு இலா ஆயுப் பெற்றாய்;
சாதியின் புன்மை இன்னும்தவிர்ந்திலை போலும், தக்கோய்? 6.15.135
7534. ‘ஏற்றிய வில்லோன், யார்க்கும்இறையவன் இராமன், நின்றான்;
மாற்ற அருந் தம்பி நின்றான்;மற்றையோர் முற்றும் நின்றார்;
கூற்றமும் நின்றது, எம்மைக்கொல்லிய; விதியும் நின்ற;
தோற்ற எம் பக்கல், ஐய!வெவ்வலி தொலைய வந்தாய். 6.15.136
7535. ‘ஐய! நீ அயோத்தி வேந்தற்குஅடைக்கலம் ஆகி, ஆங்கே
உய்கிலை என்னின், மற்று இவ்அரக்கராய் உள்ேளார் எல்லாம்
எய்கணை மாரியாலே இறந்து,பாழ் முழுதும் பட்டால்,
கையினால் எள் நீர் நல்கி,கடன் கழிப்பாரைக் காட்டாய். 6.15.137
7536. ‘வருவதும், இலங்கை மூதூர்ப்புலை எலாம் மாண்ட பின்னை
திரு உறை மார்பனோடும்;புகுந்து பின் என்றும் தீராப்
பொருவ அருஞ் செல்வம்துய்க்கப் போதுதி, விரைவின் ‘என்றான்.
‘கருமம் உண்டு ப்பது ‘என்றான்;‘ ‘என, கழறலுற்றான். 6.15.138
இராமனைச் சரண்புகுமாறு வீடணன் கும்பகருணனுக்கு த்தல் (7537-7551)
7537. ‘இருள் உறு சிந்தையேற்கும்இன் அருள் சுரந்த வீரன்
அருளும், நீ சேரின்; ஒன்றோ,அவயவமும் அளிக்கும்; அன்றி,
மருள் உறு பிறவி நோய்க்குமருந்தும் ஆம்; மாறிச் செல்லும்
உருளுறு சகட வாழ்க்கைஒழித்து, வீடு அளிக்கும் அன்றே. 6.15.139
7538. ‘எனக்கு அவன் தந்த செல்வத்துஇலங்கையும் அரசும் எல்லாம்
நினக்கு நான் தருவென்; தந்து,உன் ஏவலின் நெடிது நிற்பென்;
உனக்கு இதின் உறுதி இல்லை;உத்தம! உன்பின் வந்தேன்;
மனக்கு நோய் துடைத்து,வந்த மரபையும் விளக்கு வாழி! 6.15.140
7539. ‘போதலோ அரிது; போனால்,புகல் இடம் இல்லை; வல்லே,
சாதலோ சரதம்; நீதிஅறத்தொடும் தழுவி நின்றாய்
ஆதலால், உளதாம் ஆவிஅநாயமே உகுத்து என்? ஐய!
வேத நூல் மரபுக்கு ஏற்றஒழுக்கமே பிடிக்க வேண்டும். 6.15.141
7540. ‘தீயவை செய்வர் ஆகின்,சிறந்தவர், பிறந்த உற்றார்,
தாய் அவை, தந்தைமார், என்றுஉணர்வரோ, தருமம் பார்ப்பார்?
நீ அவை அறிதி அன்றே?நினக்கு நான் ப்பது என்னோ?
தூயவை துணிந்த போதுபழி வந்து தொடர்வது உண்டோ? 6.15.142
7541. ‘மக்களை, குரவர் தம்மைமாதரை, மற்று உேளாரை
ஒக்கும் இன் உயிர் அன்னாரை,உதவி செய்தாரோடு ஒன்ற,
“துக்கம், இத் தொடர்ச்சி “ என்று,துறப்பரால் துணிவு பூண்டோர்;
மிக்கது நலனே ஆகி,வீடுபேறு அளிக்கும் அன்றே! 6.15.143
7542. ‘தீவினை ஒருவன் செய்ய,அவனொடும் தீங்கு இலாதோர்
வீ வினை உறுதல், ஐய,மேன்மையோ கீழ்மை தானோ?
ஆய்வினை உடையை அன்றே?அறத்தினை நோக்கி ஈன்ற
தாய் வினை செய்ய அன்றோ,கொன்றனன், தவத்தின் மிக்கான்? 6.15.144
7543. ‘கண்ணுதல், தீமை செய்ய,கமலத்து முளைத்த தாதை
அண்ணல்தன் தலையின் ஒன்றைஅறுக்க என்று அமைந்தான் அன்றே?
புண்ணுறு புலவு வேலோய்!பழியொடும் பொருந்தி, பின்னை,
எண்ணுறு நரகின் வீழ்வதுஅறிஞரும் இயற்றுவாரோ? 6.15.145
7544. ‘உடலிடைத் தோன்றிற்று ஒன்றைஅறுத்து, அதன் உதிரம் ஊற்றி,
சுடல் உறச் சுட்டு, வேறு ஓர்மருந்தினால் துயரம் தீர்வர்;
கடல் இடை கோட்டம் தேய்த்துக்கழிவது கருமம் அன்றால்,
மடல் உடை அலங்கல் மார்ப!மதி உடையவர்க்கு மன்னோ. 6.15.146
7545. ‘காக்கலாம் நும்முன் தன்னைஎனின், அது கண்டது இல்லை;
ஆக்கலாம் அறத்தை வேறேஎன்னினும், ஆவது இல்லை;
தீக்கலாம் கொண்ட தேவர்சிரிக்கலாம்; செருவில் ஆவி
போக்கலாம்; புகலாம், பின்னைநரகு; அன்றிப் பொருந்திற்று உண்டோ? 6.15.147
7546. ‘மறம் கிளர் செருவில் வென்றுவாழ்ந்திலை; மண்ணின் மேலா
இறங்கினை; இன்று காறும்இளமையும் வறிதே ஏக,
உறங்கினை என்பது அல்லால்,உற்றது ஒன்று உளதோ? என், நீ
அறம் கெட உயிரை நீத்துமேற்கொள்வான் அமைந்தது? ஐயா. 6.15.148
7547. ‘திரு மறு மார்பன் நல்க,அனந்தரும் தீர்ந்து, செல்வப்
பெருமையும் எய்தி, வாழ்தி;ஈறு இலா நாளும் பெற்றாய்;
ஒருமையே அரசு செய்வாய்;உரிமையே உளதே; ஒன்றும்
அருமையே இவற்றின் இல்லை;காலமும் அடுத்தது, ஐயா! 6.15.149
7548. ‘தேவர்க்கும் தேவன் நல்க;இலங்கையின் செல்வம் பெற்றால்,
ஏவர்க்கும் சிறியை அல்லை!யார், உனை நலியும் ஈட்டார்?
மூவர்க்கும் தலைவர் ஆனமூர்த்தியார், அறத்தை முற்றும்
காவற்குப் புரிந்து நின்றார்,காகுத்த வேடம் காட்டி. 6.15.150
7549. ‘உன் மக்கள் ஆகி உள்ளார்,உன்னொடும் ஒருங்கு தோன்றும்
என் மக்கள் ஆகி உள்ளார்,இக்குடிக்கு இறுதி சூழ்ந்தான்
தன் மக்கள் ஆகி உள்ளார்,தலையொடும் திரிவர் அன்றே
புன்மக்கள் தருமம் பூணாப்புலமக்கள் தருமம் பூண்டால். 6.15.151
7550. ‘முனிவரும் கருணை வைப்பர்;மூன்று உலகத்தும் தோன்றி
இனிவரும் பகையும் இல்லை;“ஈறு உண்டு “ என்று இரங்கல்வேண்டா;
துனிவரும் செறுநர் ஆனதேவரே துணைவர் ஆவர்;
கனி வரும் காலத்து, ஐய!பூக் கொய்யக் கருதலாமோ? 6.15.152
7551. ‘வேத நாயகனே உன்னைக்கருணையால், வேண்டி, விட்டான்;
காதலால், என்மேல் வைத்தகருணையால், கருமம் ஈதே;
ஆதலால் அவனைக் காண,அறத்தொடும் திறம்பாது, ஐய!
போதுவாய் நீயே ‘என்னப்பொன் அடி இரண்டும் பூண்டான். 6.15.153
வீடணன் யைக் கேட்ட கும்பகருணன்
கூறுதல் (7552-7564)
7552. தும்பி அம் தொடையல் மாலைச்சுடர்முடி படியில் தோய,
பம்பு பொன் கழல்கள் கையால்பற்றினன் புலம்பும் பொன் தோள்
தம்பியை எடுத்து, மார்பில்தழுவி, தன் தறுகண் ஊடு
வெம் புண் நீர் சொரிய நின்றான்,இனையன விளம்பலுற்றான்; 6.15.154
7553. ‘நீர் கோல வாழ்வை நச்சி,நெடிது நாள் வளர்த்துப் பின்னைப்
போர்க் கோலம் செய்து விட்டாற்குஉயிர்கொடாது, அங்குப் போகேன்;
தார்க் கோல மேனி மைந்த!என் துயர் தவிர்த்தி ஆகின்,
கார் கோல மேனியானைக்கூடுதி கடிதின் ஏகி. 6.15.155
7554. ‘மலரின்மேல் இருந்த வள்ளல்வழு இலா வரத்தினால், நீ
உலைவு இலாத் தருமம் பூண்டாய்;உலகு உளதனையும் உள்ளாய்;
தலைவன் நீ, உலகுக்கு எல்லாம்;உனக்கு அது தக்கதேயால்;
புலையுறு மரணம் எய்தல்எனக்கு இது புகழதேயால். 6.15.156
7555. ‘கருத்து இலா இறைவன் தீமைகருதினால், அதனைக் காத்துத்
திருத்தலாம் ஆகில் அன்றோதிருத்தலாம்? தீராது ஆயின்,
பொருத்து உறு பொருள் உண்டாமோ?பொருதொழிற்கு உரியர் ஆகி
ஒருத்தரின் முன்னம் சாதல்உண்டவர்க்கு உரியது அம்மா. 6.15.157
7556. ‘தும்பி அம் தொடையல் வீரன்சுடுகணை துரப்ப, சுற்றும்
வெம்பு வெஞ் சேனையோடும்,வேறு உள கிளைஞரோடும்,
உம்பரும் பிறரும் போற்றஒருவன் மூவுலகை ஆண்டு,
தம்பியர் இன்றி மாண்டுகிடப்பனோ தமையன் மண்மேல். 6.15.158
7557. ‘அணை இன்றி அயர்ந்த வென்றிஅஞ்சினார் நகையது ஆக,
பிணை ஒன்று கண்ணாள் பங்கன்பெருங்கிரி நெருங்கப் பேர்த்த
பணை ஒன்று திரள்தோள் காலபாசத்தால் பிணிப்பக் கூசித்
துணை இன்றிச் சேறல் நன்றோ,தோற்றுள கூற்றின் சூழல். 6.15.159
7558. ‘செம்பு இட்டுச் செய்த இஞ்சித்திருநகர்ச் செல்வம் தேறி,
வம்பு இட்ட தரெியல் எம்முன்உயிர்கொண்ட பகையை வாழ்த்தி,
அம்பு இட்டுத் துன்னம் கொண்டபுண் உடை நெஞ்சோடு ஐய!
கும்பிட்டு வாழ்கிலேன் யான்கூற்றையும் ஆடல் கொண்டேன்! 6.15.160
7559. ‘அனுமனை, வாலி சேயை,அருக்கன் சேய் தன்னை, அம்பொன்
தனு உடையவரை, வேறு ஓர்நீலனை, சாம்பன் தன்னை,
கனி தொடர் குரங்கின் சேனைக்கடலையும், கடந்து, மூடும்
பனி துடைத்து உலகம் சுற்றும்பருதியின் திரிவென்; பார்த்தி; 6.15.161
7560. ‘ஆலம் கண்டு அஞ்சி ஓடும்அமரர்போல் அரிகள் ஓட,
சூலம் கொண்டு ஓடி, வேலைதொடர்வது ஓர் தோற்றம் தோன்ற,
நீலம் கொள் கடலும் ஓட,நெருப்பொடு காலும் ஓட,
காலம் கொள் உலகும் ஓட,கறங்கு எனத் திரிவன்; காண்டி! 6.15.162
7561. ‘செரு விடை அஞ்சார் வந்து, என்கண் எதிர் சேர்வர் ஆகின்,
கருவரை, கனகக் குன்றம்,என்னல் ஆம் காட்சி தந்த
இருவரும் நிற்க, மற்று அங்குஆர் உளார், அவரை எல்லாம்,
ஒருவரும் திரிய ஒட்டேன்,உயிர் சுமந்து உலகில் ‘என்றான். 6.15.163
7562. ‘தாழ்க்கிற்பாய் அல்லை, என் சொல்தலைக் கொளத் தக்கது என்று
கேட்கிற்பாய் ஆயின், எய்தி,அவரொடும் கெழீஇய நட்பை
வேட்கிற்பாய்; “இனி ஓர் மாற்றம்விளம்பினால் விளைவு உண்டு “ என்று
சூழ்க்கிற்பாய் அல்லை; யாரும்தொழ நிற்பாய், ‘ என்னச் சொன்னான். 6.15.164
7563. ‘போதி நீ, ஐய! பின்னைப்பொன்றினார்க்கு எல்லாம் நின்ற
வேதியர் தேவன் தன்னைவேண்டினை பெற்று, மெய்ம்மை
ஆதி நூல் மரபினாலே,கடன்களும் ஆற்றி, ஏற்ற
மாதுயர் நரகம் நண்ணாவண்ணமும் காத்தி மன்னோ. 6.15.165
7564. ‘ஆகுவது, ஆகும் காலத்து;அழிவதும், அழிந்து சிந்திப்
போகுவது; அயலே நின்றுபோற்றினும் போதல் திண்ணம்;
சேகு அற உணர்ந்தோர் நின்னின்யார் உளர்? வருத்தம் செய்யாது
ஏகுதி; எம்மை நோக்கிஇரங்கலை; என்றும் உள்ளாய்! 6.15.166
கும்பகருணன் வீடணனைத் தழுவி விடை கொடுக்க, வீடணனும் அவனைப் பணிந்து மீளுதல் (7565-7566)
7565. என்று, அவன் தன்னை மீட்டும்எடுத்து, மார்பு இறுகப் புல்லி,
நின்று நின்று, இரங்கி ஏங்கி,நிறைகணால் நெடிது நோக்கி,
‘இன்றொடும் தவிர்ந்தது அன்றே,உடன் பிறப்பு ‘என்று விட்டான்;
வென்றி வெந் திறலினானும்,அவன் அடித் தலத்து வீழ்ந்தான். 6.15.167
7566. வணங்கினான்; வணங்கி, கண்ணும்வதனமும் மனமும் வாயும்
உணங்கினான்; உயிரோடு யாக்கைஒடுங்கினான்; ‘செய்து இன்னும்
பிணங்கினால் ஆவது இல்லை;பெயர்வது ‘என்று உணர்ந்து பேர்ந்தான்,
குணங்களால் உயர்ந்தான், சேனைக்கடல் எலாம் கரங்கள் கூப்ப. 6.15.168
வீடணன் செல்லக் கண்ட கும்பகருணன் கண்ணில் உதிரநீர் பெருக நிற்றல்
7567. ‘கள்ள நீர் வாழ்க்கையேமைக்கைவிட்டு, காலும் விட்டான்;
பிள்ளைமை துறந்தான் ‘என்னாப்பேது உறும் நிலையன் ஆகி,
வெள்ள நீர் வேலை தன்னில்வீழ்ந்த நீர் வீழ, வெங்கண்
உள்ள நீர் எல்லாம் மாறி,உதிர நீர் ஒழுக, நின்றான். 6.15.169
வீடணன் இராமனிடம் கும்பகருணனுடைய மனநிலையைக் கூறுதல்
7568. எய்திய நிருதர் கோனும்இராமனை இறைஞ்சி, ‘ எந்தாய்!
உய்திறன் உடையார்க்கு அன்றோஅற நெறி ஒழுக்கம் உண்மை?
பெய்திறன் எல்லாம் பெய்துபேசினன்; பெயருந் தன்மை
செய்திலன்; குலத்து மானம்தீர்ந்திலன் சிறிதும் என்றான 6.15.170
வீடணனுடைய யைக் கேட்டு இராமன் கூறுதல்
7569. கொய் திறச் சடையின் கற்றைகொந்தளக் கோலக் கொண்டல்,
நொய்தினில் துளக்கி, ‘ஐய!“நுன் எதிர், நும் முனோனை
எய்து இறத் துணித்து வீழ்த்தல்இனிது அன்று ‘‘ என்று இனைய சொன்னேன்;
செய் திறன் இனி வேறு உண்டோ?விதியை யார் தீர்க்ககிற்பார்? ‘ 6.15.171
அரக்கர் சேனை குரக்குச் சேனையை
வளைத்துக் கொள்ளுதல்
7570. என இனிது க்கும் வேலை,இராக்கதர் சேனை என்னும்
கனைகடல், கவியின் தானைக்கடலினை வளைந்து கட்டி,
முனை தொழில் முயன்றதாக,மூவகை உலகும் முற்றத்
தனி நெடுந் தூளி ஆர்த்ததுஆர்த்தில, பரவை தள்ளி. 6.15.172
போர்க்கள இயல்பு
7571. ஓடின புரவி; வேழம்ஓடின; உருளைத் திண்தேர்
ஓடின; மலைகள் ஓட,ஓடின உதிரப் பேர் ஆறு;
ஆடின கவந்த பந்தம்;ஆடின அலகை மேல்மேல்;
ஆடின பதாகை; ஓங்கிஆடின, பறவை அம்மா! 6.15.173
அரக்கர் சேனையும் குரக்குச் சேனையும்
அடைந்த நிலை
7572. மூளையும், தசையும், என்பும்,குருதியும், நிணமும், மூரி
வாெளாடும் குழம்பு பட்டார்,வாள் எயிற்று அரக்கர்; மற்று அவ்
ஆள் அழி குருதி வெள்ளத்துஅழுந்தின கவிகள்; அம்பொன்
தோெளாடு மரனும் கல்லும்சூலமும் வேலும் தாக்க. 6.15.174
அரக்கப் படையும் குரக்குப் படையும்
செய்யும் போர்
7573. எய்தனர், நிருதர்; கல்லால்எறிந்தனர், கவிகள்; ஏந்திப்
பெய்தனர், அரக்கர்; பற்றிப்பிசைந்தனர் அரிகள்; பின்றா
வைதனர், யாதுதானர்;வலித்தனர், வானர ஈசர்;
செய்தனர், பிறவும் வெம்போர்;திகைத்தனர், தேவர் எல்லாம் 6.15.175
கும்பகருணன் வருகை
7574. நீரினை ஓட்டும் காற்றும்,காற்று எதிர் நிற்கும் நீரும்,
போர் இணையாக ஏன்றுபொருகின்ற பூசல் நோக்கி,
தேரினை ஓட்டி வந்தான்திருவினைத் தேவர் தங்கள்
ஊரினை நோக்கா வண்ணம்,உதிர வேல் நோக்கி உள்ளான். 6.15.176
கும்பகருணன் வானரரைப் படுத்திய பாடு
(7575-7577)
7575. ஊழியில் பட்ட காலின்உலகங்கள் பட்டால் ஒப்ப,
பூழியில் பட்டு, செந்நீர்ப்புணரியில் பட்டு, பொங்கும்
சூழியின் பட்ட நெற்றிக்களிற்றொடும், துரந்த தேரின்
ஆழியில் பட்ட அன்றேஅவனியில் பட்ட எல்லாம் 6.15.177
7576. குன்று கொண்டு எறியும்; பாரில்குதிக்கும்; வெங்கூலம் பற்றி
ஒன்று கொண்டு ஒன்றை எற்றும்;உதைக்கும்; விட்டு உழக்கும்; வாரித்
தின்று தின்று உமிழும்; பற்றிச்சிரங்களைத் திருகும்; தேய்க்கும்;
மென்று மென்று இழிச்சும்;விண்ணில் வீசும்; மேல் பிசைந்து பூசும் 6.15.178
7577. வாரியின் அமுக்கும் கையால்மண்ணிடைத் தேய்க்கும்; வாரி
நீரிடைக் குவிக்கும்; அப்பால்நெருப்பிடை நிமிர வீசும்;
தேரிடை எற்றும்; எட்டுத்திசையினும் செல்லச் சிந்தும்;
தூரிடை மரத்து மோதும்;மலைகளில் புடைக்கும், சுற்றி. 6.15.179
அப்பொழுது போர்க்களத் தன்மை
7578. பறந்தனர் அமரர் அஞ்சி;பல் பெரும் பிணத்தின் பம்மல்
நிறைந்தன பறவை எல்லாம்;நெடுந்திசை நான்கும் நான்கும்
மறைந்தன; பெருமை தீர்ந்த,மலைக்குலம்; வற்றி வற்றிக்
குறைந்தன, குரக்கு வெள்ளம்;கொன்றனன், கூற்றும் கூச. 6.15.180
கும்பகருணனிடத்து வானரர் ஒன்றும் செய்ய
இயலாமை (7579-7581)
7579. ‘மற்று இனி ஒருவன்மேல்ஓர் மரனொடும் கற்கள் வீசப்
பெற்றிலம் ஆதும் அன்றே;இன்றொடும் பெறுவது ஆமேல்
அற்றன தீங்கும் ‘என்னாஅரிக்குலத் தலைவர் பற்றி,
எற்றின எறிந்த, எல்லாம்இணை நெடுந்தோளில் ஏற்றான். 6.15.181
7580. கல்லொடு மரனும், வேரும்,கட்டையும், காலில் தீண்டும்
புல்லொடு பிறவும் என்ன,பொடிப் பொடி ஆகிப் போன,
‘இல்லை, மற்று எறியத் தக்க,எற்றுவ, சுற்றும் என்ன,
பல்லொடு பல்லுமென்றுபட்டன குரங்கு முட்டி. 6.15.182
7581. குன்றின் வீழ் குரீஇக் குழாத்தின்குழாம் கொளக் குதித்துக் கூடி,
சென்று மேல் எழுந்து பற்றி,கைத்தலம் தேயக் குத்தி,
வன்திறல் எயிற்றால் கவ்வி.வள் உகிர் மடியக் கீளா,
ஒன்றும் ஆகின்றது இல்லைஎன்று இழிந்து ஓடிப் போன. 6.15.183
நீலன் பொருதல் (7582-7584)
7582. மூலமே மண்ணில் மூழ்கிக்கிடந்தது ஓர் பொருப்பை, முற்றும்
காலம் மேல் எழுந்த கால் போல்,கையினால் கடிதின் வாங்கி,
நீலன், மேல் நிமிர்ந்தது ஆங்குஓர் நெருப்பு எனத் திரித்து விட்டான்;
சூலமே கொண்டு நூறி,முறுவலும் தோன்ற நின்றான். 6.15.184
7583. ‘பெயர்ந்து ஒரு சிகரம் தேடின்,அச்சம் ஆம் பிறர்க்கும் ‘என்னாப்
புயங்களே படைகள் ஆகத்தேர் எதிர் ஓடிப் புக்கான்,
இயங்களும் கடலும் மேகத்துஇடிகளும் ஒழிய, யாரும்
பயம் கொளக் கரங்கள் ஓச்சிக்குத்தினான், உதைத்தான் பல்கால். 6.15.185
7584. கைத்தலம் சலித்து, காலும்குலைந்து, தன் கருத்து முற்றான்,
நெய்த்தலை அழலின் காந்திஎரிகின்ற நீலன் தன்னை,
எய்த்து உயிர் பதைத்து வீழ,எற்றினான் இடது கையால்;
முத்தலைச் சூலம் ஓச்சான்,வெறுங்கையான் என்ன வெள்கி. 6.15.186
அங்கதன் போர் (7585-7588)
7585. ஆண்டு, அது நோக்கி நின்றஅங்கதன், ஆண்டுச் சால
நீண்டது ஓர் நெடுந் திண் குன்றம்நில முதுகு ஆற்ற வாங்கி,
‘மாண்டனன் அரக்கன் தம்பி ‘என்று உலகு ஏழும் வாழ்த்தத்
தூண்டினன்; அதனை அன்னான்ஒரு தனித் தோளின் ஏற்றான். 6.15.187
7586. ஏற்றபோது அனைய குன்றம்எண்ணருந் துகளது ஆகி,
வீற்று வீற்று ஆகி, ஓடிவிழுதலும், கவியின் வெள்ளம்,
‘ஊற்றம் ஏது, எமக்கு! ‘என்றுஎண்ணி, உடைந்தது; குமரன் உற்ற
சீற்றமும் தானும் நின்றான்;பெயர்த்திலன் சிறிதும் பாதம். 6.15.188
7587. இடக்கையால் அரக்கன் ஆங்குஓர் எழு முனை வயிரத் தண்டு
தடுக்கலாம் தரத்தது அல்லாவலியது, தடுக்கின் வாங்கி
‘மடக்குவாய் உயிரை ‘என்னா,வீசினான்; அதனை மைந்தன்
தடக்கையால் பிடித்துக் கொண்டான்,வானவர் தன்னை வாழ்த்த. 6.15.189
7588. பிடித்த அது சுழற்றி, ‘மற்றுஅப் பெருவலி அரக்கன் தன்னை,
இடித்து, உரும் ஏறு, குன்றத்துஎரி மடுத்து, இயங்குமா போல்,
‘அடித்து, உயிர் குடிப்பென் ‘என்னா,அனல் விழித்து, ஆர்த்து, மண்டி,
கொடித் தடந் தேரின் முன்னர்க்குதித்து, எதிர் குறுகி, நின்றான் 6.15.190
கும்பகருணன் அங்கதன் யாடல் (7589-7592)
7589. நின்றவன் தன்னை அன்னான்நெருப்பு எழ நிமிர நோக்கி,
‘பொன்ற வந்து அடைந்த தானைப்புரவலன் ஒருவன் தானோ?
அன்று அவன் மகனோ? எம் ஊர்அனல் மடுத்து அரக்கர் தம்மை
வென்றவன் தானோ? யாரோ?விளம்புதி, விரைவின் ‘என்றான். 6.15.191
7590. ‘நும்முனை வாலில் சுற்றி,நோன் திசை நான்கும் தாவி,
மும்முனை நெடுவேல் அண்ணல்முளரி அம் சரணம் தாழ்ந்த
வெம்முனை வீரன் மைந்தன்நின்னை என் வாலின் வீக்கித்
தமெ்முனை இராமன் பாதம்வணங்கிடச் செல்வென் ‘என்றான். 6.15.192
7591. ‘உந்தையை, மறைந்து, ஓர்அம்பால் உயிர் உண்ட உதவியோற்குப்
பந்தனைப் பகையைச் செற்றுக்காட்டலை என்னின், பாரோர்
நிந்தனை நின்னைச் செய்வர்;நல்லது நினைந்தாய்; நேரே
வந்தனை புரிவர் அன்றே,வீரராய் வசையில் தீர்ந்தார். 6.15.193
7592. ‘இத்தலை வந்தது, என்னைஇராமன்பால் வாலின் ஈர்த்து
வைத்தலைக் கருதி அன்று;வானவர் மார்பில் தைத்த
முத்தலை அயிலின் உச்சிமுதுகு உற, மூரி வால் போல்
கைத்தலம் காலும் தூங்கக்கிடத்தலைக் கருதி ‘என்றான். 6.15.194
அங்கதன் வீசிய எழுமுனைத் தண்டு கும்பகருணன் மேற்பட்டுச் சிதைதல்
7593. அற்று அவன் த்தலோடும்,அனல் விழித்து அசனி குன்றத்து
உற்றது போலும் என்னும்ஒலிபட, உலகம் உட்க,
பொன் தடந் தோளின் வீசிப்புடைத்தனன்; பொறியின் சிந்தி,
இற்றது நூறு கூறாய்,எழுமுனை வயிரம் தண்டு. 6.15.195
அங்கதன் வீழ அனுமன் வந்து எதிர்த்தல்
7594. தண்டு இறத் தடக்கை ஓச்சித்தழுவி, ‘அத் தறுகணானைக்
கொண்டு இறப்புறுவன் ‘என்னாத்தலையுறக் குதிக்குங் காலைப்
புண்திறப்புற வலாளன்கையினால் புகைந்து குத்த,
மண்திறப்பு எய்த வீழ்ந்தான்;மாருதி இமைப்பின் வந்தான். 6.15.196
அனுமன் கும்பகருணன்மேல் குன்றினை வீசுவது
7595. மறித்தவன் அவனைத் தன்கை வயிரவாள் சூலம் மார்பில்
குறித்துற எறியலுற்றகாலையில், குன்றம் ஒன்று
பறித்து அவன் நெற்றி முற்றப்பரப்பிடைப் பாகம் உள்ளே
செறித்தனெச் சுரிக்க வீசித்தீர்த்தனை வாழ்த்தி ஆர்த்தான். 6.15.197
கும்பகருணன் தன் தலையில் பட்ட மலையையே அனுமன் மேல் வீசுதல்
7596. தலையினில் தைத்து வேறுஓர்தலை என நின்ற அந்த
மலையினைக் கையின் வாங்கி,மாருதி வயிர மார்பின்,
உலை உற வெந்த பொன்செய்கம்மியர் கூடம் ஒப்பக்,
குலை உறு பொறிகள் சிந்த,வீசி, தோள் கொட்டி ஆர்த்தான். 6.15.198
அங்கதனை வானரம் எடுத்துச் செல்லுதல்
7597. அவ்வழி வாலி சேயைஅரிக்குல வீரர் அஞ்சார்
வவ்வினர் கொண்டு போனார்;மாருதி வானை முற்றும்
கவ்வியது அனையது ஆங்குஓர் நெடுவரை கடிதின் வாங்கி,
எவ்வம் இல் ஆற்றலானை நோக்கிநின்று, இனைய சொன்னான். 6.15.199
அனுமனது வஞ்சினம்
7598. எறிகுவென் இதனை நின்மேல்;இமைப்புறும் அளவில் ஆற்றல்
மறிகுவது; அன்றி, வல்லேமாற்றினை என்னின், வன்மை
அறிகுவர் எவரும்; பின்னை யான்உன்னோடு அமரும் செய்யேன்;
பிறிகுவென்; உலகில், வல்லோய்!பெரும்புகழ் பெறுதி என்றான். 6.15.200
கும்பகருணன் வஞ்சினம்
7599. மாற்றம் அஃது ப்பக் கேளா,மலை முழை திறந்தது என்னக்
கூற்று உறழ் பகுவாய் விள்ளநகைத்து, ‘நீ கொணர்ந்த குன்றை
ஏற்றனென்; ஏற்ற காலத்து,இறை அதற்கு ஒற்கம் எய்தின்,
தோற்றனென், உனக்கு; என் வன்மைசுருங்கும் ‘என்று அரக்கன் சொன்னான் 6.15.201
கும்பகருணன் தோள்மேல் ஏற்க மலை துகளாதல்
7600. மாருதி, ‘வல்லை ஆகின்,நில், அடா! மாட்டாய் ஆகின்,
பேருதி, உயிர்கொண்டு ‘என்றுபெருங்கையால் நெருங்க விட்ட
கார் உதிர் வயிரக் குன்றைக்காத்திலன், தோள்மேல் ஏற்றான்;
ஓர் உதிர் நூறு கூறாய்உக்கது, எவ் உலகும் உட்க. 6.15.202
தான் எறிந்த மலை துகளானது கண்டு அனுமன் பெயர்தல்
7601. இளக்கம் ஒன்று இன்றி நின்றஇயற்கை பார்த்து, ‘இவனது ஆற்றல்
அளக்குறற் பாலும் ஆகா;குல வரை அமரின் ஆற்றா;
துளக்குறும் நிலையன் அல்லன்;சுந்தரத் தோளன் வாளி
பிளக்குமேல், பிளக்கும் ‘என்னா,மாருதி பெயர்ந்து போனான். 6.15.203
கும்பகருணன் ஆற்றலைக் கண்டு தேவர்கள் கலங்குதலும் நடுங்குதலும்
7602. ‘எழுபது வெள்ளத் துள்ளார்இறந்தவர் ஒழிய, யாரும்
முழுவதும் மாள்வர், இன்றேஇவன் வலத்து அமைந்த முச்சூல்
கழுவினில் ‘என்று வானோர்கலங்கினார், நடுங்கினார் ஓர்
பொழுதினில் உலகம் மூன்றும்திரியும் ‘என்று உள்ளம் பொங்கி. 6.15.204
குரங்குகளின் அழிவும் கும்பகருணன் ஆண்மையும்
7603. தாக்கினார், தாக்கினார் தம்கைத்தலம் சலித்தது அன்றி,
நூக்கினார் ஒருவர் இல்லை;நோவு செய்தாரும் இல்லை
ஆக்கினான்; களத்தின் ஆங்குஓர் குரங்கினது அடியும் இன்றிப்
போக்கினான், ஆண்மையாலே;புதுக்கினான் புகழை அம்மா. 6.15.205
கும்பகருணன் ஆரவாரம்
7604. ‘சங்கத்து ஆர் குரங்கு சாய,தாபதர் என்னத் தக்கார்
இங்கு உற்றார் அல்லரோதான்?வேறும் ஓர் இலங்கை உண்டோ?
எங்கு உற்றார் எங்கு உற்றார்? ‘என்றுஎடுத்து அழைத்து, இமையோர் அஞ்ச,
துங்கத் தோள்கொட்டி, ஆர்த்தான்கூற்றையும் துணுக்கம் கொண்டான் 6.15.206
போர்க்களத்து இரத்தம் பெருகுதல்
7605. பறந்தலை தன்னில் வந்தபல பெருங் கவியின் பண்ணை
இறந்தது கிடக்க, நின்றஇரிதலின் யாரும் இன்றி
வறந்தது; சோரி பாயவளர்ந்தது, மகர வேலை
குறைந்தது, உவாவுற்று ஓதம்கிளர்ந்து மீக்கொண்டது என்ன. 6.15.207
இலக்குவன் வந்து தாக்குதல்
7606. ‘குன்றும் கற்களும் மரங்களும்குறைந்தன; குரங்கின்
வென்றி அம் பெருஞ்சேனை ஓர்பாதியின் மேலும்
அன்று தேய்ந்தது ‘என்று த்தலும்அமரர் கண்டு உவப்பச்
சென்று தாக்கினன், ஒருதனிச்சுமித்திரை சிங்கம். 6.15.208
இலக்குவன் நாணொலி செய்தல்
7607. நாண் எறிந்தனன், சிலையினை;அரக்கியர் நகுபொன்
பூண் எறிந்தனர் படியிடை;இடி பொடித்து என்ன
சேண் எறிந்தன; திசை செவிடுஎறிந்தன; அலகை,
தூண் எறிந்தன கையெடுத்து,ஆடின துணங்கை. 6.15.209
இலக்குவனது அம்புகளின் செயல் (7608-7612)
7608. இலக்குவன் கடிது ஏவின,இரை பெறாது இரைப்ப,
சிலைக் கடுங்கணை நெடுங்கணம்சிறையுடன் செல்வ,
உலைக் கொடுங் கனல் வெதும்பிடவாய் எரிந்து ஓடி,
குலக் கயங்களில் குளித்தன;குடித்தன, குருதி 6.15.210
7609. அலை படைத்த வாள் அரக்கரைச்சில கழுத்து அரிவ;
சில சிரத்தினைத் துணித்து,அவை திசைகொண்டு செல்வ;
கொலை படைத்த வெங் களத்திடைவிழாக் கொண்டு போவ;
தலை படைத்தன போன்றனவாள், நெடுஞ் சரங்கள் 6.15.211
7610. உருப் பதங்கனை ஒப்பனசில கணை, ஓடைப்
பொருப்பதங்களை உருவி, மற்றுஅப்புறம் போவ;
செருப்பதம் பெறா அரக்கர்தம்தலை பல சிந்தி,
பருப்பதங்கள் புக்கு ஒளிப்பனமுழைபுகு பாம்பின். 6.15.212
7611. மின் புகுந்தன பல்குழுவாம்என மிளிர்வ,
பொன் புகுந்து ஒளிர் வடிம்பினகடுங்கணை போவ,
முன்பு நின்றவர் முகத்திற்கும்,கடைக்குழை முதுகின்
பின்பு நின்றவர் மிடற்றிற்கும்,விசை ஒக்கும், பிறழா. 6.15.213
7612. போர்த்த பேரியின் கண்ணன,காளத்தின் பொகுட்ட,
ஆர்த்த வாயன, கையன,ஆனையின் கழுத்த,
ஈர்த்த தேரன, இவுளியின்தலையன, எவர்க்கும்
பார்த்த நோக்கன, கலந்தனஇலக்குவன் பகழி. 6.15.214
யானைகள்
7613. மருப்பு இழந்தன; களிறு எலாம்வால் செவி இழந்த;
நெருப்பு உகும் கண்கள்இழந்தன; நெடுங்கரம் இழந்த;
செருப் புகும் கடுங்காத்திரம்இழந்தன; சிகரப்
பொருப்பு உருண்டன ஆம்எனத் தலத்திடைப் புரண்ட. 6.15.215
குதிரைகள்
7614. நிரந்தரம் தொடை நெகிழ்த்தலின்,திசை எங்கும் நிறைந்த
சரம் தலைத்தலைப் படப்படமயங்கின சாய்ந்த;
உரம் தலத்துற உழைத்தவால்;பிழைத்தது ஒன்று இல்லை;
குரம் தலத்தினும் விசும்பினும்மிதித்திலாக் குதிரை. 6.15.216
7615. பல்லவப் படை பட, படுபுரவிய, பல்கால்
வில்லுடைத் தலையாெளாடுசூதரை வீழ்த்த,
எல்லை அற்ற செங்குருதியின்ஈர்ப்புண்ட அல்லால்,
செல்லகிற்றில, நின்றிலகொடி நெடுந் தேர்கள். 6.15.217
7616. பேழை ஒத்து அகல் வாயனபேய்க்கணம் முகக்கும்
மூழை ஒத்தன கழுத்து அறவீழ்ந்தன, முறைசால்
ஊழை ஒத்தன ஒருகணைதைத்தன, உதிரத்
தாழி ஒத்த வெங்குருதியில்மிதப்பன, தலைகள். 6.15.218
7617. ஒட்டி நாயகன் வென்றி நாள்குறித்து ஒளிர்முளைகள்
அட்டி வைத்தன பாலிகைநிகர்த்தன அழிந்து
நட்டவாம் என வீழ்ந்தன,துடிகளின் நவைதீர்
வட்ட வான் கணில், வதிந்தனவருண சாமரைகள் 6.15.219
7618. எரிந்த வெங்கணை நெற்றியில்படுதொறும், யானை,
அரிந்த அங்குசத்து அங்கையின்கல்வியின் அமையா,
திரிந்த வேகத்த, பாகர்கள்தீர்ந்தன, செருநேர்
புரிந்த வானரத் தானையில்புக்கன, புயலின். 6.15.220
7619. வேனிலான் அன்ன இலக்குவன்விடுகணை விலக்க,
மான வெள் எயிற்று அரக்கர்தம்படைக்கல வாரி
போன போன வன்திசைதொறும்பொறிக்குலம் பொடிப்ப,
மீன் எலாம் உடன் விசும்பின் நின்றுஉதிர்ந்தனெ வீழ்ந்த. 6.15.221
7620. கரம் குடைந்தன, தொடர்ந்துபோய்க் கொய் உளைக் கடுமாக்
குரம் குடைந்தன, வெரிந்உறக் கொடி நெடுங் கொற்றத்
திரம் குடைந்தன, அணி நெடுந்தேர்க்குலம் குடைந்த,
அரம் குடைந்தன அயில்நெடு வாளிகள் அம்மா! 6.15.222
அரக்கர் துறக்கம் புகுதல்
7621. ‘துரக்கும், மெய்யுணர்வு இருவினைகளைஎனும் சொல்லின்
கரக்கும் வீரதை தீமையை ‘எனும் இது கண்டோம்;
இரக்கம் நீங்கினர், அறத்தொடும்திறம்பினர் எனினும்
அரக்கர் ஆக்கையை அரம்பையர்தழுவினர், விரும்பி. 6.15.223
துறக்கமே பெரியது
7622. மறக் கொடுந் தொழில் அரக்கர்கள்,மறுக்கிலா மழைபோல்
நிறக் கொடுங்கணை நெருப்பொடுநிகர்வன நிமிர,
இறக்கம் எய்தினர் யாவரும்,எய்தினர் எனின், அத்
துறக்கம் என்பதின் பெரியதுஒன்று உளது எனச் சொல்லேம். 6.15.224
இலக்குவன் பகழி (7623-7625)
7623. ஒருவரைக் கரம், ஒருவரைச்சிரம், மற்று அங்கு ஒருவர்
குரை கழல்துணை, தோளிணை,பிற மற்றும் கொளலால்,
விரவலர்ப் பெறா வெறுமையஆயின; வெவ்வேறு
இரவு கற்றன போன்றனஇலக்குவன் பகழி. 6.15.225
7624. சிலவரைக் கரம், சிலவரைச்செவி, சிலர் நாசி,
சிலவரைக் கழல், சிலவரைக்கண், கொளும் செயலால்
நிலவரைத் தரு பொருள்வழித்தண்தமிழ் நிரப்பும்
புலவர் சொல் துறை புரிந்தவும்போன்றன புங்கம். 6.15.226
7625. அறத்தின் இன் உயிர் அனையவன்கணைபட, அரக்கர்
‘இறத்தும், இங்கு இறை நிற்பின் ‘என்றுஇரியலின் மயங்கி,
திறத்திறம் படத் திசை தொறும்திசைதொறும் சிந்திப்
புறத்தின் ஓடினர், ஓடினகுருதியே போல. 6.15.227
இலக்குவன் வில்லாண்மையைக் கும்பகருணன் வியத்தல்
7626. செருவில் மாண்டவர் பெருமையும்,இலக்குவன் செய்த
வரிவில் ஆண்மையும், நோக்கியபுலத்தியன் மருமான்,
‘திரிபுரம் செற்ற தேவனும்இவனுமே செருவின்
ஒருவிலாளர் ‘என்று ஆயிரம்கால்எடுத்து த்தான். 6.15.228
கும்பகருணன் இலக்குவனொடு பொர வருதல்
7627. .படர் நெடுந் தடந் தட்டு இடைத்திசைதொறும் பாகர்
கடவுகின்றது, காற்றினும்மனத்தினும் கடியது,
அடல் வயங்கொள் வெஞ்சீயம்நின்று ஆர்க்கின்றது, அம்பொன்
வட பெருங்கிரி பொருவுதேர் ஓட்டினன் வந்தான். 6.15.229
அனுமன் இலக்குவனைத் தோள்மேல் ஏறுக எனல்
7628. தொளைகொள் வாள் நுகச் சுடர்நெடுந் தேர்மிசைத் தோன்றி,
வளைகொள் வெள் எயிற்றுஅரக்கன் வெஞ்செருத் தொழில் மலைய,
‘கிளைகொளாது, இகல் ‘என்றுஎண்ணி, மாருதி கிடைத்தான்,
‘இளைய வள்ளலே! ஏறுதிதோள்மிசை ‘என்றான். 6.15.230
இலக்குவன் அனுமன் தோள்மேல் ஏறுதல்
7629. ஏறினான், இளங் கோளரி;இமையவர் ஆசி
கூறினார்; எடுத்து ஆர்த்ததுவானரக் குழுவும்;
நூறு பத்துடைப் பத்தியின்நொறில் பரி பூண்ட
ஆறு தேரினும் அகன்றது,அனுமன்தன் தடந் தோள். 6.15.231
இலக்குவன் அனுமன்மேல் அமர்ந்த தோற்றம்
7630. தன்னின் நேர் பிறர் தான்அலாது இல்லவன் தோள்மேல்,
துன்னு பேர் ஒளி இலக்குவன்தோன்றிய தோற்றம்,
பொன்னின் மால்வரை வெள்ளிமால்வரை மிசைப் பொலிந்தது
என்னுமாறு அன்றி, பிறிதுஎடுத்து இயம்புவது யாதோ? 6.15.232
கும்பகருணன் அம்பறாத்தூணி கட்டிக்கொண்டு வில்லை வளைத்தல்
7631. ஆங்கு, வீரனோடு அமர் செய்வான்அமைந்த வாள் அரக்கன்,
தாங்கு பல்கணைப் புட்டிலும்தகைபெறக் கட்டி,
வீங்கு தோள் வலிக்கு ஏயது,விசும்பில் வில் வெள்க,
வாங்கினான், நெடு வடவரைபுரைவது ஓர் வரிவில். 6.15.233
கும்பகருணன் கூறுவது (7632-7633)
7632. இராமன் தம்பி நீ; இராவணன்தம்பி நான்; இருவேம்
பொராநின்றேம்; இது காணியவந்தனர், புலவோர்;
பராவும் தொல் செருமுறை வலிக்குஉரியன பகர்ந்து,
விராவு நல் அமர் விளைக்குதும்,யாம் ‘என விளம்பா. 6.15.234
7633. ‘பெய் தவத்தின் ஓர் பெண் கொடி,எம்முடன் பிறந்தாள்,
செய்த குற்றம் ஒன்று இல்லவள்,நாசி வெஞ்சினத்தால்
கொய்த கொற்றவ! மற்று அவள்கூந்தல் தொட்டு ஈர்த்த
கை தலத்திடைக் கிடத்துவென்;காக்குதி ‘என்றான். 6.15.235
இலக்குவன் மறுமொழி
7634. அல்லினால் செய்த நிறத்தவன்அனையது பகர,
மல்லினால் செய்த புயத்தவன்,‘மாற்றங்கள் நும்பால்
வில்லினால் சொல்லின் அல்லது,வெந்திறல் வெள்கச்
சொல்லினால் சொலக் கற்றிலம்,யாம் ‘எனச் சொன்னான். 6.15.236
இருவரும் பொருதல் (7635-7644)
7635. விண் இரண்டு கூறு ஆயது;பிளந்தது வெற்பு;
மண் இரண்டு உறக் கிழிந்ததுஎன்று இமையவர் மறுக,
கண் இரண்டினும் தீ உகக்,கதிர்முகப் பகழி
எண் இரண்டினோடு இரண்டு ஒருதொடை தொடுத்து எய்தான். 6.15.237
7636. கொம்பு நாலுடைக் குலக் கரிகும்பத்தில் குளித்த,
உம்பர் ஆற்றலை ஒதுக்கிய,உரும் எனச் செல்வ,
வெம்பு வெஞ்சினத்து இராவணற்குஇளையவன் விட்ட
அம்பு பத்தினோடு எட்டையும்நான்கினால் அறுத்தான். 6.15.238
7637. அறுத்த காலையின், அரக்கனும்அமரரை நெடு நாள்
ஒறுத்தது, ஆயிரம் உருவது,திசைமுகன் உதவப்
பொறுத்தது, ஆங்கு ஒரு புகர்முகக் கடுங்கணைப் புத்தேள்
‘இறுத்து மாற்றிது வல்லையேல் ‘என்று கோத்து எய்தான். 6.15.239
7638. புரிந்து நோக்கிய திசைதொறும்பகழியின் புயலாய்,
எரிந்து செல்வதை நோக்கியஇராமனுக்கு இளையான்,
தரெிந்து, மற்று அது தன்னை ஓர்தயெ்வ வெங் கணையால்
அரிந்து வீழ்த்தலும், ஆயிரஉருச்சரம் அற்ற. 6.15.240
7639. ஆறு இரண்டு வெங்கடுங்கணைஅனுமன் மேல் அழுத்தி,
ஏறு வெஞ்சரம் இரண்டுஇளங்குமரன் மேல் ஏற்றி,
நூறும் ஐம்பதும் ஒரு தொடைதொடுத்து ஒரு நொடியில்,
கூறு திக்கையும் விசும்பையும்மறைத்தனன், கொடியோன். 6.15.241
7640. மறைத்த வாளிகள் எவற்றையும்அவற்றினான் மாற்றி,
துறைத் தலந்தொறும் தலந்தொறும்நின்று தேர் சுமக்கும்
பொறைக்கு அமைந்த வெங்கரி, பரி,ஆளி, மாப் பூதம்,
திறத்திறம்படத் துணித்து, அவன்தேரையும் சிதைத்தான். 6.15.242
7641. தேர் அழிந்தது, செங்கதிர்ச்செல்வனைச் சூழ்ந்த
ஊர் அழிந்ததுபோல்; துரந்துஊர்பவர் உலந்தார்;
நீர் அழிந்திடா நெடுமழைக்குழாத்திடை நிமிர்ந்த
பார வெஞ்சிலை அழிந்தனெத்துமிந்தது, அப்பருவில். 6.15.243
7642. செய்த போரினை நோக்கி,‘இத்தேரிடைச் சேர்ந்த
கொய் உளைக் கடுங் கோளரிமுதலிய குழுவை
எய்து கொன்றனனோ? நெடுமந்திரம் இயம்பி,
வைது கொன்றனனோ ‘என,வானவர் மயர்ந்தார். 6.15.244
கும்பகருணன் கொதித்து, சூலப்படை எடுத்தல்
7643. ஊன்று தேரொடு சிலை இலன்,கடல் கிளர்ந் தொப்பான்,
‘ஏன்று, மற்று இவன் இன் உயிர்குடிப்பல் ‘என்று, உலகம்
மூன்றும் வென்றமைக்கு இடுகுறிஎன்ன முச் சிகைத்தாய்த்
தோன்றும் வெஞ்சுடர்ச் சூலவெங்கூற்றினைத் தொட்டான். 6.15.245
கும்பகருணன் தரையில் நிற்பது கண்டு
இலக்குவனும் தரையில் நிற்றல்
7644. இழியப் பாய்ந்தனன், இருநிலம்பிளந்து இரு கூறா,
கிழியப் பாய்புனல் கிளர்ந்தனெக்கிளர்சினத்து அரக்கன்;
‘பழி, அப்பால்; இவன் பதாதி ‘என்று, அனுமன்தன் படர்தோள்
ஒழியப் பார்மிசை இழிந்துசென்று, இளவலும் உற்றான். 6.15.246
இராவணன் தம்பிக்கு உதவ அனுப்பிய சேனை இலக்குவனை வளைத்தல் (7645-7646)
7645. உற்ற காலையின், இராவணன்,தம்பிமாடு உதவ
இற்ற தானையின் இருமடிஇகல்படை ஏவ,
முற்றி அன்னது, முழங்குமுந்நீர் என முடுகிச்
சுற்றி ஆர்த்தது, சுமித்திரைசிங்கத்தைத் தொடர்ந்து. 6.15.247
7646. இருந்த வானரர் இரியல் போய்மயங்கினர்; எவரும்
சொரிந்த வெம்படை துணித்திடைத்தடுப்பருந் தொழிலால்
பரிந்த அண்ணலும், பரிவு இலன்ஒருபுடை படரப்
புரிந்த அந்நெடுஞ் சேனை அம்கருங்கடல் புக்கான். 6.15.248
களத்தில் காணப்பட்ட அழிவுகள் (7647-7651)
7647. முருக்கின் நாள்மலர் முகை விரிந்தால்அன்ன முரண்கண்
அரக்கர் செம்மயிர்க் கருந்தலைஅடுக்கலின் அணைகள்
பெருக்கினான் பெரும் கனல் இடைப்பெய்து பெய்து, எருவை
உருக்கினால் அன்ன குருதி நீர்ஆறுகள் ஒதுங்க. 6.15.249
7648. கரியின் கைகளும், புரவியின்கால்களும், காலின்
திரியும் தேர்களின் சில்லியும்,அரக்கர்தம் சிரமும்,
சொரியும் சோரியின் துறைதொறும்துறைதொறும் சுழிப்ப,
நெரியும் பல்பிணப் பெருங்கரைகடந்தில, நீத்தம். 6.15.250
7649. கொற்ற வாள், எழு, தண்டு, வேல்,கோல், மழு, குலிசம்,
மற்றும் வேறு உள படைக்கலம்,இலக்குவன் வாளி
சுற்றும் ஓடுவ தொடர்ந்து இடைதுணித்திட, தொகையாய்
அற்ற துண்டங்கள் படப்பட,துணிந்தன அனந்தம். 6.15.251
7650. குண்டலங்களும், மோலியும்ஆரமும், கோவை,
தண்டை, தோள்வளை, கடகம், என்றுஇனையன, தறுகண்
கண்ட கண்டங்கெளாடும் கணைதுரந்தன, கதிர் சூழ்
மண்டலங்களை மாறுகொண்டுஇமைத்தன, வானில். 6.15.252
7651. பரந்த வெண்குடை சாமரை,நெடுங்கொடி, பதாகை,
சரம் தரும் சிலை, கேடகம்,பிச்சம், மொய் சரங்கள்
துரந்து செல்வன, குருதி நீர்ஆறுகள் தோறும்
நிரந்த பேய்க்கணம் கரைதொறும்குவித்தன நீந்தி. 6.15.253
கும்பகருணன் வேறொரு திசையில் சுக்கிரீவனோடு பொருதல் (7652-7656)
7652. ஈண்டு வெஞ்செரு இனையனநிகழ்வுழி எவர்க்கும்,
நீண்ட வெள் எயிற்று அரக்கன்,மற்று ஒருதிசை நின்றான்,
பூண்ட வெஞ்செரு இரவி கான்முளையொடும் பொருதான்;
‘காண்தகும் ‘என இமையவர்குழுக்கொண்டு, கண்டார். 6.15.254
7653. பொறிந்து எழு கண்ணினன்,புகையும் வாயினன்,
செறிந்து எழு கதிரவன்சிறுவன் சீறினான்
‘முறிந்தன அரக்கன் மாமுரண் திண் தோள் ‘என,
எறிந்தனன், விசும்பில்,மாமலை ஒன்று ஏந்தியே. 6.15.255
7654. அம்மலை நின்று வந்து அவனி எய்திய
செம்மலை அனைய வெங்களிறும் சேனையின்
வெம்மலை வேழமும் பொருத; வேறு இனி
எம்மலை உள அவற்கு எடுக் கொணாதன? 6.15.256
7655. இவ்வகை நெடுமலை இழிந்த மாசுணம்
கவ்விய நிருதர்தம் களிறும் கட்டு அற;
அவ்வகை மலையினை ஏற்று ஓர் அங்கையால்
வவ்வினன் அரக்கன் வாள் அவுணர் வாழ்த்தினார். 6.15.257
7656. ஏற்று ஒரு கையினால் ‘இது கொல் நீ அடா!
ஆற்றிய குன்றம்? ‘என்று அளவு இல் ஆற்றலான்
நீற்றினும் நுணுகுறப் பிசைந்து ‘நீங்கு ‘என
தூற்றினன்; இமையவர் துணுக்கம் எய்தினார். 6.15.258
கும்பகருணன் சுக்கிரீவன்மேல் சூலத்தை எறிதல்
7657. ‘செல்வெனோ, நெடுங்கிரிஇன்னும் தேர்ந்து? ‘எனா,
எல்லவன் கான்முளைஉணரும் ஏல்வையில்,
‘கொல்! ‘என எறிந்தனன்,குறைவு இல் நோன்பினோர்
சொல் எனப் பிழைப்பு இலாச்சூலம், சோர்வு இலான். 6.15.259
அச் சூலத்தை அனுமன் ஒடித்தல்
7658. ‘பட்டனன் பட்டனன் ‘என்று பார்த்தவர்
விட்டு உலம்பிட நெடு விசும்பில் சேறலும்
எட்டினன் அது பிடித்து இறுத்து நீக்கினான்;
ஒட்டுமோ மாருதி அறத்தை ஓம்புவான்? 6.15.260
சூலம் ஒடிந்த பேரொலி
7659. சித்திர வனமுலைச் சீதை கேள்வனார்
அத்திரு மிதிலையில் அறிவு முற்றிய
பித்தன் வெஞ்சிலையினை இறுத்த பேர் ஒலி
ஒத்தது சூலம் அன்று இற்ற ஓசையே. 6.15.261
அனுமனைக் கும்பகருணன் புகழ்தல்
7660. நிருதனும் அனையவன் நிலைமை நோக்கியே
‘கருதவும் இயம்பவும் அரிது உன் கை வலி;
அரியன முடிப்பதற்கு அனைத்து நாட்டினும்
ஒருதனி உளை; இதற்கு உவமை யாது? ‘என்றான். 6.15.262
கும்பகருணன் போர் செய்ய அழைக்கவும் அது பழுது என அனுமன் அகலுதல்
7661. ‘என்னொடு பொருதியேல் இன்னும் யான் அமர்
சொன்னன புரிவல் ‘என்று அரக்கன் சொல்லலும்
‘முன் “இனி எதிர்க்கிலேன் ” என்று முற்றிய
பின் இகல் பழுது ‘எனாப் பெயர்ந்து போயினான். 6.15.263
சுக்கிரீவன் கும்பகருணனைக் குத்துதல்
7662. அற்றது காலையில் அரக்கன் ஆயுதம்
பெற்றிலன் பெயர்ந்திலன்; அனைய பெற்றியில்
பற்றினன் பாய்ந்து எதிர் பருதி கான்முளை
எற்றினன் குத்தினன் எறுழ்வெங் கைகளால். 6.15.264
கும்பகருணன் சுக்கிரீவனை நெருக்கிப் பற்றுதல்
7663. அரக்கனும் ‘நன்று நின் ஆண்மை; ஆயினும்
தருக்கு இனி இன்றொடும் சமையும்தான் ‘எனா
நெருக்கினன் பற்றினன் நீங்க ஒணா வகை;
உருக்கிய செம்பு அன உதிரக் கண்ணினான். 6.15.265
கும்பகருணனும் சுக்கிரீவனும் போர் செய்தல்
(7664-7665)
7664. திரிந்தனர் சாரிகை; தேவர் கண்டிலர்;
புரிந்தனர் நெடுஞ் செரு; புகையும் போர்த்து எழ
எரிந்தன உரும் எலாம்; இருவர் வாய்களும்
சொரிந்தன குருதி; தாம் இறையும் சோர்ந்திலர் 6.15.266
7665. உறுக்கினர் ஒருவரை ஒருவர்; உற்று இகல்
முறுக்கினர் முறைமுறை; அரக்கன் மொய்ம்பினால்
பொறுக்கிலாவகை நெடும் புயங்களால் பிணித்து
இறுக்கினன்; இவன் சிறிது உணர்வும் எஞ்சினான். 6.15.267
சுக்கிரீவனைக் கும்பகருணன் தூக்கிச் செல்லுதல்
7666. ‘மண்டு அமர் இன்றொடு மடங்கும்; மன் இலாத்
தண்டல் இல் பெரும்படை சிந்தும்; தக்கது ஓர்
எண்தரு கருமம் மற்று இதனின் இல் ‘என
கொண்டனன் போயினன் நிருதர் கோ நகர். 6.15.268
வானரப்படை அதுகண்டு அரற்றுதல்
7667. உரற்றின பறவையை ஊறு கொண்டு எழ
சிரற்றின பார்ப்பினின் சிந்தை சிந்திட
விரல்துறு கைத்தலத்து அடித்து வெய்துயிர்த்து
அரற்றின கவிக்குலம்; அரக்கர் ஆர்த்தனர். 6.15.269
சுக்கிரீவனைப் பிரிந்த வானரர் நிலை
7668. நடுங்கினர் அமரரும்; நா உலர்ந்து வேர்த்து
ஒடுங்கினர் வானரத் தலைவர் உள் முகிழ்த்து
இடுங்கின கண்ணினர் எரிந்த நெஞ்சினர்
‘மடங்கின ஆம் உயிர்ப்பு ‘என்னும் மாண்பினர். 6.15.270
சுக்கிரீவனைக் கும்பகருணன் எடுத்துச் செல்லும் தோற்றம் (7669-7670)
7669. புழுங்கிய வெஞ்சினத்து அரக்கன் போகுவான்
அழுங்கல் இல் கோள் முகத்து அரவம் ஆயினான்;
எழும் கதிர் இரவிதன் புதல்வன் எண்ணுற
விழுங்கிய மதி என மெலிந்து தோன்றினான். 6.15.271
7670. திக்கு உற விளக்குவான் சிறுவன் தீயவன்
மைக்கரு நிறத்திடை மறைந்த தன் உரு
மிக்கதும் குறைந்ததும் ஆக மேகத்துப்
புக்கது புறத்தது ஆம் மதியும் போன்றனன். 6.15.272
அனுமன் கைபிசைந்துகொண்டு கும்பகருணன்பின்
போதல்
7671. ‘ஒருங்கு அமர் புரிகிலேன் உன்னொடு யான் ‘என
நெருங்கிய யினை நினைந்து நேர்கிலன்
கருங்கடல் கடந்த அக்காலன் காலன் வாழ்
பெருங்கரம் பிசைந்து அவன் பின்பு சென்றனன். 6.15.273
சுக்கிரீவனை அரக்கன் எடுத்துச் சென்றதைச் சிலர் இராமனுக்குச் சொல்லுதல்
7672. ஆயிரம் பெயரவன் அடியில் வீழ்ந்தனர்
‘நாயகர் எமக்கு இனி யாவர் நாட்டினில்?
காய்கதிர்ச் செல்வனைப் பிணித்த கையினன்
போயினன் அரக்கன் ‘என்று இசைத்த பூசலார். 6.15.274
இராமன் சினமிக்கு விரைந்து இலங்கை நகர் வாயிலை அடைதல்
7673. தீயினும் முதிர்வுறச் சிவந்த கண்ணினான்
காய்கணை சிலையொடும் கவர்ந்த கையினான்
‘ஏ ‘எனும் அளவினில் இலங்கை மாநகர்
வாயில் சென்று எய்தினான் மழையின் மேனியான். 6.15.275
இராமன் அம்பு மாரியால் வாயிலை அடைத்தல்
7674. ‘உடைப் பெருந் துணைவனைஉயிரின் கொண்டுபோய்
கிடைப்பருங் கொடிநகர்அடையின், கேடு ‘என,
‘தொடைப் பெரும் பகழியின்மாரி தூர்த்து உற
அடைப்பென் ‘என்று, அடைத்தனன்,விசும்பின் ஆறு எலாம். 6.15.276
இராமன் பெய்த சரமாரியின் விளைவு
7675. மாதிரம் மறைந்தன; வயங்கு வெய்யவன்
சோதியின் கிளர்நிலை தொடர்தல் ஓவின;
யாதும் விண்படர்கில; இயங்கு கார்மழை
மீது நின்று அகன்றன; விசும்பு தூர்ந்ததால். 6.15.277
அம்புகளாலாய மதிலை நெருங்கிய கும்பகருணன் அதனைக் கடக்க இயலாது திரும்பிப் பார்த்தல்
7676. மனத்தினும் கடியது ஓர்விசையின் வான் செல்வான்,
இனக் கொடும் பகழியின்மதிலை எய்தினான்;
‘நினைத்தவை நீக்குதல்அருமை இன்று ‘என,
சினக் கொடுந் திறலவன்திரிந்து நோக்கினான். 6.15.278
இராமன் வடிவத்தைக் கும்பகருணன் காணுதல்
7677. கண்டனன் வதனம் வாய் கண் கை கால் எனப்
புண்டரீகத் தடம் பூத்துப் பொன்சிலை
மண்டலம் தொடர்ந்து மண் வயங்க வந்தது ஓர்
கொண்டலின் பொலிதரு கோலத்தான்தனை. 6.15.279
கும்பகருணன் இராமனைக் கண்டதும்
வெகுண்டு அதட்டுதல்
7678. மடித்தவாய் கொழும்புகை வழங்க மாறு இதழ்
துடித்தன; புருவங்கள் சுறுக்கொண்டு ஏறிட
பொடித்த தீ நயனங்கள்; பொறுக்கலாமையால்
இடித்தவன் தழெிப்பினால் இடிந்த குன்று எலாம். 6.15.280
கும்பகருணன் வீரச் சொல் (7679-7683)
7679. “‘மாக் கவந்தனும் வலி தொலைந்த வாலி ஆம்
பூக் கவர்ந்து உண்ணியும் போலும் “ என்று எனைத்
தாக்க வந்தனை; இவன் தன்னை இன் உயிர்
காக்க வந்தனை; இது காண தக்கதால். 6.15.281
7680. ‘உம்பியை முனிந்திலேன் அவனுக்கு ஊர்தியாம்
தும்பியை முனிந்திலேன் தோற்ற வாலிதன்
தம்பியை முனிந்திலேன் சமரம் தன்னில் யான்
அம்பு இயல் சிலையினாய்! புகழ் அன்று ஆதலால். 6.15.282
7681. ‘தேடினென் திரிந்தனென் நின்னை; திக்கு இறந்து
ஓடியது உன்படை; உம்பி ஓய்ந்து ஒரு
பாடு உற நடந்தனன்; அனுமன் பாறினன்;
ஈடுறும் இவனைக் கொண்டு எளிதின் எய்தினேன். 6.15.283
7682. ‘காக்கிய வந்தனை என்னின் கண்ட என்
பாக்கியம் தந்தது நின்னை; பல்முறை
ஆக்கிய செரு எலாம் ஆக்கி எம்முனைப்
போக்குவென் மனத்துறு காதல் புன்கண் நோய். 6.15.284
7683. ‘ஏதி வெந்திறலினோய்! இமைப்பு இலோர் எதிர்
பேது உறு குரங்கை யான் பிணித்த கைப் பிணி
கோதை வெஞ் சிலையினால் கோடி வீடு எனின்
சீதையும் பெயர்ந்தனள் சிறைநின்றாம் ‘என்றான். 6.15.285
இராமன் வஞ்சினம்
7684. என்றலும் முறுவலித்து இராமன் ‘யானுடை
இன்துணை ஒருவனை எடுத்த தோள் எனும்
குன்றினை அரிந்து யான் குறைக்கிலேன் எனின்
பின்றினென் உனக்கு; வில் பிடிக்கிலேன் ‘என்றான். 6.15.286
இராமன் கும்பகருணன்மேல் அம்பு எய்தல்
7685. மீட்டு அவன் கரங்களால் விலங்கல் ஆரையை
மூட்டு அற நீக்குவான் முயலும் வேலையில்
வாட்டம் இல் வைத் தலை வயங்கு வாளிகள்
சேட்டு அகல் நெற்றியின் இரண்டு சேர்த்தினான். 6.15.287
நெற்றியில் அம்புபட்ட கும்பகருணனது தோற்றம்
7686. சுற்றிய குருதியின் செக்கர் சூழ்ந்து எழ
நெற்றியின் நெடுங்கணை ஒளிர நின்றவன்
முற்றிய கதிரவன் முளைக்கும் முந்து வந்து
உற்று எழும் அருணனது உதயம் போன்றனன். 6.15.288
சுக்கிரீவன் மயக்கம் தெளிந்தழெுதல்
7687. குன்றின் வீழ் அருவியின் குதித்துக் கோத்து இழி
புன் தலைக் குருதிநீர் முகத்தைப் போர்த்தலும்
இன் துயில் எழுந்தனெ உணர்ச்சி எய்தினான்;
வன் திறல் தோற்றிலான் மயக்கம் எய்தினான். 6.15.289
தெளிந்த சுக்கிரீவன் இராமனைக் கண்டு
தொழுது வாழ்த்துதல்
7688. நெற்றியில் நின்று ஒளி நெடிது இமைப்பன
கொற்றவன் சரம் எனக் குறிப்பின் உன்னினான்;
சுற்று உற நோக்கினன் தொழுது வாழ்த்தினான்
முற்றிய பொருட்கு எலாம் முடிவுளான் தனை. 6.15.290
சுக்கிரீவன் கும்பகருணனது மூக்கையும் காதையும் கவர்ந்து செல்லுதல்
7689. கண்டனன் நாயகன்தன்னை,கண்ணுறா,
தண்டல் இல் மானமும்நாணும் தாங்கினான்,
விண்டவன் நாசியும்செவியும் வேரொடும்
கொண்டனன், எழுந்து போய்த்தமரைக் கூடினான். 6.15.291
கும்பகருணன் மூக்கையும் காதையும் இழந்தமை கண்டு ஆரவாரித்தல்
7690. வானரம் ஆர்த்தன; மழையும் ஆர்த்தன;
தானமும் ஆர்த்தன; தவமும் ஆர்த்தன;
மீன் நரல் வேலையும் வெற்பும் ஆர்த்தன;
வானவரோடு நின்று அறமும் ஆர்த்ததே. 6.15.292
சுக்கிரீவன் விடுதலை பெற்றமை கண்ட
இராமன் மகிழ்தல்
7691. காந்து இகல் அரக்கன் வெங்கரத்துள் நீங்கிய
ஏந்தலை அகம் மகிழ்ந்து எய்த நோக்கிய
வேந்தனும் சானகி இலங்கை வெஞ்சிறைப்
போந்தனள் ஆம் எனப் பொருமல் நீங்கினான். 6.15.293
கவிக் கூற்று
7692. மத்தகம் பிளந்து மாடு உருவ வார்சிலை
வித்தகன் சரம் தொட மெலிவு தோன்றிய
சித்திரம் பெறுதலின் செவியும் மூக்கும் கொண்டு
அத்திசைப் போந்தனன் அல்லது ஒண்ணுமோ? 6.15.294
கும்பகருணன் உணர்வு பெறுதல்
7693. அக்கணத்து அறிவு வந்து அணுக அங்கை நின்று
உக்கனன் கவி அரசு என்னும் உண்மையும்
மிக்கு உயர் நாசியும் செவியும் வேறு இடம்
புக்கதும் உணர்ந்தனன் உதிரப் போர்வையான். 6.15.295
குருதிசோர நின்ற கும்பகருணன் தோற்றம்
7694. தாது ராகத் தடங்குன்றம் தாரை சால்
கூதிர் கால் நெடுமழை சொரிய கோத்து இழி
ஊதையோடு அருவிகள் உமிழ்வது ஒத்தனன்
மீது உறு குருதி யாறு ஒழுகும் மேனியான். 6.15.296
கும்பகருணன் தன் தன்மை நினைந்து இரத்தக் கண்ணீர் சொரிதல்
7695. எண் உடைத் தன்மையன் இனைய எண் இலாப்
பெண் உடை தன்மையன் ஆய பீடையால்
புண் உடைச் செவியொடு மூக்கும் போன்றவால்
கண்ணுடைக் குழிகளும் குருதி கால்வன. 6.15.297
கும்பகருணனது வெகுளியின் விளைவு
7696. ஏசியுற்று எழும் விசும்பினரைப் பார்க்கும் : தன்
நாசியைப் பார்க்கும்; முன் நடந்த நாளுடை
வாசியைப் பார்க்கும்; இம்மண்ணைப் பார்க்குமால்
‘சீசி உற்றது! ‘எனத் தீயும் நெஞ்சினான். 6.15.298
கும்பகருணன் போர்செய்ய வாளும் கேடகமும் எடுத்தல் (7697-7699)
7697. ‘என்முகம் காண்பதன் முன்னம் யான் அவன்
தன்முகம் காண்பது சரதம்தான் ‘என
பொன்முகம் காண்பது ஓர் தோலும் போர் இடை
வன்முகம் காண்பது ஓர் வாளும் வாங்கினான். 6.15.299
7698. வீசினன் கேடகம் விசும்பின் மீன் எலாம்
கூசின; அமரரும் குடர் குழம்பினார்;
காய்சின அரக்கனும் கனன்றபோது அவன்
நாசியும் செவியும் வெங்குருதி நான்றவே. 6.15.300
7699. ஆயிரம் பேய் சுமந்து அளித்தது ஆங்கு ஒரு
மாயிருங் கேடகம் இடத்து வாங்கினான்;
பேய் இரண்டு ஆயிரம் சுமந்து பேர்வது ஓர்
காய் ஒளி வயிர வாள் பிடித்த கையினான். 6.15.301
கும்பகருணனது போர் ஆரவாரம்
7700. விதிர்த்தனன் வீசினன் விசும்பின் மீன் எலாம்
உதிர்த்தனன்; உலகினை அனந்தன் உச்சியோடு
அதிர்த்தனன்; ஆர்த்தனன் ஆயிரம் பெருங்
கதிர்த் தலம் சூழ் வடவரையின் காட்சியான். 6.15.302
கும்பகருணன் கேடகம் வீசுதல் (7701-7702)
7701. வீசினன் கேடகம்; முகத்து வீங்கு கால்
கூசின குரங்கு வெங்குழுவைக் கொண்டு எழுந்து
ஆசைகள் தோறும் விட்டு எறிய ஆர்த்து எழும்
ஓசை ஒண் கடலையும் திடர் செய்து ஓடுமால். 6.15.303
7702. போயின கேடகம் போக நோக்கினன்
ஆயிரம் பெயரவன் அறியும் முன்பு; அவன்
பேய் இரண்டாயிரம் பேணும் கேடகம்
‘ஏ ‘எனும் அளவினில் எய்தச் சென்றதால். 6.15.304
கும்பகருணன் வானரப் படையை அழிப்பது (7703-7704)
7703. தோலிடைத் துரக்கவும் துகைக்கவும் சுடர்
வேலுடைக் கூற்றினால் துணிய வீசவும்
காலுடைக் கடலெனச் சிந்தி கைகெட
வாலுடை நெடும்படை இரிந்து மாய்ந்ததால். 6.15.305
7704. ஏறுபட்டதும் இடை எதிர்ந்துேளார் எலாம்
கூறுபட்டதும் கொழுங் குருதி கோத்து இழிந்து
ஆறுபட்டதும் நிலம் அனந்தன் உச்சியும்
சேறுபட்டதும் ஒரு கணத்தில் தீர்ந்தவால். 6.15.306
சாம்பன் இராமனைத் தூண்டுதல்
7705. ‘இடுக்கு இலை எதிர்; இனி இவனை இவ் வழித்
தடுக்கிலையாம் எனின் குரங்கின் தானையை
ஒடுக்கினை அரக்கரை உயர்த்தினாய் ‘எனா
முடுக்கினன் இராமனைச் சாம்பன் முன்னியே. 6.15.307
இராமன் கும்பகருணனை எதிர்த்தல்
7706. அண்ணலும் தானையின் அழிவும் ஆங்கு அவன்
திண் நெடுங் கொற்றமும் வலியும் சிந்தியா
நண்ணினன் நடந்து எதிர் ‘நமனை இன்று இவன்
கண்ணிடை நிறுத்துவென் ‘என்னும் கற்பினான். 6.15.308
இராமனும் கும்பகருணனும் பொருதல் (7707-7710)
7707. ஆறினோடு ஏழுகோல் அசனி ஏறு என
ஈறு இலா விசையன இராமன் எய்தனன்;
பாறு உகு சிறை என விசும்பில் பாறிட
நூறினான் வாளினால் நுணங்கு கல்வியான். 6.15.309
7708. ஆடவர்க்கு அரசனும் தொடர அவ் வழி
கோடையின் கதிர் எனக் கொடிய கூர்ங்கணை
ஈடு உறத் துரந்தனன்; அவையும் இற்று உக
கேடகப் புறத்தினால் கிழியச் சிந்தினான். 6.15.310
7709. சிறுத்தது ஓர் முறுவலும் தரெிய செங்கணான்
மறித்து ஒரு வடிக்கணை தொடுக்க மற்று அவன்
ஒறுத்து ஒளிர் வாள் எனும் உரவு நாகத்தை
அறுத்தது கலுழனின் அமரர் ஆர்க்கவே. 6.15.311
7710. ‘அற்றது தடக்கை வாள் அற்றது இல் ‘என
மற்று ஒரு வயிரவாள் கடிதின் வாங்கினான்
‘முற்றினன் முற்றினன் ‘என்று முந்து வந்து
உற்றனன் ஊழித் தீ அவிய ஊதுவான். 6.15.312
இராமன் கும்பகருணனது, வாள், கேடகம் கவசம் இவற்றைத் துணித்தல்
7711. அந் நெடு வாளையும் துணித்த ஆண்தகை
பொன் நெடுங் கேடகம் புரட்டி போர்த்தது ஓர்
நல் நெடுங் கவசத்து நாம வெங்கணை
மின்னொடு நிகர்ப்பன பலவும் வீசினான். 6.15.313
அப்போது இராவணன் அனுப்பிய படை உதவிக்கு வருதல் (7712-7713)
7712. அந்தரம் அன்னது நிகழும் அவ் வழி
இந்திரன் தமரொடும் இரியல் எய்திட
சிந்துவும் தன்னிலை குலைய சேண் உற
வந்தது தசமுகன் விடுத்த மாப் படை. 6.15.314
7713. வில்வினை ஒருவனும் ‘இவனை வீட்டுதற்கு
ஒல்வினை இது ‘எனக் கருதி ஊன்றினான்;
வல்வினை தீயன வந்தபோது ஒரு
நல்வினை ஒத்தது நடந்த தானையே. 6.15.315
வந்த படையை இராமன் பொர அழைத்தல் (7714-7715)
7714. கோத்தது புடைதொறும் குதிரை தேரொடு ஆள்
பூத்து இழி மத மலை மிடைந்த போர்ப்படை
காத்தது கருணனை; கண்டு மாய மாக்
கூத்தனும் வருக! எனக் கடிது கூவினான். 6.15.316
7715. சூழி வெங் கடகரி புரவி தூண்டுமால்
ஆழி அம் தேரொடு மிடைந்த ஆர்கலி
ஏழ் இருகோடி வந்து எய்திற்று என்பரால்;
ஊழியின் ஒருவனும் எதிர் சென்று ஊன்றினான். 6.15.317
கும்பகருணன் சூலம் படை யேந்தி வருதல்
7716. காலமும் காலனும் கணக்கு இல் தீமையும்
மூலம் மூன்று இலை என வகுத்து முற்றிய
ஞாலமும் நாகமும் விசும்பும் நக்குறும்
சூலம் ஒன்று அரக்கனும் வாங்கித் தோன்றினான். 6.15.318
இராமன் அம்பால் அரக்கர் இறந்து கிடத்தல்
7717. ‘அரங்கு இடந்தன, அறுகுறை நடிப்பனஅல்ல ‘என்று இமையோரும்,
‘மரம் கிடந்தன, மலைக்குவைகிடந்தனவாம் ‘என மாறாடி,
கரம் கிடந்தன காத்திரம்கிடந்தன, கறைபடும்படி கவ்விச்
சிரம் கிடந்தன; கண்டனர்;கண்டிலர், உயிர்கொடு திரிவாரை. 6.15.319
அரக்கர் படைக்கலம் அழிவுற்றுக் கிடத்தல்
7718. இற்ற அல்லவும், ஈர்ப்பு உண்ட அல்லவும்,இடை இடை முறிந்து எங்கும்
துற்ற அல்லவும், துணிபட்ட அல்லவும்,சுடுபொறித் தொகை தூவி
வெற்ற வெம்பொடி ஆயின அல்லவும்,வேறு ஒன்று நூறு ஆகி
அற்ற அல்லவும், கண்டிலர்படைக்கலம் - அடுகளம் திடராக. 6.15.320
யானைகளின் அழிவு
7719. படர்ந்த கும்பத்துப் பாய்ந்தனபகழிகள் பாகரைப் பறிந்து ஓடி,
குடைந்து, வையகம் புக்குறத்தேக்கிய குருதியால் குடர்சோரத்
தொடர்ந்து, நோய் ஒடும் துணைமருப்புஇழந்து, தம் காத்திரம் துணி ஆகிக்
கிடந்த அல்லது நடந்தன கண்டிலர்கிளர் மதகரி எங்கும். 6.15.321
தேர்களின் அழிவு
7720. வீழ்ந்த ஆளன, விளிவுற்ற பதாகைய,வெயில் உமிழ் அயில் அம்பு
போழ்ந்த பல்நெடும் புரவிய,முறை முறை அச்சொடும் பொறி அற்று,
தாழ்ந்த வெள்நிணம் தயங்குவெங் குழம்பு இடைத் தலைத்தலை மாறு ஆடி,
ஆழ்ந்த அல்லது, பெயர்ந்தனகண்டிலர் அதிர்குரல் மணித் தேர்கள். 6.15.322
குதிரைப் படையின் அழிவு
7721. ஆடல் தீர்ந்தன, வளைகழுத்து அற்றன,அதிர் பெருங் குரல் நீத்த,
தாள் துணிந்தன, தறுகண் வெங்கரிநிரை தாங்கிய பிணத்து ஓங்கல்
கோடு அமைந்த வெங்குருதி நீர்ஆறுகள் சுழிதொறும் கொணர்ந்து உந்தி,
ஓடல் அன்றி, நின்று உகள்வனகண்டிலர் உருகெழு பரி எல்லாம். 6.15.323
காலாட் படையின் அழிவு
7722. வேத நாயகன் வெங்கணை வழக்கத்தின்மிகுதியை வெவ்வேறு இட்டு
ஓதுகின்றது என்? உம்பரும்,அரக்கர் வெங்களத்து வந்து உற்றாரைக்
காதல் விண்ணிடைக் கண்டனர்;அல்லது கணவர்தம் உடல் நாடும்
மாதர் வெள்ளமே கண்டனர்;கண்டிலர் மலையினும் பெரியாரை. 6.15.324
இராமன் கும்பகருணனை நோக்கி இரங்கிக் கூறத் தொடங்குதல்
7723. பனிப் பட்டால் எனக் கதிர்வரப்படுவது பட்டது, அப்படை; பற்றார்
துனிப் பட்டார் எனத் துலங்கினர்இமையவர்; ‘யாவர்க்குந் தோலாதான்
இனிப் பட்டான் ‘என, வீங்கினஅரக்கரும் ஏங்கினர்; ‘இவன் அந்தோ,
தனிப் பட்டான்! ‘என, அவன் முகன்நோக்கி ஒன்று த்தனன், தனிநாதன். 6.15.325
கும்பகருணனது விருப்பத்தை வினாவுதல் (7724-7725)
7724. ஏதியோடு எதிர் பெருந்துணை இழந்தனை;எதிர் ஒருதனி நின்றாய்;
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின்,நின் உயிர் நினக்கு ஈவன்;
போதியோ? பின்றை வருதியோ?அன்று எனின் போர்புரிந்து இப்போதே
சாதியோ? உனக்கு உறுவதுசொல்லுதி, சமைவுறத் தரெிந்து அம்மா! 6.15.326
7725. ‘இழைத்த தீவினை இயற்றிலது ஆகலின்,யான் உனை இளையோனால்
அழைத்த போதினும் வந்திலை,அந்தகன் ஆணையின்வழி நின்றாய்;
பிழைத்ததால் உனக்கு அருந்திரு,நாெளாடு; பெருந்துயில் நெடுங்காலம்
உழைத்து வீடுவது ஆயினை; என் உனக்குஉறுவது ஒன்று? என்றான். 6.15.327
கும்பகருணன் கூறுகின்றான் (7726-7729)
7726. ‘மற்று எலாம் நிற்க; வாசியும்,மானமும், மறத்துறை வழுவாத
கொற்ற நீதியும், குலமுதல் தருமமும்,என்று இவை குடியாகப்
பெற்ற நுங்களால், எங்களைப் பிரிந்து,தன் பெருஞ் செவி மூக்கோடும்
அற்ற எங்கை போல் என்முகம் காட்டிநின்று ஆற்றலென் உயிர் அம்மா! 6.15.328
7727. ‘நோக்கு இழந்தனர் வானவர், எங்களால்;அவ் வகை நிலை நோக்கி,
தாக்கணங்கு அனையவள், பிறர்மனை ‘எனத் தடுத்தனென் தக்கோர் முன்
வாக்கு இழந்தது என்று அயர்வுறுவேன்செவி தன்னொடு மாற்றாரால்
மூக்கு இழந்த பின் மீளல் என்றால்,அது முடியுமோ? முடியாதாய்! 6.15.329
7728. உங்கள் தோள் தலை வாள்கொடு துணித்து,உயிர் குடித்து, எம்முன் உவந்து எய்த
நங்கை நல் நலம் கொடுக்கிய வந்த நான்,வானவர் நகை செய்ய,
செங்கை தாங்கிய சிரத்தொடும்கண்ணின்நீர் குருதியினொடு தேக்கி,
எங்கை போல் எடுத்து அழைத்து,நான் வீழ்வெனோ, இராவணன் எதிர் அம்மா! 6.15.330
7729. ‘ஒருத்தன், நீ தனி உலகு ஒருமூன்றிற்கும் ஆயினும், பழி ஓரும்
கருத்தினால் வரும் சேவகன் அல்லையோ?சேவகர் கடன் ஓராய்
செருத் திண் வாளினால் திறத்திறன்உங்களை அமர்த் துறைச் சிரம் கொய்து
பொருத்தினால் அது பொருந்துமோ?தக்கது புகன்றிலையோ? ‘என்றான். 6.15.331
கும்பகருணன் குன்றை இராமன்மேல் எறிதல்
7730. என்று, தன் நெடுஞ் சூலத்தைஇடக்கையின் மாற்றினன்; வலக்கையால்
குன்று நின்றது பேர்த்து எடுத்து, இருநிலக்குடர் கவர்ந்தனெக் கொண்டான்,
சென்று விண்ணொடு பொறியொடும்தீச்செல, சேவகன் செனி நேரே,
‘வென்று தீர்க ‘என விட்டனன்;அது வந்து பட்டது மேல் என்ன. 6.15.332
இராமன் அக்குன்றைத் துகளாக்குதல்
7731. அனைய குன்று எனும் அசனியை,யாவர்க்கும் அறிவு அரும் அரன் மேனி
புனையும் நல் நெடு நீறு எனநூறிய புரவலன், பொர என்று
நினையும் மாத்திரை ஒருகைநின்றுஒருகையில் நிமிர்கின்ற நெடுவேலை,
தினையின் மாத்திரைத் துணிபட,வரன்முறை சிந்தினன், சரம் சிந்தி. 6.15.333
இராமன் அம்பு கும்பகருணனது கவசத்தைக் கடக்க முடியாமை
7732. அண்ணல் வில் கொடுங்கால் விசைத்துஉகைத்தன, அலைகடல் வறள் ஆக
உண்ண கிற்பன, உருமையும் சுடுவன,மேருவை உருவிப் போய்
விண்ணகத்தையும் கடப்பன, பிழைப்பு இலவெய்யவன் மேல் சேர்ந்த
கண்ணுதல் பெருங் கடவுள்தன்கவசத்தைக் கடந்தில கதிர் வாளி. 6.15.334
சங்கரன் கவசத்தைச் சங்கரன் படையால் அறுத்தல்
7733. தாக்குகின்றன நுழைகில தலை;அது, தாமரைத் தடங்கண்ணான்
நோக்கி, இங்கு இது சங்கரன் கவசம் ‘என்று உணர்வுற நுனித்து உன்னி,
ஆக்கி அங்கு அவன் அடுபடைதொடுத்துவிட்டு அறுத்தனன்; அது சிந்தி
வீக்கு இழந்தது வீழ்ந்தது,வரைசுழல் விரிசுடர் வீழ்ந்து என்ன. 6.15.335
கவசமிழந்த கும்பகருணன் தண்டு கொண்டு வானரப் படையை அரைத்தல்
7734. காந்து வெஞ்சுடர்க் கவசம் அற்றுஉகுதலும், கண்தொறும் கனல்சிந்தி,
ஏந்து தன் நெடுந் தோள்புடைத்து ஆர்த்து,அங்கு ஓர் எழுமுனை வயிரப் போர்
வாய்ந்த வல்நெடுந் தண்டுகைப்பற்றினன்; வானரப்படை முற்றும்
சாந்து செய்குவன ஆம் ‘எனமுறைமுறை அரைத்தனன், தரையோடும் 6.15.336
அம்புகள் பல படவும் அடங்காது கும்பகருணன் சாரிகை திரிதல்
7735. பறப்ப ஆயிரம், படுவன ஆயிரம்,பகட்டு எழில் அகல் மார்பம்
திறப்ப ஆயிரம், திரிவனஆயிரம், சென்றுபுக்கு உருவாது
மறைப்ப ஆயிரம், வருவன ஆயிரம்,வடிக்கணை என்றாலும்,
பிறப்ப வாய் இடைத் தழெிப்பு உறத் திரிந்தனன்கறங்கு எனப் பெருஞ்சாரி. 6.15.337
கும்பகருணன் தண்டு அற வாளும்
கேடகமும் எடுத்தல்
7736. ‘தண்டு கைத் தலத்து உளது எனின்,உளதன்று தானை ‘என்று, அது சாயக்
கொண்டல் ஒத்தவன், கொடுங்கணைபத்து ஒரு தொடையினில் கோத்து எய்தான்;
கண்டம் உற்றது மற்று அது; கருங்கழல்அரக்கனும், கனன்று ஆங்கு ஓர்
மண்தலச் சுடராம் எனக்கேடகம் வாங்கினன் வாேளாடும். 6.15.338
இராமன் கும்பகருணனது தோளில் அம்பு எய்தல்
7737. வாள் எடுத்தலும், வானர வீரர்கள்மறுகினர், வழிதோறும்
தாள் எடுத்தனர், கழித்தனர்; வானவர்தலை எடுத்திலர், தாழ்ந்தார்;
‘கோள் எடுத்தது, மீள ‘என்றுத்தலும், கொற்றவன், ‘குன்று ஒத்த
தோள் எடுத்தது துணித்தி ‘என்று,ஒரு சரம் துரந்தனன், சுரர் வாழ்த்த. 6.15.339
கும்பகருணனது கை அறுதல்
7738. அலக்கண் உற்றது தீவினை; நல்வினைஆர்த்து எழுந்தது; வேர்த்துக்
கலக்கம் உற்றனர், இராக்கதர்‘கால வெங்கருங்கடல் திரைபோலும்
வலக் கை அற்றது, வாெளாடும்;கோளுடை வான மா மதி போலும்;
இலக்கை அற்றது, அவ் இலங்கைக்கும்இராவணன் தனக்கும் ‘என்று எழுந்து ஓடி. 6.15.340
கவிக்கூற்று (7739-7740)
7739. மற்றும் வீரர்கள் உளர் எனற்கு எளிது அரோ,‘மறத் தொழில் இவன் மாடு
பெற்று நீங்கினர் ஆம் ‘எனின் நல்லது;பேர் எழில் தோேளாடும்
அற்று வீழ்ந்த கை அறாத வெங்கையினால்எடுத்து அவன் ஆர்த்து ஓடி
எற்ற, வீழ்ந்தன, எயிறு இளித்துஓடின, வானரக் குலம் எல்லாம். 6.15.341
7740. வள்ளல் காத்து உடன் நிற்கவும்,வானரத் தானையை மறக் கூற்றம்
கொள்ளை கொண்டிட, பண்டையின்மும்மடி குமைக்கின்ற படிநோக்கி
‘வெள்ளம் இன்றொடும் வீந்து உறும் ‘என்பதோர் விம்மலுற்று உயிர்வெம்ப,
உள்ள கையினும் அற்றவெங்கரத்தையே அஞ்சின, உலகு எல்லாம். 6.15.342
கும்பகருணன் இராமன்மேல் ஒடுதல்
7741. மாறு வானரப் பெருங்கடல் ஓட,தன் தோள்நின்று வார்சோரி
ஆறு விண்தொடும் பிணம் சுமந்துஓட, மேல் அமரரும் இரிந்து ஓட,
கூறு கூறுபட்டு இலங்கையும்விலங்கலும் பறவையும் குலைந்து ஓட,
ஏறு சேவகன்மேல் எழுந்து ஓடினன்,மழைக் குலம் இரிந்து ஓட. 6.15.343
கும்பகருணனது மற்றொரு கையையும் இராமன் அம்பினால் துணித்துக் கடலிலிடுதல்
7742. ‘ஈற்றுக் கையையும் இக்கணத்து அரிதி ‘என்று இமையவர் தொழுது ஏத்த,
தோற்றுக் கையகன்று ஒழிந்தவன்நாள் அவை தொலையவும், தோன்றாத
கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட,நெடுங்கொற்றவன் கொலை அம்பால்,
வேற்றுக் கையையும் வேலையில்இட்டனன், வேறும் ஓர் அணை மான. 6.15.344
கடலில் கிடந்த கையின் தோற்றம் (7743-7744)
7743. சந்திரப் பெருந்தூணொடு சார்த்தியது,அதில் ஒன்றும் தவறு ஆகாது,
அந்தரத்தவர் அலைகடல் அமிழ்துஎழக் கடைவுறும் அந்நாளில்,
சுந்தரத் தடந்தோள் வளை மாசுணம்சுற்றிய தொழில் காட்ட,
மந்தரத்தையும் கடுத்தது, மற்றவன்மணியணி வயிரத் தோள். 6.15.345
7744. சிவண வண்ணவான் கருங்கடல்கொடுவந்த செயலினும், செறிதாரைச்
சுவண வண்ண வெஞ்சிறையுடைக்கடுவிசை முடுகிய தொழிலானும்,
அவண அண்ணலது ஏவலின்இயற்றிய அமைவினும் அயில் வாளி
உவண அண்ணலை ஒத்தது; மந்தரம்ஒத்தது, அவ் உயர் பொன்தோள். 6.15.346
கைகளை இழந்த கும்பகருணன் ஆரவாரித்துக்கொண்டு காலால் வானர சேனையைக் கலக்குதல்
7745. பழக்க நாள் வரு மேருவைஉள்ளுறத் தொளைத்து, ஒரு பணை ஆக்கி,
வழக்கினால் உலகு அளந்தவன் அமைத்ததுஓர் வான் குணில் வலத்து ஏந்தி,
முழக்கினால் என முழங்கு பேர்ஆர்ப்பினான், வானர முந்நீரை
உழக்கினான், தசை தோல் எலும்புஎனும் இவை குருதியொடு ஒன்றாக. 6.15.347
இராமன் கும்பகருணனுடைய வலக்காலைத் தடிதல்
7746. நிலத்தகால், கனல், புனல், எனஇவை முற்றும் நிருதனது உருவு ஆகி,
கொலத் தகாதது ஓர் வடிவுகொண்டால் என உயிர்களைக் குடிப்பானை,
சலத்த காலனை, தறுகணர்க்குஅரசனை, தருக்கினின் பெரியானை,
வலத்த காலையும், வடித்த வெங்கணையினால் தடிந்தனன் தனு வல்லான். 6.15.348
வலக்காலற்றும் கும்பகருணன் குந்திவந்து பொர வருதல்
7747. பந்தி பந்தியின் பற்குலம்மீன்குலம் பாடுபாடு உற, பாகத்து
இந்து வெள்ளெயிறு இமைத்திட,குருதியாறு ஒழுக்கல் கொண்டு எழுசெக்கர்
அந்தி வந்தனெ, அகல் நெடுவாய் விரித்து, அடி ஒன்று கடிது ஒட்டி,
குந்தி வந்தனன், நெடுநிலம்குழிபட, குரைகடல் கோத்து ஏற. 6.15.349
மற்றொரு காலையும் துணித்தல் (7748-7749)
7748. .மாறுகால் இன்றி வானுற நிமிர்ந்து,மாடு உள எலாம் வளைத்து ஏந்தி,
சூறை மாருதம் ஆம் எனச் சுழித்து,மேல் தொடர்கின்ற தொழிலானை,
ஏறு சேவகன் எரிமுகப் பகழியால்,இருநிலம் பொறை நீங்க,
வேறு காலையும் துணித்தனன்,அறத்தொடு வேதங்கள் கூத்தாட. 6.15.350
7749. கை இரண்டொடு கால்களும்துணிந்தன; கருவரை பொருவும் தன்
மெய் இரண்டு நூறாயிரம் பகழியால்வெரிந் உறத் தொளை போய,
செய்ய கண்பொழி தீச் சிகைஇருமடி சிறந்தது; தழெிப்போடு
பெய்யும் வானிடை இடியினும்பெருத்தது; வளர்ந்தது, பெருஞ்சீற்றம். 6.15.351
கும்பகருணன் காலினால் குன்றினை எடுத்து வீச இராமன் கைவிதிர்த்தல்
7750. பாதம் கைகேளாடு இழந்தவன்,படியிடை இருந்து, தன் பகுவாயால்
காதம் நீளிய மலைகளைக் கடித்துஇறுத்து எடுத்து, வெங்கனல் பொங்கி,
மீது மீதுதன் அகத்து எழு காற்றினால்விசைகொடு திசை செல்ல
ஊத ஊதப்பட்டு, உலந்தன வானரம்உருமின் வீழ் உயிர் என்ன. 6.15.352
7751. தீயினால் செய்த கண் உடையான்,நெடும் சிகையினால் திசை தீய
வேயினால் திணி வெற்பு ஒன்றுநாவினால் விசும்புற வளைத்து ஏந்தி,
பேயின் ஆர்ப்புடைப் பெருங்களம்இரிந்து எழ, பிலம் திரிந்தது போலும்
வாயினால் செல, வீசினன்;வள்ளலும் மலர்க்கரம் விதிர்ப்புற்றான் 6.15.353
கும்பகருணன் இராமனாற்றலைப் புகழ்ந்து இராவணனது அழிவுக்கு அழுங்கல்
7752. ‘ஐயன் வில்தொழிற்கு ஆயிரம்இராவணர் அமைவிலர்; அந்தோ! யான்
கையும் கால்களும் இழந்தனன்; வேறுஇனி உதவல் ஆம் துணை காணேன்;
மையல் நோய்கொடு முடிந்தவா தான்! ‘என்றும், வரம்பு இன்றி வாழ்வானுக்கு
உய்யுமாறு அரிது என்றும் தன்உள்ளத்தின் உணர்ந்து ஒரு துயருற்றான். 6.15.354
கும்பகருணன் இராமனது முகநோக்கிச் சொல்லுதல் (7753-7758)
7753. சிந்துரச் செம் பசுங்குருதிதிசைகள் தொறும் திரை ஆறா,
எந்திரத் தேர் கரி, பரி, ஆள்,ஈர்த்து ஓடப் பார்த்திருந்த
கந்தரப் பொன் கிரி ஆண்மைக்களிறு அனையான், கண்நின்ற
சுந்தரப் பொன் தோளானைமுகம் நோக்கி, இவை சொன்னான். 6.15.355
7754. ‘புக்கு அடைந்த புறவுஒன்றின் பொருட்டாகத் துலை புக்க
மைக் கடம் கார் மதயானை வாள்வேந்தன் வழி வந்தீர்!
இக்கடன்கள் உடையீர் நீர்எம் வினை தீர்த்து, உம்முடைய
கைக்கு அடைந்தான் உயிர்காக்கக் கடவீர், என்கடைக் கூட்டால். 6.15.356
7755. ‘நீதியால் வந்ததொருநெடுந் தரும நெறி அல்லால்,
சாதியால் வந்த சிறுநெறி அறியான், என் தம்பி;
ஆதியாய்! உனை அடைந்தான்;அரசர் உருக் கொண்டு அமைந்த
வேதியா! இன்னும் உனக்குஅடைக்கலம் யான் வேண்டினேன். 6.15.357
7756. ‘வெல்லுமா நினைக்கின்ற வேல்அரக்கன் ‘வேரோடும்
கல்லுமா முயல்கின்றான் இவன் ‘‘என்னும் கறு உடையான்;
ஒல்லுமாறு இயலுமேல்,உடன்பிறப்பின் பயன் ஒரான்;
கொல்லுமால், அவன் இவனை;குறிக்கோடி, கோடாதாய்! 6.15.358
7757. ‘தம்பி என நினைந்து, இரங்கித்தவிரான் அத்தகவு இல்லான்,
நம்பி! இவன்தனைக் காணின்கொல்லும்; இறை நல்கானால்;
உம்பியைத்தான், உன்னைத்தான்அனுமனைத்தான், ஒரு பொழுதும்
எம்பி பிரியானாக அருளுதி,யான் வேண்டினேன். 6.15.359
7758. “மூக்கு இலா முகம் என்றுமுனிவர்களும் அமரர்களும்
நோக்குவார் நோக்காமைநுன் கணையால் என் கழுத்தை
நீக்குவாய்; நீக்கியபின்,நெடுந்தலையைக் கருங்கடலுள்
போக்குவாய்; இது நின்னைவேண்டுகின்ற பொருள் ‘‘ என்றான் 6.15.360
இராமன் அவன் வேண்டுகோளின்படி செய்தல
7759. ‘வரம் கொண்டான்; இனி மறுத்தல்வழக்கு அன்று ‘என்று ஒரு வாளி
உரம் கொண்ட தடஞ்சிலையின்உயர் நெடுநாண் உள் கொளுவா,
சிரம் கொண்டான்; கொண்டதனைத்திண் காற்றின் கடும் படையால்,
அரம் கொண்ட கருங்கடலின்அழுவத்துள் அழுத்தினான். 6.15.361
கும்பகருணன் தலை கடலில் மூழ்குதல்
7760. மாக்கூடு படர்வேலைமறி மகரத் திரை வாங்கி,
மேக்கூடு, கிழக்கூடு,மிக்கு இரண்டு திக்கூடு
போக்கூடு தவிர்த்து, இருகண்புகையோடு புகை உயிர்க்கும்
மூக்கூடு புகப்புக்குமூழ்கியது அம் முகக் குன்றம். 6.15.362
கும்பகருணன் இறந்தமை கண்டு வானவர் முதலியோர் மகிழ்தலும் அரக்கர் இராவணனுக்கு உணர்த்த ஓடுதலும் படலத் தோற்றுவாய்
7761. ஆடினார் வானவர்கள்;அரமகளிர் அமுத இசை
பாடினார் மாதவரும்வேதியரும் பயம் தீர்ந்தார்;
கூடினார் படைத் தலைவர்கொற்றவனை; குடர் கலங்கி
ஓடினார், அடல் அரக்கர்,இராவணனுக்கு உணர்த்துவான். 6.15.363
-------------------------